களைச் சொல்ல, விறல் வேலோன் - வெற்றியைத்தரும்வேலையுடையவனாகிய, அரசன்உம் - துரியோதனனும், அவை கேட்டு - அவ்வார்த்தைகளைச் செவியுற்று, (அவனை நோக்கி), 'காரியம் புகல்வது - (நீ) சொல்லுந்தொழில், புவி ஆட்சியில் கருத்து உடையவர்க்கு அன்றுஓ - பூமியை அரசாளுதலில் எண்ணமுடையவர்களுக்கன்றோ (செய்யத்தக்கது)? தூரியம் கறங்கு - வாச்சியங்கள் முழங்குகின்ற, அமரிடை - போர்க்களத்தில், உடல்விழ - உடம்புவிழவும், உயிர் -, சுரர் உலகு எய்த - தேவலோகத்தையடையவும் வீரியம் பெறல் - வீரத்தனத்தைப் பெறுதல், எனக்கு-, இனி, இனிமேல், பயன் - அடையப்படும் பிரயோஜனமாம்,' என- என்று, விளம்பினன் - சொன்னான்: (எ - று.) (273) 183.-துரியோதனன் அசுவத்தாமனோடு பின்பு இனியவார்த்தை கூறிக் கர்ணனைச்சோகம்மாற்றி அருச்சுனனுயிரைக் கொள்ளுமாறு கூறுதல். முனிமகன்புகல்கட்டுரைமறுத்தபின்முனிவுறாவகைபோருக் கினிமைகொண்டசொற்பலமொழிந்தவனொடுமிரப்பவருள்ளங்கைக் கனியெனுங்கொடைக்கன்னனைத்தழீஇயவன்கண்ணுகுபுனன்மாற்றிப் பனிநெடுங்குடைப்பார்த்திவனுவன்றனன்பார்த்தனதுயிர்கொள்வான். |
(இ-ள்.) பனி நெடு குடை - குளிர்ந்த பெரிய (ஒற்றைவெண்கொற்றக்) குடையையுடைய, பார்த்திவன் - துரியோதனன்,- முனிமகன் புகல் - துரோணகுமாரன் சொன்ன, கட்டுரை - உறுதி வார்த்தையை, மறுத்தபின் - தடுத்தபின்பு,-முனிவு உறா வகை- (தன்வார்த்தையைத் தடுத்தானென்று அவனுக்குக்) கோபம், உண்டாகாதபடி, போருக்கு - போர்செய்யும் பொருட்டு, இனிமை கொண்ட சொல் பல - (கேட்டற்கு) இனிப்புப் பொருந்திய பல வார்த்தைகளை, அவனொடுஉம்மொழிந்து-அவனோடு சொல்லி, இரப்பவர் உள்ளங்கைகனி எனும் - யாசகர்களுடைய அகங்கையிலுள்ள பழம் போலச் சித்தமான, கொடை - தானத்தையுடைய, கன்னனை - கர்ணனை, தழீஇ - தழுவிக்கொண்டு, அவன் கண்உகு புனல் மாற்றி - (புத்திரசோகத்தால்) அவன்கண்களினின்று பெருகுகிற நீரைத்துடைத்து, பார்த்தனது உயிர் கொள்வான்-அருச்சுனனது உயிரைக் கொள்ளும்படி,நுவன்றனன் - சொன்னான்; (எ - று.) இனி, இரப்பவருள்ளங்கைக் கனியெனும் கொடை என்பதற்கு - யாசகர்களது உள்ளங்கைக்குச் சுரங்கம்போன்ற (நிதிதருகின்ற) கொடை யென்றுமாம்; கனி - சுரங்கம். (274) 184.- இரண்டுகவிகள் - துரியோதனனும் சல்லிய அசுவத்தாமருங்கேட்கக் கர்ணன் தான் கலங்காது அருச்சுனன் தலையைக் கொய்வேனெனல். மலைகலங்கினுமாதிரங்கலங்கினுமாதிரங்களில்விண்ணோர் நிலைகலங்கினுநெடுங்கடல்கலங்கினுநிலங்கலங்கினுஞ்சேடன் றலைகலங்கினும்பேரவைமூன்றினுந்தளர்விலாதவர்கற்ற கலைகலங்கினும்போர்முகத்தென்மனங்கலங்குமோகலங்காதே. |
|