பக்கம் எண் :

128பாரதம்கன்ன பருவம்

செய்-சொல்லப்படுகிற, மெய் அங்கம் ஒன்றின்உம் - உடம்பின் உறுப்பு ஒன்றிலும்,
உற்று உறைத்தில- (கதைகள்) போய்ப்படவில்லை, கதைகளும்-, பிளந்து ஒடிபட்டு -
பிளவுபட்டு ஒடிந்து, எடுத்தன கர தலங்கள்உம் - (அக்கதைகளை) எடுத்தனவாகிய
கைகளினிடங்களும், கருகிசிவந்தன - கறுத்துச்சிவந்துவிட்டன; இவர் - இவர்கள்,
முதிர் சினம் கொளுந்தலின் - மிகுந்த கோபம் மூண்டதனால், முற்றுஉம் விட்டு -
ஆயுதங்களையெல்லாம் ஒழித்து விட்டு, முட்டி யுத்தம் - முட்டியினாற்செய்கிற
போரை, முரணுடன் - வலிமையோடு, தொடங்கினர்-; (எ - று.)- முஷ்டியுத்தம் -
கைக்குத்துப் போர். பி-ம்: விட்டிலர்.                               (242)

152.-விரல்களைந்தையுஞ்செறியக்குவித்தொளி மிகுநகம்புதை
                          ந்திடவுட்புதைத்திரு,
கரதலங்களுஞ்சிகரப்பொருப்பிடைகரியகொண்
                    டன்மண்டுருமொத்திடித்திட,
வருளுடன்சிறந்தறனுற்ற கொற்றவனனு
                    சனுந்தயங்குரகத்தனிக்கொடி,
நிருபர்தம்பெருந்தகைமுற்கனிட்டனுநினைவுடன்கலந்தெதிர்
                               குத்தியிட்டபின்.

இதுமுதல் நான்கு கவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) அருளுடன் கருணையுடனே, சிறந்த அறன்-மேலான தருமமும்,
உற்ற- பொருந்திய கொற்றவன் - வெற்றியையுடைய யுதிட்டிரனது, அனுசன்உம் -
உடன்பிறந்தவனாகிய வீமனும், தயங்கு - விளங்குகிற, தனி - ஒப்பற்ற, உரகம்
கொடி- பாம்புக் கொடியையுடைய, நிருபர்தம் பெருந் தகை - அரசர்களுக்கெல்லாம்
அரசனாகிய துரியோதனனது, முன் கனிட்டன்உம் - முதல் தம்பியாகிய
துச்சாதனனும்,  நினைவு உடன் கலந்து -(தாம்தாம்வெல்லவேண்டுமென்ற)
எண்ணத்துடனே (ஒருவரோடொருவர்) கைகலந்து,  விரல்கள் ஐந்தைஉம் செறிய
குவித்து - ஐந்து விரல்களையும் ஒரு சேர நெருங்கும்படி மடக்கி, ஒளி மிகு நகம்
புதைந்திட - ஒளிமிகுந்த நகம் பதியும்படி உள்புதைத்து - நான்குவிரல்களினிடையே
கட்டை விரலை வைத்து, இரு கரதலங்கள்உம் - இரண்டுகைகளி னிடங்களாலும்,
சிகரம் பொருப்பிடை - சிகரங்களையுடைய மலையிலே, கரிய கொண்டல் - கறுத்த
(நீர்கொண்ட) மேகம், மண்டு - கர்ச்சிக்கிற, உரும் ஒத்து - இடியைப் போன்று,
இடித்திட - இடிக்கும்படி , எதிர் குத்தியிட்டபின் - எதிரே குத்தின பின்பு,-
(எ - று.)-"தகர்த்து ***கலக்கி" என்க.

     சிறந்தறன் - அகரம் தொகுத்தல், அருள் அறத்திற்குக்காரணமாதலால்,
'அருளுடன் சிறந்தறனுற்ற கொற்றவன் என்றார்.                      (243)

153.அனிலன்மைந்தனென்றுரைபெற்றகொற்றவ னரசன்முந்து
                         தம்பியைமத்தகத்திடை,
கனல்கொளுந்தமுந்ததிரத்தகர்த்திருகவு
                  ணெரிந்துவண்செவியுட்கரக்கவு,
முனைசிதைந்துரம்பெறுபற்றெறிக்கவு
            மொழிகளுந்தளர்ந்தனமுற்றொளிக்கவு,
மினலினுஞ்சிவந்தொளிபெற்ற
          வற்புத விழிபிதுங்கவும்பெருகக்கலக்கியே.

     (இ-ள்.) அனிலன் மைந்தன் என்று - வாயுகுமாரனென்று, உரைபெற்ற-
பேர்பெற்ற, கொற்றவன் - வெற்றியையுடைய வீமன்.