செய்த கர்ணனது, குமரன் - குமாரனாகிய விருஷசேனன், கொடுகணையால் - (தனது) கொடுமையான அம்புகளால், மண்டு கனல் அருந்த - எரிகின்ற நெருப்பு உண்ணும்படி, வல் காண்டவம் - வலிய காண்டவவனத்தை, எரித்த - தகிக்கச்செய்த, திண் திறலோன் - வலிய பராக்கிரமத்தையுடைய அருச்சுனனது, தம்பி - தம்பியான நகுலனுடைய, தட தேர் கால்களை - பெரிய தேரின் சக்கரங்களை, அழித்தான் - அழியச்செய்தான்; (எ-று.) (262) 172. | மற்றொருதேரேறிமருத்துவர்தம்மைந்தனுமக் கொற்றநெடுங்கச்சைக்கொடியோன்றிருமைந்தன் வெற்றிவிலோதனமும்வெஞ்சாபமுமுடனே யற்றுவிழவெய்தானவனாண்மைக்காரெதிரெ. |
(இ-ள்.) மருத்துவர் தம் மைந்தன்உம் - அசுவினீதேவர்களது மகனான நகுலனும், மற்று ஒரு தேர் ஏறி - வேறொருதேரில் ஏறிக்கொண்டு, கொற்றம் வெற்றிக்கு அடையாளமான, நெடு - நீண்ட, கச்சை கொடியோன் - கச்சையினுருவத்தை யெழுதிய கொடியையுடைய கர்ணனது, அ திரு மைந்தன் - மேன்மையான மகனாகிய அவ்விடசேனனது, வெற்றி விலோதனம்உம் - ஜயத்துக்குஅடையாளமான கொடியும், வெம் சாபம்உம் - கொடியவில்லும், உடனே அற்று விழ- விரைவிலே அறுபட்டு விழும்படி, எய்தான் - அம்பெய்தான்; அவன்ஆண்மைக்கு ஆர் எதிர் - அந்நகுலனது பராக்கிரமத்திற்கு எவர் தாம் எதிராவார்?(எ- று.)-எவரும் எதிராகாரென்றபடி, மருத்துவர் - மருந்தை அறிந்தவர்: வைத்தியர் என்றபடி; இவர், தேவ வைத்தியர், கச்சை-கஷ்யா: யானையின் வயிற்றிற்கட்டுங் கயிறு. (263) 173. | மீண்டவனும்வேறொருவின்மேருவெனவாங்கிப் பாண்டவனைவீழும்படியெய்தான்வீழ்ந்தோனை மூண்டவனற்செங்கண்முரண்வீமன்கொண்டேகக் காண்டவநீறாக்கினான்கண்டானவன்போரே. |
(இ-ள்.) அவன்உம் - விடசேனனும், மீண்டு - மீளவும், வேறு ஒரு வில்- மற்றொரு வில்லை, மேரு என - மேருமலையைப்போல, வாங்கி,- எடுத்து வளைத்து,பாண்டவனை - நகுலனை, வீழும்படி-(மூர்ச்சித்துக்கீழே) விழும்படி, எய்தான் -அம்பெய்தான்; வீழ்ந்தோனை - (அங்ஙனம்) விழுந்த நகுலனை, அனல் மூண்ட -நெருப்புப்பொறி எழும்பப்பெற்ற, செம் கண் - (கோபத்தாற்) சிவந்த கண்களையும,முரண் - வலிமையையு முடைய, வீமன்-, கொண்டு ஏக - எடுத்துக் காண்டவவனத்தைச் சாம்பலாக்கின அருச்சுனன், அவன் போர் - அவ்விடசேனனது போரை, கண்டான்; (எ - று.)- பாண்டவன்- பொதுப்பெயர் இங்குச் சிறப்பாய் நின்றது. (264) |