பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்127

பெரிய சக்கரவாளமலை, பக்கு நெக்கது - பிளவுபட்டுச்சிதைந்தது, திக் கயம்
குலம் -திக்கஜங்களின் கூட்டம், செவிடு கொண்டு அயர்ந்தது - செவிடாகித்
தளர்ந்தது;அப்புறத்து அண்டம்உம் உற - (இவ்வண்டத்துக்கு) அப்பாலுள்ள
அண்டங்களுமுட்பட, முகடு விண்டது - மேல்முகடு பிளந்தது; முகில்உம் -
மேகங்களும்,  பெருகுகை புக்கு ஒளித்த - (அஞ்சிப்) பெரிய மலைக்குகைளிற்
போய் மறைந்தன;(எ- று.)-வெங்கொடு - ஒருபொருட்பன்மொழி.  திகிரியங்கிரி.
அம் -சாரியையாகவுமாம். அப்புறத்து அண்டம் - பகிரண்டம்.        (240)

150.விழிகளுஞ்சிவந்ததனநெற்றியிற்பொறி வெயர்வுவந்தரும்
                           பினவிப்பிமுத்தென,
மொழிகளுங்கிளம்பினநெட்டிடிப்பென முரிமுரிந்த
                      வண்புருவச்சிலைத்துணை,
யெழிலுடன்பரந்திறுகத்தடித்தன விமய
                 மந்தரங்களொடொத்தபொற்புய,
மழியுமங்கமென்றொருசற்றிளைத்தில
               ரமரிலன்றருங்கதையிட்டடிக்கவே.

     (இ - ள்.) விழிகள்உம் - (இருவர்) கண்களும், (கோபத்தால்), சிவந்தன-;
இப்பிமுத்து என - சிப்பியில்நின்றுந்தோன்றுகிற முத்துக்கள் போல, நெற்றியில் -
நெற்றியிலே, வெயர்வு பொறி -  வேர்வை நீர்த்துளிகள்,  வந்து அரும்பின -
வந்துதோன்றின; நெடு இடிப்புஎன - பெரிய இடிபோல, மொழிகள்உம் கிளம்பின -
வீரவாதச் சொற்களும் உண்டாயின; வண் புருவம் சிலை துணை - அழகிய
விற்போன்ற இரண்டுபுருவங்களும், முரி முரிந்த - மிக நெறிப் புற்றன; இமய
மந்தரங்ளொடு ஒத்த - இமயமலையோடும் மந்தர மலையோடுஞ் சமமான, பொன்
புயம்  - அழகிய தோள்கள், எழிலுடன் பரந்து - அழகுடனே பரவி, இறுக
தடித்தன - நன்றாகப் பருத்தன; அமரில் - போரில், அன்று - அப்பொழுது, அரு
கதை இட்டு  அடிக்க - அரிய கதாயுதத்தைக்கொண்டு அடிக்கப்படுதலால், அங்கம்
அழியும் என்று-உடம்பு சிதையு மென்று, ஒரு சற்று இளைத்திலர்-(ஒருவரும்)
மிகச்சிறிதும் இளைத்தாரில்லை;( எ- று.)-மலையரசனாதலால் இமயமும், கடலைக்
கலக்கியதாதலால் மந்தரமும் உவமை கூறப்பட்டன.                      (241)

151.- ஐந்துகவிகள் - இருவரும் பின்பு  முட்டியுத்தந்தொடங்க
வீமன் துச்சாதனனையழித்தமைகூறும்.

எதிர்மலைந்தவெஞ்சமரிப்படிக்கவரிரிதலின்றிமொய்ம்புறவுத்
                                        தரிக்கவு,
முதரநெஞ்சுரம்புயமெய்க்கழுத்தெனவுரைசெயங்கமொன்றினு
                                   முற்றுறைத்தில,
கதைகளும்பிளந்தொடிபட்டெடுத்தான்கரதலங்களுங்கருகிச்
                                       சிவந்தன,
முதிர்சினங்கொளுந்தலின்முற்றும்விட்டிவர்முரணுடன்
                         றொடங்கினர்முட்டியுத்தமே.

     (இ-ள்.) இவர் - வீமனும் துச்சாதனனும், எதிர் மலைந்த - எதிர்த்துச் செய்த,
வெம் சமர் - கொடிய யுத்தத்தில், இப்படிக்கு - இவ்வாறு, இரிதல் இன்றி -
நிலைகெடுத லில்லாமல், மொய்ம்புஉற - வலிமை பொருந்த, உத்தரிக்கஉம் -
தாக்கிப்போர்செய்யவும்,-உதரம் - வயிறும், நெஞ்சு - நெஞ்சும், உரம் - மார்பும்,
புயம் - தோள்களும், கழுத்து - கழுத்தும், என - என்று, உரை