ஆகவே, உன்வில்லைப் பழித்தவரைக் கொல்வே னென்ற உனது சபதம் நிறைவேறினதாகும்' என்று உபாயங் கூறி, அருச்சுனன் தருமனைக் கொல்வதைக் கண்ணபிரான் தடுத்தருளினான், குரவோர்- ஈற்றயல் அகரம் ஓவாயிற்று, குரவராவார்- அரசன், போதகாசிரியன், வமிசகுரு, தந்தை, தமையன் என்பாரு முளர், உரவு-தேகபலம், புத்திபலம், மனோபலம், ஆயுதபலம் சேனாபலம் முதலியவற்றோடு,தெய்வபலமும், இல்முகம் எனப் பிரித்து - இல்லாமை (வறுமை) தோன்றுகிற முகமென்றுமாம். "காப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல் எஞ்ஞான்றும்" என்றவாறுலோபிகள் இரப்பவரதுமுகத்தைக் காணாதபடி தலைகவிழ்ந்து கொள்வ ராதலால், 'இரவோர்தம தின்முகம் வண்மையினா லிதயத்தொடு கண்டு' என அவனதுதானகுணத்தை வெளியிட்டார். (298) 208.-அருச்சுனன் தருமனைப் புன்மொழிகூற, அவன்பேசாது துறப்பேனென்று கானகஞ்செல்லத் தொடங்கல். என்னாவுரைசெய்தலுமஞ்சியிளைத் திருகைகொடிறைஞ்சி நராதிபனைத், தன்னாவிசையாதனசிற்சிலசொற் றளர்வோடெதிர்நின்று தனஞ்சயனுஞ், சொன்னான்றன்மாமகனோருரையுஞ் சொல்லாமலினித்துற வெய்துவனென், றுன்னாவிரைவோடிரதத்தினிழிந் துயர்கானடைவா னுணர்வுற்றனனே. |
(இ-ள்.) என்னா - என்று, உரைசெய்தலும்- (கண்ணன்) அருளிச்செய்தவளவில்,-தனஞ்சயன்உம் - அருச்சுனனும், அஞ்சி-, இளைத்து - சோர்ந்து, இரு கைகொடு இறைஞ்சி - இரண்டுகைகளாலும் (அவனைத்) தொழுது, நரஅதிபனை - மனிதர்க்குத் தலைவனானதருமனை நோக்கி, எதிர் நின்று எதிரிலே நின்று, தளர்வோடு - மனத்தளர்ச்சியுடனே, தன் நா இசையாதன - தனது நாவினாற் சொல்லுதற்குப் பொருந்தாதவையாகிய, சிற் சில சொல் - சிலசில பழிப்பான வார்த்தைகளை, சொன்னான்-; அறன் மா மகன் -சிறந்த தருமபுத்திரன், ஓர் உரைஉம் - ஒருவார்த்தையையும், சொல்லாமல்-, 'இனி துறவுஎய்துவன் - இப்பொழுது துறவறத்தை அடைவேன்,' என்று-, உன்னா - எண்ணி, விரைவோடு - வேகத்தோடு, இரதத்தின் - தேரினின்றும், இழிந்து - இறங்கி, உயர்காண்அடைவான் - சிறந்த காட்டை அடையும்பொருட்டு, உணர்வு உற்றனன் - ஆலோசித்தவனானான்; (எ-று.) இங்கே, இனி - இப்பொழுது என்னும்பொருளைத்தந்தது. துறவு - சன்னியாசம்.கானுக்குஉயர்வு - தவஞ்செய்வதற்கு வாய்ப்பான இடமாயிருத்தல். (299) 209.-இதுவும் மேலைக்கவியும் - ஒருதொடர்: க்ருஷ்ணார்ச்சுனர் தருமன்காலில்விழுந்து கோபம்மாற்றிக் கர்ணனுயிரைக் கொல்வோமென்று விடைபெற்றுச் செல்லுதலைக்கூறும். நரநாரணர்சென்றுதராபதிதா ணளினத்தில்விழுந்தொருநாயகமா வரனாமவனைப்புனைதேர்மிசையேவைத்துத்துனிமாறிடுமாறுரைசெய் |
|