(இ-ள்.) அருச்சுனன் சரத்தினால் - அருச்சுனனது பாணங்களால், தனயன் - தன்மகனான விடசேனன், களத்து - போர்க்களத்தில், சாய்ந்தனன் - இறந்துவீழ்ந்தான், என்று-, அவன் தந்த வேந்தன்உம் - அவனைப் பெற்ற அரசனான கர்ணனும், கருத்து அழிந்து - மனஞ் சிதைந்து, தன் தேர்மிசை வீழ்ந்தனன் - தனது தேரில் மூர்ச்சித்துவிழுந்தான்; அவன் பொன் தேர் ஊர்ந்த - அவனது அழகிய தேரை ஓட்டுகிற, சல்லியன்-, பல் பல உரைகளால்- பலபலவார்த்தைகளினால், தேற்றினன்-(அவனைச்) சமாதானப்படுத்தினான்; அ எல்லை - அப்பொழுது, பரித்தாமன் - அசுவத்தாமா, பாந்தள் அம் கொடி - அழகிய பாம்புக்கொடியையுடைய, பார்த்திவன் - துரியோதனன், நின்ற உழி - நின்றவிடத்துக்கு, சென்றனன் - போனான்; (எ - று.)- அவற் றந்த - ஐயுருபு உயர்திணையில்தொக விகாரமாயிற்று, நின்றுழி - விகாரம். இதுமுதற் பதின்மூன்றுகவிகள் - பெரும்பாலும் முதற்சீர்மாச்சீரும், ஈற்றுச்சீர் காய்ச்சீரும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள். (269) 179.- இதுமுதல் மூன்றுகவிகள்-பலரும்இறந்தமையால் இப்போதாவது சமாதானப்பட்டுவாழ்வது உத்தமமெனத் துரியோதனனிடம் அசுவத்தாமன் கூறுதலைத் தெரிவிக்கும். தப்பருஞ்சமர்விளைத்தனிர்நீயுமத்தருமன் மைந்தனுமென்றே மெய்ப்பெரும்புகழ்புனைகுருகுலத்திடைவீடுமன்முதலான வெப்பெருந்திறற்குரவருங்கிளைஞருமேனைமன்னரும்யாரு மொப்பரும்பெருஞ்சாதுரங்கத்துடனுடன்றுயிர்மாய்ந்தாரே. |
(இ-ள்.) நீயும்-, அ தருமன் மைந்தன்உம் - அத்தருமபுத்திரனும், தப்பு அரு சமர் - ஒழிதலில்லாத போரை, விளைத்தனிர் - செய்யத்தொடங்கினீர்கள், என்றே - என்கிறகாரணத்தினாலேயே, மெய் பெரும் புகழ் - உண்மையான பெரிய கீர்த்தியை, புனை - பொருந்திய, குருகுலத்திடை - குருவம்சத்தில் தோன்றிய, வீடுமன் முதல் ஆன - பீஷ்மர் முதலாகிய, பெரு திறல் - மிக்க வல்லமையையுடைய, எ குரவர்உம் - எல்லாப் பெரியோர்களும், கிளைஞர்உம் - பந்துக்களும், ஏனை மன்னர்உம் - மற்றை அரசர்களும், யார்உம் - எல்லோரும், ஒப்பு அரு - உவமையில்லாத, பெரு - பெரிய, சாதுரங்கத்துடன்-சதுரங்கசேனையோடும், உடன்று - போர்செய்து, உயிர்மாய்ந்தார் - உயிர்நீங்கினார்;(எ- று.) 180.- | வளையிலாதனமங்கலவிழவுநல்வரம்பிலாமரபுந்தொல் விளைவிலாவரும்புலமுமுத்தீயிலாவேதியர்மனைவாழ்வுந் துளையிலாமணிமுத்துமந்தண்புனற்றுறையிலாவளநாடுங் கிளையிலாவரசியற்கையுநன்றெனக்கேட்டறிகுவதுண்டோ. |
(இ-ள்.) வளை இலாதன - சங்கினொலி யில்லாதனவாகிய, மங்கலவிழவு உம் -மங்கலச்சடங்குகளும், நல் வரம்பு இலா - நல்லொழுக்கமில்லாத, மரபுஉம் - குலமும்,தொல் விளைவு இலா-தொன்றுதொட்டுவருகிற விளைதலில்லாத, அரு புலம்உம் - |