ஆயிரர்-; அஞ்சலின் - (தாம்) பயப்படுதலால், ஏகுக என்று - நீங்கிச்செல்லுங்களென்று (அவனாற் சொல்லப்பட்டு), அமர்வாய் விட்டவர்- போரில் நீங்கினவர்கள், எத்தனை ஆயிரர் -; தம் குலம் மேன்மைஉம்- தங்கள்குலத்தின் பெருமையும், வெம் திறல்உம்- கொடிய வலிமையும், கெட்டவர் - அழிந்தவர், எத்தனை ஆயிரர்-? அமர் வாய்விட்டவர் என எடுத்து, போரில் வாய்திறந்து சொல்லப்பட்டவர் எனினுமாம் ; அஞ்சுபவரை அழித்தல் நீதியன் றாதலால், அப்படிபட்டவர், உயிரோடுஒடிப்போங்களென்று சொல்லி அவனால் அருளோடு விடப்பட்டனரென்க; "அரிவையர் வெஞ்சம ரஞ்சுவோர் பெருங், குரவரென்றிவர்களைக் கோறல் பாவமே"எனக் கீழ் நிரைமீட்சிச்சருக்கத்தில் வந்தது காண்க. கிரீடி என்ற வடசொல்லுக்கு-கிரீட முடையவ னென்று பொருள்; இந்திரன் அருச்சுனனைத் தன் உலகத்துக்குஅழைத்துப்போன பொழுது, அங்குத் தன் ஆசனத்தில் அருத்தாசனங் கொடுத்துஅதிலிருக்க வைத்து, முன்பு தனக்குப் பிரமதேவன் தந்தருளியிருந்ததொரு இரத்தினகிரீடத்தைச் சூட்ட, அதனைத் தரித்ததுபற்றி, அருச்சுனனுக்கு 'கிரீடி' என்று பெயர்.'எத்தனையாயிரர்' என்பது பல முறை ஒரே பொருளில் வந்ததனால், சொற்பொருட்பின்வருநிலையணி. பி-ம்: ஏகுவமென்று. (148) 11.- படுகளச்சிறப்பு. ஓரொருடம்பினிலாயிரமாயிரமுற்பலவாளிபடத் தாரைபடும்படிபொழிமுகிலொத்தனர்சமர்முனையிற்றரியார் மாரனையங்கமெரித்தருள்கண்ணுதல்வடிவமெனும்படியே பாரொருபாதிசிவந்ததுமேனிபரந்தெழுசோரியினால் |
(இ-ள்.) சமர் முனையில்- யுத்தகளத்தில், ஓர் ஓர் உடம்பினில் - (பகைவரது) உடம்புதோறும் ஆயிரம் ஆயிரம் - பல ஆயிரக்கணக்கான, உற்பலம் வாளி - கருங்குவளைமலர் போன்ற [கொல்லுந்தன்மையையுடைய] (அருச்சுனனது) அம்புகள், பட -தைத்தலால், தரியார் - (உடம்புமுழுவதும் புண்பட்டு இரத்தஞ்சொரிகிற) அப்பகைவர்கள், தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர்- நீர்ப் பெருக்கு இடைவிடாதிருக்கும்படி சொரிகிற மேகத்தைப் போன்றார்கள் ; பார்- அவ்யுத்தபூமி , மாரனை அங்கம் எரித்தருள் கண் நுதல் வடிவம் எனும்படிஏ - மன்மதனை உடம்பை யெரித்தருளிய நெருப்புக்கண்ணை நெற்றியிலுடைய சிவபிரானது திருமேனிபோல, மேனி பரந்து எழு சோரியினால் - (அப்பகைவர்) உடம்பினின்று வெளியெழுந்து பரவிய இரத்தத்தால், ஒரு பாதி சிவந்தது - (துரியோதனாதியர்சேனையுள்ள) ஒரு பாதியிடம் செந்நிறமாயிற்று; உத்பலம் என்னும் வடசொல், திரிந்தது. மன்மதனது பஞ்சபாணங்களுள் நீலோற்பலமலராகிய அம்பு கொல்லுந்தன்மையதாதலால், அது அருச்சுனனம்புக்கு உவமை கூறப்பட்டது; "முழு நீலம், கொல்லும் மதனம்பின் குணம்" என்றது காண்க. சிவபிரானது அர்த்தநாரீசுவரவடிவத்தில், சிவரூபமாகவுள்ள வலப்பக்கம் சிவந்தும், உவமை ரூபமாகவுள்ள இடப்பக்கம் கறுத்தும் இருத் |