பக்கம் எண் :

148பாரதம்கன்ன பருவம்

மிடத்து, முறையால் - முறையே, இடம் புரிந்திடில் - (ஒன்று) இடப்பக்கமாக
வந்தால்,வலம் புரியும்-((மற்றொன்று) வலப்பக்கமாக வரும்:-வலம் புரிந்திடில் -
(அது)வலப்பக்கத்திலே வந்தால், இடம் புரியும்-(இது) இடப்பக்கமாக வரும்:
(இங்ஙனன்றி),மண்டலம்உம் - (இரண்டுஞ்) சுற்றிச்சுற்றிவருதலும். ஆய் - ஆகி,
நடம் புரிந்து -கூத்தாடிக்கொண்டு, பவுரி கதி நடத்தும்-(தானே) சுற்றிவருதலாகிய
பவுரியென்னுங்கதியை நடத்திக்காட்டும்;

     சலம்புரிந்து அசைதலைச் செய்து என்றுமாம். சந்தனம் = ஸ்யந்தநம்.  (287)

197.ஆசுபோமிவுளிமாகடவியாழியிரத
மூசுபோரிலொருவர்க்கொருவர்முந்தவிடலால்
வாசுதேவனையுமத்திரமகீபதியையுந்
தேசுவேறுதெரிகிற்றிலர்கடேவர்களுமே.

     (இ-ள்.) ஆசு போம் - விரைந்துசெல்லுகிற, இவுளி மா - குதிரைகளை,
கடவிஓட்டி, ஆழி இரதம் - சக்கரங்களையுடைய தேரை, மூசுபோரில் - நெருங்கிய
யுத்தத்தில் ஒருவர்க்கு ஒருவர் முந்தவிடலால் - ஒருத்தருக்கொருத்தர் முன்னே
செலுத்துதலால்,-வாசுதேவனை உம்-வசுதேவபுத்திரனாகிய கண்ணனையும்,
மத்திரமகீபதியைஉம் - மத்திரநாட்டரசனான சல்லியனையும், தேவர்களும்-, தேசு
வேறு தெரிகிற்றிலர்கள் - வேறுஒளியாற் காணவில்லை; (எ - று.) இரு வரையுஞ்
சமமாகவே யறிந்தன ரென்றபடி ஆஸு  - வடமொழி அவ்யயம், இனி, ஆசு போம்
- குற்றம் நீங்கிய வென்றுமாம்.                                     (288)

198.மறமுமொத்தவழுவற்றசுழியொத்தவலிகூர்
புறமுமொத்தகதிபற்பலவுமொத்தபுகல்வா
ணிறமுமொத்தவுயரம்பருமைநீளமெனுமெய்த்
திறமுமொத்தவிருதேரில்வருதிண்பரியுமே.

     (இ-ள்.) இரு தேரில் வரு - இரண்டுதேரிலும் பூட்டப்பட்ட, திண்பரிஉம் -
வலிய குதிரைகளெல்லாம்,- மறம்உம் - வலிமையிலும், ஒத்த - (ஒன்றோடொன்று)
ஒத்திருந்தன; வழு அற்ற - குற்றமில்லாத, சுழி - (நல்லிலக்கணமாகிய) சுழிகளிலும்,
ஒத்த-; வலிகூர் - வலிமைமிகுந்த, புறம்உம் - முதுகும், ஒத்த-; கதி பல் பலஉம் -
பலவகைப்பட்ட நடைகளிலும், ஒத்த-; புகல் - (சிறப்பித்துச்) சொல்லப்படுகிற, வாள்-
ஒளியையுடைய, நிறம்உம் - வருணத்திலும், ஒத்த-; உயரம் பருமை நீளம் எனும் -
உயர்ச்சியும் பருமனும் நீட்சியு மென்கிற, மெய் திறம்உம் - உடம்பின்
தன்மைகளிலும், ஒத்த-; (எ -று.)                                  (289)
 
199.நிலையிரண்டிலுறநின்றநிமலற்குநிகர்வோர்
மலையிரண்டினைவளைத்தெதிர்மலைந்ததெனவே
யலையிரண்டெனவதிர்ந்துபொருமவ்விருவர்கைச்
சிலையிரண்டுநிமிராதுகணைசிந்தினர்களே.

     (இ-ள்.) நிலை இரண்டில் - இரண்டு் நிலைமைகளில், உற - ஒரு சேர, நின்ற-,
நிமலற்கு - குற்றமற்ற சிவபிரானுக்கு,