வேறு. 194. | மருவ ருஞ்சுருதி கூறுநிலை நாலும் வழுவா திருவ ருஞ்சிலைவ ணக்கியது மெய்த விரகு மொருவ ருஞ்சிறிது ணர்ந்திலகு கரந்த மெனவே வெருவ ருஞ்செயலில் விஞ்சினர்கள் விஞ்சை யருமே. |
(இ-ள்.) இருவர்உம் - கர்ணனும் அருச்சுனனும், மருவு அரு - பயிலுதற்கு அருமையான, சுருதி - தனுர்வேதத்தில், கூறும் - சொல்லப்படுகிற, நிலைநால்உம் - ஆலீடம் முதலிய நால்வகைநிலைகளும், வழுவாது - தவறாமல் (நின்று), சிலை வணக்கியதுஉம் - வில்லைவளைத்ததையும், எய்த விரகுஉம் - (அம்பு) எய்தபக்குவத்தையும், ஒருவர்உம் சிறிதுஉணர்ந்திலர் - எவருங்கொஞ்சமேனும் அறிந்தாரில்லை; விஞ்சையர்உம் - (மேலுலகத்துள்ள) வித்தியாதரர்களும் உகாந்தம் என - யுகமுடிவுகாலமென்று எண்ணி, வெருவரும் செயலில் விஞ்சினர்கள்- பயப்படுந்தொழிலில் மிகுந்தார்கள்; (எ- று.) சுருதியென்பதற்கு -(எழுதப்படாமல் ஆசாரியசிஷ்யபரம்பரையாகக்) கேட்கப்பட்டுவருவ தென்று பொருள், விஞ்சையர் - பதினெட்டுத்தேவகணங்களுள் ஒருவகையார். இதுமுதல் ஒன்பதுகவிகள் - பெரும்பாலும் இரண்டு மூன்றாஞ்சீர்கள் கூவிளங்காய்ச்சீரும், மற்றவை மாச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள். (285) 195. | ஒன்றோடொன்றுமுனையோடுமுனையுற்றுறவிழு மொன்றோடொன்றுபிளவோடவிசையோடுபுதையு மொன்றோடொன்றுதுணிபட்டிடவொடிக்குமுடனே யொன்றோடொன்றிறகுகவ்வுமெதிரோடுகணையே. |
(இ-ள்.) எதிர் ஓடு கணை - எதிரேசெல்லுகிற அம்புகள், ஒன்றோடு ஒன்று-,முனையோடு முனைஉற்று - நுனியோடு நுனிபொருந்தி, உற விழும் - மிகுதியாகவிழும்; ஒன்றோடொன்று-, பிளவுஓட - பிளவுபடும்படி, விசையோடு புதையும் - வேகத்தோடு தாக்கும்; ஒன்றோடொன்று-, துணிபட்டிட - துண்டு படும்படி,ஒடிக்கும்-: உடனே - விரைவாக, ஒன்றோடொன்று-, இறகு கவ்வும் - (அம்புகளின்) இறகுகளைப் பறிக்கும்; (எ - று.) (286) 196. | இடம்புரிந்திடில்வலம்புரியுமெண்ணின்முறையால் வலம்புரிந்திடிலிடம்புரியுமண்டலமுமாய் நடம்பிரிந்துபவுரிக்கதிநடத்துமெதிரே சலம்புரிந்ததிரமுட்டுமிருசந்தனமுமே. |
(இ-ள்.) எதிரே-, சலம் புரிந்து - போர்செய்து, அதிர - அதிர்ச்சி யுண்டாம்படி, முட்டும் - (ஒன்றோடொன்று) தாக்குகிற, இரு சந்தனம்உம் - இரண்டுதேர்களும் எண்ணில் - ஆலோசிக்கு |