பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்13

     (இ-ள்.) அடலில் - பொருதலிலும், வலிமையில் - பலத்திலும்,
விரைவினில் -வேகத்திலும், உயர்வன - மிகுந்தவையும்,- அகிலபுவனம்உம் -
எல்லாவுலகங்களிலும், நொடியினில் - ஒருமாத்திரைப் பொழுதிலே, வருவன -
(சென்றுதிரிந்து) வரத்தக்கவையும்,- பொடியின் - (பூமியினின்று எழுப்பப்படுகிற)
புழுதிகளினால், மிசை வெளி - மேலுள்ள ஆகாயவெளியெல்லாம், துகள் தர -
புழுதிமயமாம்படி, விடுவன - (அப்புழுதிகளைக்) கிளப்பிவிடுபவையும்,- புணரியிடை
- கடலிலே, அலை - அலைகின்ற, அலையொடு - அலைவரிசைகளோடு,
பொருவன - ஒத்திருப்பவையும்,- விடவி படு - மரம்போல அடர்ந்திருக்கின்ற,
படை- சேனை, மடிதர - அழியும்படி, நிமிர்வன - கம்பீரமாகச்செல்பவையும்,-
விரியும் -மலர்ந்த, நறு - வாசனைவீசுகின்ற, மலர் - பூக்கள்போல, கமழ் -
நல்லவாசனைவீசுகின்ற, முகம் உயிரன - முகத்தினின்று வருகின்ற
சுவாசத்தையுடையவையும்,-படியில் - பூமியில் ஒரு படி நிலை அறு - ஒரே
தன்மையாக நிலைத்தலில்லாத,கதியன - (பலவகை) நடையையுடையவையுமாகிய,
பரிகள் - குதிரைகள்,- பவனம்என - காற்றுப்போல, நனி - மிகுதியாய்,
பரவின - பரந்து சென்றன;(எ -று.)

     இப்பாட்டிலுள்ள விசேஷணங்களெல்லாம் - உபமேயமாகிய குதிரைக்கும்,
உபமானமாகிய காற்றுக்கும் பொது. காற்றுக்குச் சேரும்பொழுது, புணரியிடை
அலைஅலையொடு பொருவன - கடலில் அலைகின்ற அலைகளோடு
பொருந்துவனஎன்றும், விடவி படு படை மடிதர நிமிர்வன - மரங்களின்
அடர்ந்த தொகுதிசாயும்படி வீசுவன என்றும், விரியும் நறு மலர் கமழ் முகம்
உயிரன -(கந்தவகனாதலால்) மலர்ந்த நல்ல மலர்களின் மணம் வீசுகின்ற
முன்காற்றையுடையன என்றும், ஒரு படியில் ஒருபடி நிலை அறு கதியன -
(சதாகதியாதலால்) பூமியில் ஒருவகை நிலையில்லாத சஞ்சாரத்தையுடையனஎன்றும்
பொருள். சிலேடையை அங்கமாகக்கொண்டு வந்த உவமையணி. விடவி =விடபீ:
வடமொழி: விடபம் - மரக்கிளை. உயர்ந்தசாதி யசுவங்களின் சுவாசத்தில் நல்ல
மணம் வீசும். பி - ம்: அடல்கொள், வெளி புதைதரவிடுவன. மிடலிலடுபடை.
                                                           (22)

23.- காலாள் வருணனை.

அரியவிலையனவணிகலனடையவு மறலின்முழுகினவரு
                               நவமணியென,
வரிவின்முதலியபலபடைகளுமுடல்வலியசெலபுறுபவன
                                 சகுலமென,
நெரியவருவனவகைபடுமிடலணி நிமிரவெழுவனநிரைகெழு
                                திரையென,
விரிவினளவறுசலநிதிநிகரென வெகுளிமிகுகதிகடுகினர்
                                  விருதரே.

     (இ-ள்.) அரிய விலையன - (மதித்தற்கு) அருமையான [மிக்க]
விலையையுடையவையாகிய, அணி கலன் அடையஉம் - (தாம்) அணிந்துள்ள
ஆபரணங்க ளெல்லாம், அறலின் முழுகின - நீரிற் பொருந்திய, அரு நவமணி
என- (கிடைப்பதற்கு) அரிய நவரத்தினம்போ லிருப்பவும்,- வரி வில்முதலிய -
கட்டமைந்த வில் முதலான, பல படைகள்உம் - பலவகை ஆயுதங்களும், உடல்
வலிய செலவு உறு - உடம்பினால் வலிந்துசெல்லுதல் பொருந்திய, பவனச