பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்123

தான் - விலக்கினான்; மீள - திரும்பவும், ஓர்ஒருவர்க்கு ஓர்ஓர் பகழி-
ஒவ்வொருவருக்கு ஒவ்வொருஅம்பு விழுக்காடு, தனு வாங்கி- வில்லைவளைத்து,
(ஒன்பது அம்புகளை), விடுத்தான் - விட்டான்; அவர்உம் - அவ்வொன்பதுபேரும்,
இரதம்மிசை வீழ்ந்தார் - தேரின்  மேல் இறந்து விழுந்தார்கள்; வீழ்ந்த வீரரை -
(அங்ஙனம்) விழுந்த வீரர்களை, அகல் வானத்து - பரந்த தேவலோகத்துள்ள,
அழகு ஆர் - அழகு நிரம்பிய, காதல் -விருப்பத்தையுடைய, அரம்பையர் -
தெய்வப்பெண்கள், விரைவில்-சீக்கிரத்தில், வந்து அடுத்தார் - வந்துகூடினார்;(எ-று.)

    போரில் இறந்த வீரரது உயிர்கள் உடனே வீரசுவர்க்கத்தை அடைந்தன
வென்றபடி, அரம்பை - ரம்பா; வடசொற்றிரிபு: அரம்பையென்பவள்
தெய்வமகளிர்க்குட் சிறந்தவளாதலால், அவர்களுக்கு அரம்பையரென்று பெயர்
வழங்கிற்று.                                                    (232)

142.-நான்குகவிகள் - துச்சாதனனும் வீமனும்
விற்போர்புரிதலைக்கூறும்.

உயிர்க்காருயிராந்தம்பியர்களோரொன்பதின்மர்வீமன்கைச்
செயிர்க்காய்கணையாற்சிரந்துணிந்துதேர்மேல்வீழச்சினங்கதுவிப்
பயிர்க்காமாரிமொழிந்துவருபருவப்புயல்போற்பாவனனை
மயிர்க்காறொறுமம்பினஞ்சொருகமன்னற்கிளையோன்மலைந்தானே.

     (இ-ள்.) உயிர்க்கு ஆர் உயிர் ஆம் - உயிர்க்கும் அரிய உயிராகிய (மிக
அருமையான), தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் - தம்பிமார்கள் ஒன்பதுபேர், வீமன்
கை - வீமன்கையினாலெய்த, செயிர்காய் கணையால் - வலிமையோடு கொல்லுகிற
அம்புகளால், சிரம்துணிந்து - தலை அறுபட்டு, தேர் மேல் வீழ - தேரில் இறந்து
விழுந்ததனால், சினம் கதுவி-கோபம் மூண்டு, மன்னற்கு இளையோன்-
துரியோதனன் தம்பியான துச்சாதனன், பயிர்க்கு ஆ (க) மாரி பொழிந்துவரு-பயிர்
செழிக்கும்படி மழை சொரிந்து வருகிற, பருவம் புயல் போல்-கார்காலத்து
மேகம்போல, மயிர் கால்தொறுஉம்-ஒவ்வொரு உரோமத்துவாரத்திலும், அம்பு
இனம்சொருக - பாணங்களின் கூட்டத்தைத் தைக்கும்மாறு, பாவனனை-
வாயுகுமாரனானவீமனை, மலைந்தான் - பொருதான்; (எ - று.)-பாவனன் -
பவனன் மகன்:தத்திதாந்தம். பி-ம்: சொருகி                      (233)

143.தன்மேலுரககேதனனுக்கிளையோன்றொடுத்தசரங்களெல்லாங்
கன்மேன்மேகத்துளியென்னக்காய்ந்தானவற்றைக்கடிதுதறி
மன்மற்கொண்டபுயமுறவில்வாங்கிக்கொடும்போர்வாளிபல
மென்மேலெய்தானெதிர்ப்பட்டால்விடுமோபின்னைவிறல்வீமன்.

     (இ-ள்.) விறல் வீமன், - வெற்றியையுடைய வீமன்,- காய்ந்தான் -கோபித்து,-
உரக கேதனனுக்கு இளையோன் - பாம்புக்கொடியையுடைய துரியோதனனுக்குத்
தம்பியாகிய துச்சாதனன், தன் மேல் தொடுத்த-, சரங்கள் எல்லாம் -
அம்புகளனைத்தும், கல் மேல் மேகம் துளி என்ன - கல்லின்மேல்