பொன்னசலம்போலும்புனைபொற்கொடிநெடுந்தேர் கன்னனெதிருன்றினான்காயுங்கனல்போல்வான். |
(இ-ள்.) (என்றுசொல்லி), காயும் கனல் போல்வான் - கொதிக்கிற நெருப்புப்போன்ற கோபமுள்ளவனாகிய, பொன் அசலம் போலும் - பொன் மலையாகியமேருபோன்ற, புனை - அழகிய, பொன் - பொன்னாலாகிய, கொடி நெடுதேர் - கொடியையுடைய பெரியதேரையுடைய, கன்னன்-,-முன்னம்-முன்னே, அமரில் - போரில், முதுகுஇட்ட - புறங்கொடுத்த, மன்னரைஉம் - அரசர்களையும், மன்னவர்கள் மன்னனைஉம் - இராசராசனான துரியோதனனையும், வல் பேர் அணிஆக்கி - வலிய பெரிய படையாக வகுத்து, எதிர் ஊன்றினான் - எதிர்த்துச் சென்றான்; (எ - று.) (257) 167.-த்ருஷ்டத்யும்நனும் தம்பக்கத்தவரை அணிவகுத்து எதிரே செல்லுதல். சேனாபதியானதேர்த்துருபதேயனும்வான் மீனாமெனப்பரந்தவேந்தருடனேதனக்குத் தானாண்மைக்கொப்பாந்தருமனையுஞ்சேனையையு மாநாகமுட்கவகுத்தாங்கெதிர்நடந்தான். |
(இ-ள்.) சேனா பதி ஆன - (பாண்டவ) சேனைத்தலைவனான, தேர் துருபதேயன்உம் - தேரையுடைய துருபதாராஜகுமாரனான திட்டத்துய்மனும், ஆங்கு- அப்பொழுது, வான் மீன் ஆம் என பரந்த - ஆகாயத்தில் விளங்குகிற நட்சத்திரங்கள்போலப்பரவிய, வேந்தருடனே - அரசர்களோடு, தனக்கு தான் ஆண்மைக்கு ஒப்பு ஆம் - பராக்கிரமத்தில் தனக்குத் தானே உவமையாகிய தருமனைஉம் - உதிட்டிரனையும், சேனையையும்-, மா நாகம் உட்க - (உலகத்தைத் தாங்குகிற) மகாநாகங்களும் (பாரமிகுதியால்) அஞ்சும்படி, வகுத்து - படைவகுத்து, எதிர் நடந்தான் - எதிரே சென்றான்; (எ-று.)-மின்னுவது மீன் எனக் கரணப்பெயர். (258) 168.-பறையோசைமிகுதியும் ஆபரணங்களினொளி மிகுதியும், பொன்னார்முரசமுதற்போர்வெம்பணையாலும் வின்னாணொலியாலும்விண்ணோர்செவிடுபடப் பன்னாமபேதப்படையொளியாலும்பலபூண் மின்னாலுங்கண்கள்வெறியோடிவிட்டனவே. |
(இ-ள்.) பொன் ஆர் - அழகுபொருந்திய, முரசம் முதல் - பேரிகை முதலான போர் வெம் பணையால்உம் - போருக்குரிய கொடிய வாச்சியங்களின் பேரொலியாலும் வில் நாண் ஒலியால்உம் - வில்லின் நாணியின் டங்காரத்தொனி மிகுதியாலும், விண்ணோர் - தேவர்களும், செவிடுபட - செவிடாய்விட,-பல் நாம பேதம் படை ஒளியால் உம் - பலவகைப்பட்ட பெயர்களையுடைய ஆயுதங்களின் ஒளியினாலும், பல பூண் மின்னால்உம் - பலவகை ஆபரணங்களின் ஒளியாலும், கண்கள் வெறியோடிவிட்டன - (தேவர்கள்) கண்களுந் திகைப்படைந்துவிட்டன; (எ- று.) |