பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்121

     முன்னிரண்டடிகள் - இகழ்ச்சிகுறிக்கும். ஆண்மை யென்றது, திரௌபதியின்
துகிலை உரிந்ததை. அச்சு - அக்ஷமென்னும் வடமொழித்திரிபு. அம்ம -
இடைச்சொல்: "அம்ம கேட்பிக்கும்" விருந்து - புதுமை; இப்பண்புப்பெயர்,
புதிதாய்வந்தவர்க்கு இடும் உணவுக்கு இருமடியாகுபெயர்.             (228)

138.இன்றோவுன்றன்சென்னிதுணித்திழிசெம்புனலிற்குளித்திடுநா
ளின்றோவழலினுற்பவித்தாளிருளாரளகமுடித்திடுநா
ளின்றோதாகங்கெடநாவுக்கிசைந்ததண்ணீர்பருகிடுநா
ளின்றோவுரைத்தவஞ்சினங்களெல்லாம்பயன்பெற்றிடுநாளே.

     (இ-ள்.) உன் தன் சென்னி துணித்து - உன் தலையை அறுத்து, இழி செம்
புனலில் - (அதனனின்று) வழிகிற இரத்தத்தில், குளித்திடும் நாள் - (யான்)
மூழ்குந்தினம். இன்றுஓ - இன்றைக்குத்தானோ? அழலின் உற்பவித்தாள் -
அக்கினியிற்பிறந்த திரௌபதி, இருள் ஆர் அளகம் - இருளையொத்த - (மிகக்கரிய)
(தனது) கூந்தன்மயிரை, முடித்திடும் நாள்-எடுத்து முடிக்குந்தினம், இன்றோ-? தாகம்
கெட - தண்ணீர்வேட்கை கெடும்படி, நாவுக்கு இசைந்த தண் நீர் -
நாக்குக்குப்பொருந்திய குளிர்ந்த நீரை, பருகிடும் நாள் - (நான் கையால் அள்ளி
எடுத்துக்) குடிக்கிற தினம் இன்றோ-? உரைத்த வஞ்சினங்கள் எல்லாம் - (நாங்கள்)
சொன்ன சபதங்களெல்லாம், பயன் பெற்றிடும் நாள்-பலனடையுந் தினம், இன்றோ-?

     திரௌபதி, துரியோதனன் துச்சாதனனைக்கொண்டு கூந்தலைப்பிடித்திழுத்துச்
சபையிற்கொணர்ந்து துகிலுரிந்துந் தன்மடிமேலுட் காரென்று சொல்லியும்
தன்னைப்பங்கப்படுத்தினபொழுது, துரியோதனாதியர் நூற்றுவரையுங் கொன்று
அவர்களிரத்தத்தில் நனைத்தாலன்றி விரித்தகூந்தலை எடுத்துமுடித்து
அலங்கரிக்கப்பதில்லையென்று சபதஞ்செய்தான், யாகசேனமகாராசன் செய்வித்த
புத்திரகாமயாகத்தில் அருச்சுனனை மணஞ்செய்து கொள்ளும்பொருட்டுத்
தீயினின்றுந் திரௌபதி பிறந்தான்.                             (229)

139.வென்றேயவனிமுழுதாளும்வீரோதயனின்றம்முனையுங்
கொன்றேநாளையமரரெதிர்கொள்ளக்கடிதின்வரவிடுவ
னின்றேநீபோயிடம்பிடிப்பாயெண்ணாவெண்ணமெண்ணிமன்றி
லன்றேகலகம்விளைத்தென்றுமழியாவரசையழித்தோனே.

     (இ-ள்.) எண்ணா எண்ணம் எண்ணி-நினைக்கத்தகாத நினைப்பை
நினைத்து,மன்றில் - சபையிலே, அன்று - அந்நாளில், கலகம் விளைத்து -
சூதுபோரைஉண்டாக்கி, என்றும் அழியா அரசை - எந்நாளும் அழியாத (எங்கள்)
அரசாட்சியை, அழித்தோனே - அழியச்செய்தவனே! வென்று - வெற்றிகொண்டு,
அவனி முழுது - பூமி முழுவதையும், ஆளும்-அரசாளுகிற, வீர உதயன்-
வீரத்தன்மையின்  தோற்றத்தையுடையவனாகிய, நின் தம்முனைஉம் - உனது
தமையனான துரியோதனனையும், நாளைஏ - நாளைக்கே, கொன்று-, அமரர் எதிர்
கொள்ள - தேவர்கள் எதிர்கொண்டு அழைத்துப்போம்படி, கடிதின-