பக்கம் எண் :

106பாரதம்கன்ன பருவம்

அடையும்படி, முடுகி எய்தான் - உக்கிரமாக அம்பெய்தான்; அவன்உம் -
அசுவத்தாமனும், இவனை-அருச்சுனனை, வேறுஓர்-, குசை உடை புரவி தேர்உம் -
கடிவாளத்தையுடைய குதிரைகளைப் பூட்டிய தேரையும், குனி வரும் சிலைஉம் -
வளைதல் பொருந்திய வில்லையும், கொண்டு-,நிசையினை அருக்கன் போல -
இராத்திரியைச் சூரியன் (அழிப்பது) போல, நிலை தளர்ந்திடுவித்தான்-உறுதிநிலை
தளரச்செய்தான்; (எ-று.)                                         (195)

105.தளர்ந்தவத்தளர்ச்சிகண்டுதனஞ்சயன்றன்னைத்தேற்றிக்
கிளர்ந்தடர்புரவித்தாமாகேவலனல்லனையா
பிளந்திடிங்கிவனையென்னப்பிறைமுகப்பகிழியொன்றா
லூளம்புகத்தொடுத்தான்பாகனுரைமுடிவதன்முனம்மா.

     (இ-ள்.) தளர்ந்த அ தளர்ச்சி கண்டு - (அருச்சுனன்) நிலை தளர்ந்த
அந்தத்தளருகையைப் பார்த்து, (கண்ணன்), தனஞ்சயன் தன்னை தேற்றி-
அருச்சுனனைத்தைரியப்படுத்தி, 'ஐயா-தலைவனே! கிளர்ந்து அடர் புரவித்தாமா -
மிக்குப்போர்செய்கிற அசுவத்தாமன், கேவலன் அல்லன் - அலட்சியமாக
வெல்லத்தக்கவனல்லன்; இங்கு-இப்பொழுது, இவனை-, பிளந்திடு-
(மார்பில்அம்பெய்து) பிளப்பாயாக', என்ன - என்றுசொல்ல,-அருச்சுனன்), பாகன்
உரை முடிவதன்முன்-கண்ணன் வார்த்தை முடிவதற்குமுன்னமே, பிறைமுகம் பகழி
ஒன்றால்-  அர்த்தசந்திரபாணமொன்றினால், உளம் புக - நெஞ்சில் தைக்கும்படி,
தொடுத்தான்-எய்தான்; (எ - று.)

     அம்மா - ஈற்றசை. ஐயா - பாகன் எசமானனை அழைப்பதோர்
சொல்விழுக்காடு.                                              (196)

106.எய்தவப்பகழியொன்றாலீசன்மாமதலைமாழ்கி
வெய்துயிர்த்திரதமீதுவீழ்ந்தனன்வீழ்ந்தோன்றன்னைக்
கைதவச்செயலினான்றுச்சாதனன்கண்டுமுன்னைச்
செய்தப்பயன்போல்வந்துதேரொடுங்கொண்டுபோனான்.

     (இ-ள்.) எய்த அ பகழி ஒன்றால் - (அருச்சுனன்) எய்த
அந்தஒருபாணத்தினால், ஈசன் மா மதலை - பரமசிவனது சிறந்த குமாரனான
அசுவத்தாமா, மாழ்கி - மயங்கி வெய்து உயிர்த்து-வெப்பமாகப்
பெருமூச்சுவிட்டுக்கொண்டு, இரதம் மீது - தேரின்மேல், வீழ்ந்தனன்-, வீழ்ந்தோன்
தன்னை - விழுந்த அவனை, கைதவம்செயலினான் -
வஞ்சனைச்செய்கையையுடையவனாகிய, துச்சாதனன்-,கண்டு-, முன்னை செய் தவம்
பயன்போல் - முற்பிறப்பிற்செய்த நல்வினையின் பலன் (பிற்பிறப்பில் வந்து
உதவுவது)  போல, வந்து-(உதவியாக) வந்து, தேரொடுஉம் கொண்டு போனான் -
தேரோடும் உடன்கொண்டு சென்றான்; (எ -று.)                     (197)

107.-நான்குகவிகள் - அசுவத்தாமன் மீண்டுவந்து பொர,
சித்திரவாகனபாண்டியன் அவனோடு கடும்போர்செய்தலைக்
காட்டும்.

போனவப்புரவித்தாமாபுரிந்துபோர்தொடங்குமெல்லைச்
சேனைகணான்கினோடுஞ்சித்திரவாகனென்னு