பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்105

யென்றவன்மதலையேவுமிமையவர்தெவ்வையோட
வென்றவனேவுந்தம்மில்விசும்பினைவேய்ந்தவாலோ.

     (இ-ள்.) சென்றவன் சேனை தன்னில்-(போருக்குச்) சென்ற அருச்சுனன்
சேனையிலுள்ள, நிருபர்உம் - அரசர்களும், செரு செய்கிற்பான் நின்றவன் -
போர்செய்யும்பொருட்டு நின்ற கர்ணனது, சேனை தன்னில் நிருபரும்-, நேர்ந்த
காலை - எதிர்த்த பொழுது, என்றவன் மதலை ஏஉம் - சூரியகுமாரனது
பாணங்களும் இமையவர் தெவ்வை ஓட வென்றவன், தேவர்களுக்குப்
பகைவர்களான (நிவாதகவசர் காலகேயர் முதலிய) அசுரர்களை ஓடும்படி சயித்த
அருச்சுனனது, ஏஉம் - அம்புகளும், தம்மில் - தமக்குள் (நெருங்கி) விசும்பினை
வேய்ந்த - ஆகாயத்தை மறைத்தன; (எ - று.)

என்றவன், அவன் - பகுதிப்பொருள் விகுதி.                    (193)

103.-கர்ணனுக்கு உதவியாக வந்து அசுவத்தாமா
க்ருஷ்ணார்ச்சுனர்மேல் அம்புமழைபொழிதல்.

இரவிதன்மதலைக்காகவிமைத்தகண்விழிக்குமுன்னர்ப்
புரவியந்தாமாவென்னும்பூசுரன்றேரிற்றோன்றி
யரவணைச்செல்வன்மெய்யுமருச்சுனன்மெய்யுஞ்செக்கர்
விரவியவானமென்னவெஞ்சரம்புதைவித்தானே.

     (இ-ள்.) இரவி தன் மதலைக்கு ஆக - கர்ணனுக்கு உதவியாக, இமைத்த
கண்விழிக்கும் முன்னர்-மூடினகண் திறப்பதற்குமுன்னே[மிகவிரைவில்என்றபடி]
அம்புரவித்தாமா என்னும் பூசுரன்,-அழகிய அசுவத்தாமா என்னும் பிராமணன்,
தேரில் தோன்றி - தேர்மேல் வந்து, அரவு அணை செல்வன் மெய்உம் -
ஆதிசேஷனைச் சயனமாகவுடைய எல்லாஐசுவரியங்களுக்குந் தலைவனான
கண்ணனது உடம்பும். அருச்சுனன் மெய்உம் - அருச்சுன னுடம்பும், செக்கர்
விரவியவானம் என்ன - செம்மேகங்கள் பொருந்திய கரிய ஆகாயம் போலாம்படி,
வெம்சரம் புதைவித்தான்- கொடிய அம்புகளைத்தைக்கச்செய்தான்; (எ - று.)

     பூசுரன்- (பிரமதேஜசினாற்) பூமியில் தேவன்போல விளங்குபவன்.
செம்மேகம்பொருந்திய கருவானம்-இரத்தத்தாற்சிவந்த கரியதிருமேனிகளுக்கு 
உவமை.                                                   (194)

104.-மூன்றுகவிகள்-கடுமையாகப்பொருகையில் அருச்சுனன்
அசுவத்தாமனைமூர்ச்சிப்பிக்க, துச்சாதனன் தேரோடும்அவனைக்
கொண்டுபோதல்.

விசையனும்வெகுளுற்றந்தவேதியன்வில்லுந்தேரு
மசைவுறமுடுகியெய்தானனுமற்றிவனைவேறோர்
குசையுடைப்புரவித்தேருங்குனிவருஞ்சிலையுங்கொண்டு
நிசையினையருக்கன்போலநிலைதளர்ந்திடுவித்தானே.

     (இ-ள்.) விசையன்உம் - அருச்சுனனும்,-வெகுள் உற்று- கேபாங்கொண்டு
அந்த வேதியன் - அந்தப்பிராமணகுலத்தானாகிய அசுவத்தாமனது, வில்லும்
தேரும்-, அசைவு உற - அழிதலை