பக்கம் எண் :

114பாரதம்கன்ன பருவம்

    கோழி - உறையூர்; முற்காலத்து ஒருகோழி நிலமுக்கியத்தால்
யானையோடுபொருது அதனைப் போர்தொலைத்தல் கண்டு அந்நிலத்திற் செய்த
நகராதலின், கோழியென்று உறையூருக்குப் பெயராயிற்று. இதனைச்
சிலப்பதிகாரவுரையால் அறிக: (நாடுகாண்காதை-வரிகள் 247-248 உரை); இதை
இராதானியாக உடையவன், சோழன்; கீழ் 'நாகையாப் புகழான்' என்றதுபோல,
இங்கு 'சொற்கையா மனுகுலத்தோன்றல்' என்றார்.

     இதுமுதற் பதினைந்துகவிகள் - மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும் மற்றை
மூன்றும்விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.                     (211)

121.-இதுமுதல் மூன்றுகவிகள் - சோழன் அசுவத்தாமனை
இகழ்ந்து கூறியன தெரிவிக்கும்.

தேரில்மேனின்றுநீசிறுகட்செம்புகர்க்
காரின்மேல்வீரனைக்கணையிற்காய்வதே
பாரின்மேலார்கொலிப்பாதகஞ்செய்தார்
நீரின்மேலெழுத்தெனநிலையிலாண்மையாய்.

நான்குகவிகள்-ஒருதொடர்.

     (இ-ள்.) நீரின்மேல் எழுத்து என - நீரிலெழுதிய எழுத்துப் போல், நிலை
இல்- சிறிதும் நிலைபெறுதலில்லாத, ஆண்மையாய் -பராக்கிரமமுடையவனே! நீ-
,தேரின்மேல் நின்று - தேரின்மேல் இருந்துகொண்டு, சிறுகண்-சிறியகண்களையும்,
செம்புகர் - சிவந்த புள்ளிகளையுமுடைய, காரின்மேல்  - மேகம்போன்ற
யானையின்மேலிருந்த, வீரனை - வீரனாகிய பாண்டியனை, கணையின் காய்வதுஏ-
அம்பினாற் கொல்லுவது தகுதியோ? பாரின்மேல் - பூமியில். ஆர் -
(உன்னைத்தவிர) வேறுயார், இ காதகம் செய்தார் - இப்பாவத்தொழிலைச்
செய்தவர்?[எவரும் இலர்]; (எ - று.)-கொல் - அசை.

     தேரின்மேலுள்ளவன் யானைமேலுள்ளவனைப் பொருது கொல்லுதல்.
அதருமயுத்தம். கார் - உவமைவாகுபெயர். எழுத்து- எழுதப்படுவது எனச்
செய்யப்படுபொருள்விகுதிபுணர்ந்துகெட்டு விகாரப்பட்ட பெயர், பி - ம்;
எழுத்தன,                                               (212)

122.-ஆர்ப்பனமறைமொழிந்தனைவர்பாவமுந்
தீர்ப்பனவேள்விகள்செய்வதன்றியே
கூர்ப்பனபலபடைகொண்டுபோர்செயப்
பார்ப்பனமாக்களும்பாரின்வல்லரோ.

     (இ-ள்.) ஆர்ப்பன - ஆரவாரிப்பனவாகிய, மறை - வேதமந்திரங்களை,
மொழிந்து - சொல்லி, அனைவர் பாவம்உம் தீர்ப்பன - எல்லோர்தீவினைகளையும்
ஒழிப்பனவாகிய, வேள்விகள் - யாகங்களை, செய்வது அன்றிஏ-சேய்யவல்லவரே
யல்லாமல், (அதைவிட்டு),-கூர்ப்பன பல படை கொண்டு -
கூர்மையையுடையனவாகிய பல ஆயுதங்களால் போர் செய் - போர்செய்வதற்கு,
பார்ப்பனமாக்கள்உம் - பிராமணர்களும், பாரின் - பூமியில், வல்லரோ-?