பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்141

அரிய கழனியும், முத்தீ இலா - மூன்று அக்கினியில்லாத, வேதியர்மனை வாழ்வுஉம்
- பிராமணர்களது இல்வாழ்க்கையும், துளை இலா - துவாரமில்லாத, மணிமுத்துஉம்-
அழகிய முத்தும், அம் தண்புனல் துறை இலா - அழகிய குளிர்ந்த
நீர்த்துறையில்லாத, வளம்நாடுஉம் - அழகிய தேசமும், கிளை இலா - பந்துக்க
ளில்லாத, அரசு இயற்கைஉம் - அரசாட்சியின் தன்மையும், நன்று என -
(தனித்தனி)நல்ல தென்று, கேட்டு அறிகுவது உண்டோ-? (எ - று.)-கேட்டு
அறிவதில்லையென்றபடி.

     வளை - மற்ற மங்கலவாத்தியங்களுக்கும் உபலட்சணம். முத்தீ - ஆகவநீயம்,
காருகபத்தியம், தக்ஷிணாக்கி என்பன, புனல்துறை - ஆறு முதலியன, "ஆறில்லா
வூருக் கழகுபாழ்" என்றார், ஓளவையாரும், வளையில்லாத மங்கல விழவு
முதலியனபோலக் கிளையில்லாத அரசியற்கை நன்றன் றென்றபடி, ஆதலால்
பந்துக்களெல்லாம் இறத்தற்குக் காரணமான போரை இவ்வளவோடாவது நிறுத்த
வேண்டு மென்றான். மங்கலவிழவுஎன்பதை - உம்மைத்தொகையாகக் கொண்டு,
சங்கொலியில்லாத மங்கலகாரியமுந் திருவிழாவும் என்றும் உரைக்கலாம், மணி
முத்து- நவரத்நங்களிலொன்றாகிய முத்துமாம்.                      (271)

181.தும்பிமாபரிமாவுளதேருளசுருங்கினசுருங்காம
னும்பிமார்களிலிருந்தவர்தம்மொடுநுவலரும்பலகேள்வித்
தம்பிமாரொடுநும்முனாகியவிறற்றருமன்மாமகனோடும்
பம்பிமாநிலம்புரப்பதேகடனெனப்பார்த்திற்குரைசெய்தான்.

     (இ - ள்,) சுருங்கின - (அழிந்தவைபோகக்) குறைந்தவையாகிய, தும்பி மா -
யானைகளும், பரி மா - குதிரைகளும், உள - உள்ளன; தேர் உள - தேர்கள்
உள்ளன: நும்பிமார்களில்-உன் தம்பியருள்ளே,  சுருங்காமல் இருந்தனர்
தம்மொடுஉம் - அழியாமல் மிகுந்தவர்களுடனும், நுவல் அரு-சொல்லுதற்கு அரிய,
பல கேள்வி - பலவகைநூற்கேள்விகளையுடைய தம்பிமாரொடுஉம் - வீமன்
முதலியதருமன் தம்பிமார்களுடனும், நும் முன் ஆகிய - உங்கள் தமையனான,
விறல்தருமன் மா மகனோடுஉம் - வெற்றியையுடைய சிறந்த தருமபுத்திரனோடும்,
பம்பி -சேர்ந்து (சமாதானமாகி), மா நிலம் - பெரியபூமியை, புரப்பதுஏ -
காப்பதுவே, கடன்- முறைமையாம், என- என்று, பார்த்திவற்கு -
துரியோதனனுக்கு,உரைசெய்தான் -சொன்னான், (அசுவத்தாமன்); (எ - று.) (272)

182.-எனக்குவீரியமே பயனெனத் துரியோதனன்
மறுமொழி கூறல்.

ஆரியன்றிருமகனிவையுரைசெயவரசனுமவைகேட்டுக்
காரியம்புகல்வதுபுவியாட்சியிற்கருத்துடையவர்க்கன்றோ
தூரியங்கறங்கமரிடையுடல்விழச்சுரருலகுயிரெய்த
வீரியம்பெறலெனக்கினிபயனெனவிளம்பினன்விறல்வேலோன்.

     (இ-ள்.) ஆரியன் - துரோணாசாரியரது, திரு மகன் - சிறந்த குமாரனான
அசுவத்தாமன், இவை உரை செய - இவ்வார்த்தை