பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்125

லால், உவமை, மத்து - மந்த்தம் என்னும் வடமொழித் திரிபு. பி-ம்;
மத்தேயனையான்.                                       (236)

146.- ஐந்துகவிகள்-அவ்விருவரும் கதாயுத்தம்புரிந்தமை
கூறும்.

காரிற் கரிய குழறீண்டிக் கலையன் றுரிந்த கழற்காளை
பாரிற் குதித்தோ ரதிபாரப் பைம்பொற் கதையாற் பாவனன்றன்
றேரிற் புடைக்கத் தேர்சிதைந்து சிந்திற் றவனுஞ் சிலைமாற்றிப்
போரிற் சிறந்த தண்டமுடன் புவிமேற் பாய்ந்தான்புலிபோல்வான்.

     (இ-ள்.) காரின்கரிய - மேகம்போலக்கறுத்த, குழல் - (திரௌபதியின்)
கூந்தலை, தீண்டி - தொட்டு (ப்பிடித்துஇழுத்துக்கொண்டு வந்து), அன்று -
அக்காலத்தில், கலை உரிந்த - (அவள்) துகிலை அவிழ்த்த, கழல் காளை - வீரக்
கழலையுடைய வீரனாகிய துச்சாசனன், பாரில் குதித்து - (தேர் அழிந்ததனால்)
தரையிற் குதித்து, ஓர் - ஒரு, அதி பாரம்- மிக்க கனம்பொருந்திய பைம்பொன்
கதையால் பசும் பொன்னாலாகிய கதாயுதத்தால், பாவனன் தன்தேரில் புடைக்க -
வாயுகுமரானான வீமனது தேர்மேல் அடிக்க, தேர்சிதைந்து சிந்திற்று-அத்தேர்
அழிந்துசிதறியது; புலி போல்வான் - புலியையொக்கும் வீரனாகிய, அவன்உம்-
வீமனும், சிலை மாற்றி-வில்லை விட்டு, போரிற் சிறந்த தண்டமுடன் - போரில்
(தனக்குச்) சிறந்த கதாயுதத்துடனே, புவி மேல் பாய்ந்தான் - பூமியிற்குதித்தான்;
(எ -று.)-புவி என்பது - வடமொழியால் ஏழாம்வேற்றுமை.            (237)

வேறு.

147.இருவ ரும்புயங் களினப்பி யொத்தின ரிகல்பு ரிந்துதண்
                            டிறுகப்பி டித்தனர்,
மருவி யொன்றொடொன் றனல்கக்க மொத்தினர்வலமி
                  டங்கொண்மண் டலமுற்பயிற்றின,
ரருகு சென்றுசென்றடிவைத்த டுத்தன ரகல நின்றுநின்
                       றொரிமைப்பின் முட்டினர்.
திருகுவெஞ்சினத் திடியொத்து ரப்பினர் திசையின்
                    மண்டிபக் கிரிசத்தமிட்டவே.

     (இ-ள்.) இருவர்உம் - வீமனும் துச்சாதனனும், புயங்களின்- தோள்களில்,
அப்பி ஒத்தினர் - நன்றாகத் தட்டினார்கள்; இகல் புரிந்து - பராக்கிரமத்தை
மேற்கொண்டு, தண்டு-கதையை, இறுக பிடித்தனர் - அழுந்தப் பிடித்தார்கள்;
ஒன்றொடு ஒன்று மருவி - ஒன்றோடொன்று சேர்ந்து, அனல்கக்க -
நெருப்புப்பொறியைச்சிந்தும்படி, மொத்தினர் - தாக்கினார்கள்; வலம் இடம் கொள்
மண்டலம் - வலசாரியும் இடசாரியுமாக மண்டலகதியை, முன் பயிற்றினர் -
முன்னேபழக்கினார்கள்; அருகு சென்று சென்று - கிட்டப்போய்ப் போய், அடி
வைத்து -கால்களை வைத்துக்கொண்டு, அடுத்தனர் - நெருங்கினார்கள் அகல
நின்று நின்று -தூரத்திலே நின்று நின்று, ஒர் இமைப்பின் முட்டினர் - 
ஒருநொடிப்பொழுதுள்ளேநெருங்கினார்கள்; திருகு வெம் சினத்து மாறுபடுகிற
கொடிய கோபத்தால், இடி ஒத்துஉரப்பினர் - இடிபோல அதட்டினார்கள்;
(அவ்வதிர்ச்சியால்), திசையில் மண்டு -(எட்டுத்)திக்குகளிலும் பொருந்திய,