பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்117

சூரியகுலத்தவராதலால், இங்ஙனம்அபேதமாகக்கூறினார், புற- குறியதன் கீழ் ஆ,
குறுகிற்று.                                                      (219)

129.துளவணிமுடியவன்றுள்ளுகன்றினால்
விளவினையெறிந்தெனவீரவேலினால்
வளவனும்வெகுண்டுபின்மயூரவாகன
னிளவலையெறிந்தனனெவருமஞ்சவே.

     (இ - ள்.) துளவு அணி முடியவன் - திருத்துழாயை யணிந்த
திருமுடியையுடைய கண்ணன், துள்ளு கன்றினால் - துள்ளுகிற கன்றை வீசி
அதனால், விளவினை எறிந்து என - விளாமரத்தை எறிந்தாற்போல, வளவனும் -
சோழனும், பின் - பின்பு, வெகுண்டு - கோபித்து, வீரம் வேலினால் -
வீரத்தன்மையையுடைய வேலால், எவர்உம் அஞ்ச - எல்லோரும் பயப்படும்படி,
மயூர வாகனன் இளவலை - மயில்வாகனமுடைய முருகக்கடவுளது தம்பியான
அசுவத்தாமனை, எறிந்தனன்-; (எ -று.)- சிவன்மகனாதலால், 'மயூரவாகன
னிளவல்' என்றார்.                                           (220)

130.-சோழன்வேலால் அசுவத்தாமன் கலங்கிவிழ, சகுனி
முதலியவேந்தர் அவன்வருத்தம் மாற்றுதல்.

உருத்திரன்றாதுவினுற்பவித்தவக்
கருத்துடைமுனிவன்மெய்கலங்கிவீழ்தலுந்
திருத்தகுசகுனியுஞ்சிற்சில்வேந்தரும்
வருத்தமோடெடுத்தவன்வருத்தமாற்றினார்.

     (இ-ள்.) உருத்திரன் தாதுவின் - உருத்திரமூர்த்தியினது சுக்கிலத்தினால்,
உற்பவித்த - பிறந்த, கருத்து உடை-(வெல்லும்) எண்ணத்தையுடைய, அ
முனிவன் -அந்த அசுவத்தாமன், மெய்கலங்கி வீழ்தலும் - உடம்பு கலக்கமடைந்து
(மூர்ச்சித்து)விழுந்தவளவில்,-திரு தகு - செல்வம்பொருந்திய, சகுனியும்-, கில் சில்
வேந்தர்உம்,-(மற்றுஞ்) சிலசில அரசர்களும், வருத்தமோடு - மனவருத்தத்துடனே,
எடுத்து -(அவனை) எடுத்துவைத்துக்கொண்டு, அவன் வருத்தம் மாற்றினார் -
அவனதுவருத்தத்தை நீக்கினார்;(எ - று.)

     உருத்திரன் - (பகைவர்களை) அழச்செய்பவன். உத்பவித்த - உற்பவித்த;
தகரம் றகரமாயிற்று, கருத்து உடை முனிவன் - நெஞ்சம்பிளந்த முனிவனென்றுமாம்.
திரு - சூதாட்டத்திற் பிறரை வெல்வதனால் வரும் பொருள். ஆற்றினார் என்றும்
பதம்பிரிக்கலாம்.                                                 (221)

131.-நான்குகவிகள்-அசுவத்தாமனுடனே மன்னர்பலர்வந்து
சோழனுடன்பொருது அழிந்தமை கூறும்.

அவனொடுமீளவந்தபயன்றன்னொடு
கவனமான்றேருடைக்காவன்மன்னவர்
சிவனொடுமமர்பொருந்தெவ்வரென்னவே
துவனிசெய்முரசெழத்துன்றுபோர்செய்தார்.