அரசன் முந்து தம்பியை-துரியோதனனது முதல்தம்பியான துச்சாதனனை, மத்தகத்துஇடை-தலையிலே, கனல்கொளுந்த-நெருப்புப்பொறி சிந்தவும், அதிர- அதிர்ச்சியடையவும் முந்து-முன்னே, தகர்த்து - குத்தி,-இருகவுள்- இரண்டுகன்னங்களும், நெரிந்து - நொருங்கி, வண் செவிஉள் கரக்கஉம் - அழகியகாதுகள் உள்ளே மறையவும், முனை சிதைந்து - நுனி ஒடிந்து, உரம்பெறுபல்தெறிக்க உம் - வலிமைபெற்ற பற்கள் சிந்தவும், மொழிகள்உம் - சொற்களும், தளர்ந்தன - தளர்ச்சிபெற்றனவாகி, முற்றுஒளிக்கஉம் - முழுவதும் இல்லையாகி, மறையவும் மினலின்உன்-மின்னலைக்காட்டிலும், சிவந்து- செம்மையாகி, ஒளி பெற்ற - ஒளியைப்பொருந்திய, அற்புதம் விழி - வியக்கத்தகுந்த கண்கள், பிதுங்கஉம் - வெளியிற் புறப்பட்டு விடவும், பெருக கலக்கி - மிகுதியாகக் கலங்கச்செய்து, -(எ- று.)-"திருப்பி" என்க. பி-ம்: கொளுந்தவந்து, ஒளிமிக்க. (244) 154. | பதயுகங்களங்குலிதொட்டுறுப்புளபலவுமென்புடன்றசை பற்றுவிட்டற, விதவிதம்படும்புடைபட்டிடிப்புறவிசிநரம்புசந்துகளிற் றெறித்திட, மதுகையந்தடம்புயவெற்பறப்பலவரையுடன்பொருந்திய நற்கழுத்தற, முதுகிலுங்கவின்பெறவுற்பவித்தெனமுகனையும்புறந்திரு கத்திருப்பியே. |
(இ-ள்.) பத யுகங்கள் இரண்டு கால்களும், அங்குலி - விரல்களும், தொட்டு -தொடங்கி, உறுப்பு உள பலஉம்-உள்ள பல அவயவங்களும், என்புடன் தசை பற்றுவிட்டு்- எலும்போடு சதைக்கு உள்ள சம்பந்த மொழிந்து, அற- அழியவும்,-வித விதம்படும் புடை பட்டு - பலவகைப்பட்ட குத்துப்பட்டு, இடிப்பு உற இடிபடுதலால், விசிநரம்பு -கட்டுப்பட்ட நரம்பு, சந்துகளில்தெறித்திட - சந்துகளிலே சிந்திவிடவும்,-மதுகை - வலிமையையுடைய, அம் - அழகிய, தட - பெரிய, புயம் வெற்பு -மலைகள்போன்ற தோள்கள், அற - அறுபடவும்-பல வரையுடன் பொருந்திய - பலஇரேகைகளோடு கூடின, நல் கழுத்து - அழகிய கழுத்தும், அற - அறுபடவும்,(முட்டியினாற்குத்தியபின்), முதுகிலும் கவின்பெற உற்பவித்து என - (முகம்)பின்புறத்திலும் அழகுபொருந்தத் தோன்றினாற்போல, முகனைஉம் - முகத்தையும்,புறம்திருக - பின்னே திரும்பும்படி, திருப்பி-, (எ - று.)- "பற்றியிட்டு .....இழுத்து..... ஒளிசிறந்தனன்" எனமுடியும். நல்கழுத்து - உத்தமவிலக்கணமைந்த கழுத்து என்றுமாம். (245) 155.- | மயிரைவன்கரங்கொடுறப்பிடித்தெதிர் வரவிழுந்திடும்படி பற்றியிட்டுட, லயிர்படுங்கடுந்தரையிற்றுகட்பட வடியிரண்டினுஞ் சரியத்துகைத்தெழு, செயிருடன்பெருந்தொடைதொட்டிழுத்தணிதிகழுரம் பகுந்தவுணக்குலத்திறை, யுயிர்கவர்ந்தசிங்கமொடொப்புறத்தனதொளிசிறந்தனன் கடிதுக்கிரத்தொடே. |
(இ-ள்.) கடிது உக்கிரத்தொடு - மிகுதியான கோபத்தோடு மயிரை-, வல் கரம்கொடு உற பிடித்து - வலிய கைகளால் உறுதியாகப் பிடித்து, எதிர் வர விழுந்திடும்படி - எதிரிலே பொருந்த விழும்படி, பற்றி இட்டு - இழுத்துத்தள்ளி, உடல் - உடம்பை, அயிர் |