'விண்ணோர்' என்பதைக் கண்களோடுங் கூட்டுக, விண்ணுலகத்தவர் தன்மை கூறவே, மண்ணுலகத்தவர் தன்மை தானே பெறப்படும், வெறியோடி விடுதல் - ஒளிமிகுதியால் ஒளியிழத்தல். (259). 169.-ஐந்துகவிகள் - கர்ணன்மகனான விடசேனன் நகுலனுடன் பொருது அவனை மூர்ச்சித்துவிழச்செய்தலைக் கூறும். யாமினியிலெவ்வுயிர்க்குமேற்றதுயின் மாற்றுவோன் மாமதலை கோமதலைமான்றேர்விடசேன னாமமணித்தேர்மேனகுலன் மேற்சென்றுசில தாமமுனைவாளிதழற்பொறிபோற்சிந்தினனே. |
(இ-ள்.) யாமினியில் - இராத்திரியில், எ உயிர்க்குஉம் - எல்லாவுயிர்களுக்கும்.ஏற்ற - பொருந்திய, துயில் - தூக்கத்தை, மாற்றுவோன்- (தான் உதித்து)ஒழிப்பவனாகிய சூரியனது, மா மதலை - சிறந்த குமாரனான கர்ணனது, கோமதலை - தலைமையான புத்திரனாகிய, மான் தேர் விடசேனன்- குதிரைகளைப்பூட்டிய தேரையுடைய விருஷசேனனென்பவன்,-நாம மணிதேர்மேல், அச்சத்தைத்தருகிற மணிகளைக்கட்டிய தேரின்மேல், சென்று - போய், நகுலன்மேல்- , தாமம் - ஒளியையும், முனை - கூர்மையைமுயுடைய, சில வாளி - சில அம்புகளை, தழல் பொறி போல - நெருப்புப் பொறிகளைப்போல, சிந்தினன் - இறைத்தான்; (எ-று.) - யாமினி - (மூன்று) யாமங்களையுடையது எனக் காரணப் பெயர் (260) 170. | வெம்புரவித்திண்டேர்விசயற்கினையோனுஞ் செம்பதுமக்கையிற்சிலைநாணொலியெழுப்பிக் கம்பமதமால்யானைக்கன்னன்மகனேவியகூ ரம்படையவம்பாலாறுத்தறுத்துவீழ்த்தின்னே. |
(இ-ள்.) வெம் புரவி - கொடிய குதிரைகளைப் பூட்டிய, திண்தேர்-வலிய தேரையுடைய, விசயற்கு இளையோன்உம் - அருச்சுனன் தம்பியாகிய நகுலனும், செம் பதுமம் கையில் - செந்தாமரைமலர் போன்ற கையிற்பிடித்த, சிலை-வில்லினது, நாண் - நாணியின், ஒலி-தொனியை, எழுப்பி-உண்டாகச்செய்து, கம்பம் - கம்பத்திற்கட்டப்படுகிற, மதம் மால் - மதமயக்கத்தையுடைய, யானை - யானைபோன்ற, கன்னன் மகன் - (கர்ணனது) குமாரனான விடசேனன், ஏவிய - தொடுத்த, கூர்அம்பு அடைய - கூர்மையையுடைய அம்புகளையெல்லாம், அம்பால் - (தன்)அம்புகளினால், அறுத்து அறுத்து வீழ்த்தினன் - துணித்துத்துணித்துக் கீழேதள்ளினான்; (எ - று.) 171. | அண்டர்பெருமானுக்கம்பொற்கவசமுடன் குண்டலமுமீந்தோன்குமாரன்கொடுங்கணையான் மண்டுகனலருந்தவன்காண்டவமெரித்த திண்டிறலோன்றம்பிதடந்தேர்க்கால்களையழித்தான். |
(இ-ள்.) அண்டர்பெருமானுக்கு - தேவர்களுக்குத்தலைவனான இந்திரனுக்கு, அம் பொன் கவசமுடன் - அழகிய பொன்னாலாகிய கவசத்தோடு, குண்டலம்உம் - குண்டலங்களையும், ஈந்தோன் - தானஞ் |