பார்ப்பனமாக்கள் - பாரப்பாராகிய மனிதர் என இருபெயரொட்டு. (213) 123. | தாதையைக்கொன்றவெஞ்சாபவீரனைக் கோதைவிற்கணைகளாற்கொன்றிலாதநீ யூதைமுற்சருகுபோலோடலல்லதை மோதயிற்படைகொடுமுனையவல்லையோ. |
(இ-ள்.) தாதையை - (உன்) தந்தையாகிய துரோணனை, கொன்ற-, வெம் சாபம்வீரனை - கொடிய வில்லையுடைய திட்டத்துய்மனை, கோதை வில் கணைகளால் -நாணியையுடைய வில்லினாலெய்யப்படுகிற அம்புகளால், கொன்றிலாத -கொல்லமாட்டாத, நீ-, ஊதை முன் சருகுபோல்- பெருங்காற்றுக்குமுன்னே உலர்ந்தஇலைபோல், ஓடல் அல்லதை - ஓடிப்போவதே யல்லாமல், மோது அயில்படைகொடு-தாக்குதற்கு உரிய கூர்மையான ஆயுதங்களால், முனைய வல்லஓ -போர்செய்ய வல்லவனோ? (எ - று.)-அல்லதை. ஐ-சாரியை. (214) 124.-ஆறுகவிகள்-அசுவத்தாமனும் சோழனும் கடுமையாகப் பொருதலைக் கூறும்` என்றுசின்மொழிமொழிந்திவுளித்தாமன்மேற் துன்றுவில்வளைத்தனன்சோழபூபதி குன்றுடன்குன்றமர்குறிக்குமாறுபோற் சென்றுசென்றடுத்தனதேருந்தேருமே. |
(இ-ள்.) என்று-, சில் மொழி மொழிந்து - சிலவார்த்தைகளைச் சொல்லி, இவுளித்தாமன்மேல் - அசுவத்தாமன்மேலே, சோழபூபதி - சோழநாட்டரசன், துன்றுவில் வளைத்தனன் - வலிய வில்லை வளைத்தான்; குன்றுடன் குன்று அமர் குறிக்கும் ஆறுபோல் - மலையோடு மலை போர் தொடங்கும்விதம்போல, தேர்உம் தேர்உம் - இரண்டுதேர்களும், சென்று சென்று அடுத்தன - விரைந்துபோய் நெருங்கின; (எ-று.) (215) 125. | இருவர்செங்கரங்களுமிரண்டுகால்களு முரனுறப்பிணித்தநாணோசைவீசவும் மருவுபொற்றோளுறவலியின்வாங்கவும் விரைவுடன்வளைந்தனவில்லும்வில்லுமே. |
(இ-ள்.) இருவர் செம் கரங்கள்உம் - இவ்விருவர்களது சிவந்தகைகளாலும் இரண்டு கால்கள்உம் - இருகோடிகளிலும், உரன் உற பிணித்த - வலிமை பொருந்தப்பூட்டப்பட்ட, நாண் - நாணியின், ஓசை-ஒலி, வீசஉம் - மிகும் படியாகவும்,-மருவுபொன் தோள் உற-பொருந்திய அழகிய தோள்களிற்படும்படி, வலியின் வாங்கஉம் -வலிமையோடு(நாணியை) இழுக்கும்படியாகவும்,-விரைவுடன்- வேகத்தோடு, வில்உம்வில்உம் - இரண்டு விற்களும், வளைந்தன-; (எ - று.)- தோள் உற - தோள்வலிமைபொருந்த என்னவுமாம். (216) |