பக்கம் எண் :

108பாரதம்கன்ன பருவம்

வல்லமையையுடைய, வலவன் மேல்உம் - சாரதிமேலும், வாம் பரி மாவின்
மேல்உம்- தாவிப் பாய்கிற குதிரைகளின்மேலும், துன்றிய கணைகள் ஏவி -
அடர்ந்தஅம்புகளை எய்து, தொடு சிலை- (கையிற்) பிடித்த வில்லை, துணித்து
வீழ்த்தான் -அறுத்துத் தள்ளினான்; அன்று - அன்றைக்கு அவன் -
அப்பாண்டியன், செய்த-,வீரம்- வீரத்தன்மையை, அரசரில் ஆர் செய்தார் -
அரசர்களுள் வேறுயார்செய்தவர்? (எ-று.)- எவரும் இல ரென்றபடி.    (199)

109.வேறொருதேர்மேற்கொண்டுவிதிதருமரபினோனுஞ்
சீறிவெங்கணைகணூறுதெரிந்தொருசிலையும்வாங்கிக்
கூறியசெஞ்சொலேடுகுறித்தெதிர்கொண்டவைகை
யாறுடையவனையஞ்சவருஞ்சமருடற்றினானே.

     (இ-ள்.) விதி தரு மரபினோன்உம் - பிரமனது குலத்தில் தோன்றிய
அசுவத்தாமனும்,- சீறி - கோபித்து, வேறு ஒரு தேர் மேற்கொண்டு - வேறொரு
தேரின்மீது ஏறி, வெம் கணைகள் நூறு தெரிந்து - கொடிய நூறு அம்புகளை
ஆராய்ந்து எடுத்துக்கொண்டு, ஒரு சிலைஉம் வாங்கி - ஒருவில்லையும் வளைத்து,
கூறியசெம் சொல் ஏடு - சொன்ன சிறந்த சொற்களை [தேவாரச்செய்யுளை]
எழுதியஏடு, குறித்து எதிர்கொண்ட - எதிர்நோக்கிச் சென்ற, வைகை ஆறு
உடையவனை -வையைநதியை (த் தனது நாட்டில்) உடைய பாண்டியனை,
அஞ்ச - அஞ்சும்படி,அரு சமர் உடற்றினான் - அரிய போரைச் செய்தான்;
(எ - று.)

     விதிமரபினோன் - பிராஹ்மணன், ஏடுஎதிர்கொண்ட வைகை
யென்பதிலடங்கிய கதை:- திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் சமணர்களை வென்று
சைவமதத்தை நிலைநிறுத்தும்பொருட்டுப் பாண்டிய நாட்டுக்குச் சென்றபொழுது,
சமணர்கள் நாயனார் முன்னிலையில் 'நாம் இருதிறத்தேமும் நமது சமய
சித்தாந்தத்தை யெழுதிய ஏட்டை ஓடுகின்ற வையையாற்றிலே இடுவோம்:
எதிர்ந்துசெல்லும் ஏடே மெய்ப்பொருளையுடையது' என்று சொல்ல, நாயனாரும்
அப்படியே செய்வோமென்று "வாழ்கவந்தணர்" என்னும் பாசுரத்தை ஏட்டில்
எழுதிஅவ்வேட்டைத் தனது கையினால் வைகைநதியில் இட, அவ்வேடு நதியிலே
எதிர்ந்து நீரைக் கிழித்துக்கொண்டு சென்ற தென்பது, கதை; எண்ணாயிரஞ்
சமணமுனிவர்கள் தனித்தனி ஒவ்வொரு வெண்பாவைப் பாடி ஏட்டிலெழுதித்
தத்தமது பீடத்தின் கீழ் வைத்துவிட்டுப் போய்விட, பாண்டியன் அவற்றை யெடுத்து
வைகையாற்றில் எறிந்துவிடும்படிஏவ, அவ்வாறு எடுத்தெறியப் பட்ட அவற்றுள்
நானூறுபாடல்கள் நீர் செல்லுமுறையிற்சென்று கடலிற்சேராமல் எதிரேறிச்சென்றன:
அவையே நாலடி நானூறு என்னும் ஒருகதையும் உண்டு.              (200)

110.அந்தணனேவையெல்லாமவனிபனவ்வவ்வம்பான்
முந்துறவிலக்கித்தங்கண்மூவகைத்தமிழும்போலச்
சிந்தையிற்குளிக்குமாறுசிலீமுகமூன்றுவிட்டான்
றந்தையைமுதுகுகண்டோன்றனயனுக்கிளைக்குமோதான்.