இபம் கிரி - மலைபோன்ற (அஷ்ட) திக்கஜங்கள், சத்தம்இட்ட - வீரிட்டன; (எ- று.)-;கிரிசிந்தியிட்டவே' என்ற பாடம் சந்தத்துக்கு மாறுபடும். இதுமுதற் பத்துக்கவிகள்-பெரும்பாலும் ஒன்று ஐந்தாஞ்சீர்கள் புளிமாச்சீர்களும்,இரண்டு நான்கு ஆறு எட்டாஞ்சீர்கள் கூவிளச்சீர்களும், மூன்று ஏழாஞ்சீர்கள் -புளிமாங்கய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள்,' தனன தந்தன தனதத்ததத்தன தனன தந்தன தனதத்த தத்தன' என இவற்றிற்குச்சந்தக்குழிப்புக் காண்க. (238) 148. | வெகுளிகொண்டுகொண்டெதிர்கொக்கரித்தனர் விசை யுடன்கிளர்ந்துயரக்குதித்தன, ருகவைவிஞ்சவெங்கதையைச்சுழற்றினருயர்விசும்பெறித் தொருகைப்பிடித்தனர,் முகமலர்ந்துநின்றதிரச்சிரித்தனர்முதிரவஞ்சினம்பல கட்டுரைத்தனர், மகிபர்கண்டகண்டவர்சித்தமுட்கிடவரையிரண்டு வெஞ்சமர்கற்பதொக்கவே. |
(இ-ள்.) மகிபர் கண்ட கண்டவர் - பார்த்த பார்த்த அரசர்களெல்லாம், சித்தம்உட்கிட-மனந்திடுக்கிடும்படி, வரை இரண்டு - இரண்டு மலைகள், வெம் சமர்கற்பது ஒக்க-கொடிய போரைப் பழகுவதை ஒக்கும்படி, (இருவரும்) வெகுளி கொண்டு கொண்டு - கோபத்தை மிகுதியாகக் கொண்டு, எதிர் கொக்கரித்தனர் - எதிரேகர்ச்சித்தார்கள்; விசையுடன் - வேகத்தோடு, உயர கிளர்ந்து குதித்தனர் - மேலே எழும்பிக் குதித்தார்கள்; உகவை விஞ்ச - களிப்புமிக, வெம் கதையை சுழற்றினர் - கொடிய கதாயுதத்தைச்சுழற்றி, உயர்விசும்பு எறிந்து - உயர்ந்த ஆகாயத்தில் வீசி, ஒரு கை பிடித்தனர்-ஒருகையால் (மீளவும்) ஏந்திப்பிடித்தார்கள்; முகம் மலர்ந்து நின்று - முகமலர்ச்சிபெற்று நின்று, அதிர - அதிரும்படி, சிரித்தனர்- சிரித்தார்கள்; முதிர - மிகுதியாக, வஞ்சினம் பல - பல சபதங்களை, கட்டுஉரைத்தனர்-உறுதியாகச் சொன்னார்கள்; (எ-று.) உகத்தலுக்கும், முகமலர்தலுக்குங்காரணம் - ஒத்த வீரனோடு போர்நேர்ந்தமை, ஒருவர் செய்வதைமற்றவருஞ் செய்வதால், 'கற்பதொக்க' என்றார். பி-ம்: விசையுடன் சினந்து. (239) 149. | இகலிவெங்கொடுங்கதையொத்துமொத்தொலி யிடியின் வெங்கொடுங்குரலொத்தொலித்தன, மகிதலம்பிளந்தசர்ப்பவர்க்கமும்வயிறழன்றுநஞ்சுகள் கக்கியிட்டன, திகிரியந்தடங்கிரிபக்குநெக்கதுசெவிடுகொண்டயர்ந்தது திக்கயக்குல, முகடுவிண்டதண்டமுமப்புறத்துற முகில்களும் பெருங்குகைபுக்கொளித்தவே. |
(இ-ள்.) இகலி - (இருவரும்) பகைத்து, வெம் கொடு கதை - மிகவுங் கொடியகதாயுதத்தால், ஒத்து மொத்து ஒலி - ஒருங்கே தாக்குதலினாலுண்டாகிற ஓசை,இடியின் வெம்கொடுகுரல்ஒத்து - மிகவும் கொடிய இடியின் முழக்கத்தைப் போன்று,ஒலித்தன-; (அதனால்), மகி தலம் பிளந்தது - பூமியிடம் பிளவுபட்டது; சர்ப்பவர்க்கம்உம் - (பாதாளத்திலுள்ள) பாம்புக்கூட்டங்களும், வயிறு அழன்று - (அச்சத்தால்) வயிறு வெதும்பி நஞ்சுகள் கக்கியிட்டன - விஷங்களை வெளியிற் கக்கின; அம் திகிரி தட கிரி - அழகிய |