படும் கடு தரையில் - மணல்கள் பொருந்திய வலிய பூமியிலே, துகள் பட - புழுதி படும்படி, அடி இரண்டின்உம் - இரண்டு கால்களாலும், சரிய துகைத்து - அழுந்த மிதித்து, எழு செயிருடன் - உண்டாகிற கோபாவேசத்துடனே, பெரு தொடை தொட்டு இழுத்து-பெரிய தொடைகளைப் பிடித்து இழுத்து, அணி திகழ்உரம் பகுந்து-அழுகு விளங்குகிற மார்பைப்பிளந்து, அவுணர் குலத்து இறை- அசுரர்கூட்டத்துக்குத்தலைவனான இரணியனது, உயிர் - உயிரை, கவர்ந்த - கொள்ளைகொண்ட,சிங்கமொடு - நரசிங்கமூர்த்தியோடு, ஒப்பு உற -ஒக்கும்படி, தனது ஒளி சிறந்தனன் -தன்னுடைய ஒளி மிகுந்தான்; (எ- று.)-பி-ம்: மயிர்கரங்கள் கொண்டிறுகப்பிடித்து. (246) 156.- துச்சாதனன்குருதிப்புனலில் வீமன் நீராடுதல். உகிரெனும்பெரும்பெயர்பெற்றசொட்டைகளுருவியெங்கணும் புதைபட்டுரத்தலம், வகிரவுங்கொடுங்குடர்வட்டமற்றுகுவயிறுதொங்க வுங்கிழிவித்தபிற்செறி, துகிருடைந்தசெம்பவரொத்தநெட்டுடல்சொரி தருஞ்செழுங்குருதிப்பெருக்கிடை, பகிரதன்றருங்கடவுட்றைப்புனல்படியுமும்பர்தம்பரிசிற் குளிக்கவே. |
இதுவும்மேற்கவியும் - ஒருதொடர். (இ-ள்.) உகிர் எனும் பெரு பெயர் பெற்ற-நகமென்னும் பெரிய பெயரைப் பெற்ற, சொட்டைகள் - ஆயுதங்கள், உருவி - ஊடுருவி, எங்கண்உம் -(உடம்பு) முழுவதும், புதைபட்டு - அழுந்துதலால், உரம் தலம் வகிரஉம் - மார்பினிடம் பிளவுபடவும்,-கொடு குடர்வட்டம் அற்று - கொடிய குடலின் சுற்று அறுபட்டு, உகுவயிறு தொங்கஉம் - விழுகிற வயிறு தொங்கும்படியாகவும், கிழிவித்தபின்- கிழியச்செய்தபின்பு, செறி துகிர் உடைந்த செம்பவர் ஒத்த - சிறந்த பவழம் பிளந்த இடத்துள்ள சிவந்த நிறத்தைப் போன்ற, நெடு உடல் சொரி தரும் செழு குருதி பெருக்கிடை-பெரிய உடம்பினின்று வழிகிற செழுமையான இரத்த வெள்ளத்தில், பகிர தன் தரும்கடவுள்துறை புனல் - பகீரதனாற் (பூலோகத்துக்குக்) கொணரப்பட்ட தெய்வத்தன்மையையுடைய ஆகாசகங்காநதியின் நீர்த்துறையில், படியும் - நீராடுகிற, உம்பர்தம் பரிசின் - தேவர்களின் தன்மைபோல, குளிக்க - (அருவருப்பில்லாமல் மனமகிச்சியோடு விரும்பி) நீராடுமாறு,- (எ - று.)- "தருமனுக்கிளையோன்... ஏற்றுதலும்" என்க. பி-ம்: துகிர்பரந்த. பகீரதன் - சூரியகுலத்துப் பேர்பெற்றற ஓர் அரசன்; இவன், கபிலமகாமுனிவரதுகோபத்தீக்கு இரையாய்ச் சாம்பரான தமது மூதாதையராகியசகரபுத்திராறுபதினாயிரவரையும் நற்கதிபெறச்செய்யும் பொருட்டுப் பலவாயிரம் வருஷகாலம் பெருந்தவஞ்செய்து தேவலோகத்துஉள்ள கங்காநதியைப் பூமிக்குக் கொணர்ந்து அங்கிருந்து பாதாளத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் அதன்நீரினால் அவர்கள் சாம்பலை நனைத்தானென்பது, கதை. (247) |