பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்143

     (இ-ள்.) மலை-,  கலங்கின்உம் - சலித்தாலும், மாதிரம் - திக்குக்கள்,
கலங்கினும்-, மாதிரங்களில் விண்ணோர் - திக்குக்களிலுள்ள தேவர்கள், நிலை
கலங்கின்உம் - (தாம் தாம் நிற்கும்) நிலை கலங்கினாலும், நெடு கடல் - பெரிய
கடல், கலங்கினும்-, நிலம் - பூமி, கலங்கினும்-, சேடன் தலை - (பூமியைத்
தாங்குகிற) ஆதிசேஷனது தலை, கலங்கினும்-, பேர் அவை மூன்றின்உம்  -
பெரியமூன்று  வகைச் சபைகளிலும்-, தளர்வு இலாதவர் - அஞ்சுத லில்லாத
புலவர்கள்,கற்ற - படித்த, கலை - கல்வி, கலங்கினும்-, என் மனம்- போர்
முகத்து -போர்க்களத்தில், கலங்கும்ஓ - சலிக்குமோ? கலங்காதே -சலியாதன்றோ?
(எ - று.)-ஈற்றேகாரம் - தேற்றம்.

     மாதிரங்களில்விண்ணோர் - அஷ்டதிக்பாலகர், தம்மினும் உயர்ந்தோர்
ஒத்தோர் தாழ்ந்தோர் என்னும் முத்திறத்தவருறைதலால், அவை மூன்றாயின;
"உயர்ந்தோரொத்தவர் தாழ்ந்தோர் மருவு மூன்றவையு மாராய்ந்து'  என்றதுங்
காண்க.கலங்காமையைவற்புறுத்தும்பொருட்டு, 'கலங்குமோ கலங்காதே' என
உடன்பாட்டுமுகத்தானும் எதிர்மறைமுகத்தானுங் கூறினார்.            (275)

185.என்மகன்றலையென்னெதிர்துணியவம்பேவியபுருகூதன்
றன்மகன்றலைதுணிப்பனிக்கணத்திலோர்சாயகந்தனிலென்று
மன்மகன்றனக்கிரதமூர்மத்திரன்மகன்றனக்குயர்வேள்வி
வின்மகன்றனக்குளமகிழ்ந்துரைத்தனன்வெயிலவன்மகனம்மா.

     (இ-ள்.)  என் மகன் தலை - என் குமாரனது தலை, என் எதிர் துணிய -
என்எதிரே அறுபடும்படி, அம்பு ஏவிய - பாணத்தைப் பிரயோகித்த, புருகூதன்தன்
மகன்- இந்திரகுமாரனான அருச்சுனனது, தலை - தலையை, ஓர் சாயகந்தனில் -
ஒருஅம்பினால், இ கணத்தில் - இந்தக்ஷணத்தில்தானே, துணிப்பன் - அறுப்பேன்,
என்று-, மன்மகன் தனக்கு - திருதராஷ்டிரராஜகுமாரனான துரியோதனனுக்கும்,
இரதம் ஊர் - (தனக்குத்) தேரோட்டுகிற, மத்திரன் மகன் தனக்கு - மத்திர ராஜ
குமாரனான சல்லியனுக்கும், உயர் வேள்வி - சிறந்த  யாகங்களுக்குரிய, வில்-வில்
வித்தையில்வல்ல, மகன் தனக்கு - அசுவத்தாமனுக்கும், உளம் மகிழ்ந்து -
மனங்களித்து, உரைத்தனன் - சொன்னான், வெயிலவன் மகன் - வெயிலையுடைய
சூரியனது மகனான கர்ணன்;(எ-று.)-பி-ம்: மத்திரமகிபதிக்கு, 'மகன்'
என்னுஞ்சொற்பிரயோகத்தை நோக்குங்கால், இப்பாடபேதம் சிறப்புடைத்தன்று. (276)

186.-பேரொலி சேனைநெருக்கம் மேலெழுதூளி இவற்றின்
வருணனை.

சுரிமுகங்களிற்பேரியங்களிலெழுதுவனியாற்பகிரண்ட
நெரியுமென்றனயஞ்சினன்சேனையினெருக்கினாலெனைத்துள்ள
கிரிகளுஞ்சரிந்திடுமெனவஞ்சினன்கிரிசனுங்கிளராழி
யரியுமஞ்சினன்றூளியாலலைகடலடையவற்றிடுமென்றே.

     (இ-ள்.) (அப்பொழுது), சுரி முகங்களில் - சுழிந்த முகத்தையுடைய
சங்குகளினின்றும், பேரியங்களில் - முரசங்களினின்றும,் எழு - உண்டாகிய,
துவனியால் - ஒலியினால், பகிரண்டம் - வெளியி