பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்157

     ஆயிரங்கிரணங்களை யுடைமையாலும், மற்றைச்சுடர்களாகிய சந்திர
அக்கனிகளுக்கு ஒளிகளைக் கொடுத்துவாங்குந் தன்மையையுடைமையாலும்,
தாமநிதியென்று சூரியனுக்குப் பெயர்.                              (303)

213.-அருச்சுனன் ஆக்கினேயாஸ்திரத்தை விடுதல்.

அங்கிக்கதிர்தந்தகொடுஞ்சிலைநாணரவக்கணையஞ்சவெறிந்துமிகச்
சங்கித்தடலங்கியளித்தனிச் சரமேவினன்வந்துதனஞ்சயனும்
பொங்கிக்கனல்சாலமெழுந்ததெனப்புகையும்படிபோயகல்வானதியின்
கங்கிற்பொறிவிட்டதுதாரகையின்கணமென்னவெழுந்ததுகாய்கனலே.

     (இ-ள்.) தனஞ்சயன்உம் - அருச்சுனனும், வந்து-, அங்கி கதிர் தந்த -
அக்கினியென்னுஞ் சுடர் அளித்த, கொடு சிலை - கொடிய காண்டீவமென்னும்
வில்லின், நாண் - நாணியை, அரவம் கணை - (கர்ணனது) நாகாஸ்திரம், மிக
சங்கித்து-(இடியோசையோவென்று) மிகவுஞ் சந்தேகித்து அஞ்ச - பயப்படும்படி,
எறிந்து - (கைவிரலால்) தெறித்து, அடல் - வலிமையையுடைய, அங்கி அளித்த -
அங்கி அருளிய, தனி சரம் - ஒப்பில்லாத ஆக்கினேயாஸ்திரத்தை, ஏவினன் -
பிரயோகித்தான்; எழுந்தது - (அதில் நின்றும்) உண்டானதாகிய, காய் கனல்-
எரிகின்றநெருப்பு,-கனல் சாலம்-(பிரளயகாலத்து) நெருப்புத்திரள், பொங்கி
எழுந்தது என-பற்றிமேலே கிளர்ந்ததென்னுமாறு, புகையும்படி - புகையுண்டாகும்
படி, போய் -மேலெழுந்துசென்று, அகல் வான் நதியின் கங்கில் - பரந்த
ஆகாசகங்கையின்கரையில், தாரகையின் கணம் என்ன - நட்சத்திரங்களின்
கூட்டத்தைப்போலபொறிவிட்டது - பொறிகளைச் சிதறியது. (எ - று.) பி-ம்:
எறிந்தது காய்.                                                 (304)

214.-இதுவும் மேலைக்கவியும் - ஒருதொடர்:
வாருணாஸ்திரத்தால் கர்ணன் ஆக்நேயாஸ்திரத்தை
யவித்தலைக் கூறும்.

இணையின்றியெழுந்துசுடுங்கனலாலிரதங்களும்வேன்முதலெப்
                                         படையும்,
கணையுஞ்சிலையுங்கவனப்பரியுங்கரியுங்கரியானமைகண்டியமன்,

றுணைவன்றுவாகுவளர்ந்திடவுந்துணைவார்புருவங்கடுடித்திடவும்,

பணைவெங்குரல்கன்றிமுழங்கிடவும்பவ்வத்தரசன்றருபாணமெடா.

     (இ-ள்.) இணை இன்றி - ஒப்பில்லாமல், எழுந்து - மேல்மேல் வளர்ந்து,
சுடும்- எரிக்கின்ற, கனலால் - அக்கினியினால், இரதங்கள்உம் - தேர்களும்,
வேல் முதல்எ படைஉம் - வேல் முதலிய எல்லா வாயுதங்களும், கணைஉம் -
அம்புகளும்,சிலைஉம் - வில்லும், கவனம்பரிஉம் - நடைகளையுடைய
குதிரைகளும், கரிஉம் -யானைகளும், கரி ஆனமை - (எரிந்து) கரியாய்விட்டதை,
இயமன் துணைவன்-யமனது தம்பியான கர்ணன், கண்டு-, (வீராவேசத்தால்), துணை
வாகுவளர்ந்திடஉம் -ஒன்றொடொன்றொத்த (இரண்டு) தோள்களும் ஓங்கியிடவும்,
துணை வார்புருவங்கள் - நீண்ட இரண்டு புருவங்களும், துடித்திடஉம் -
துடிக்கவும், பணைவெம் குரல் - பருத்த கொடிய சிங்கநாதஞ்செய்யும் ஒலி, கன்றி
முழங்கிடஉம் -சினந்து, ஒலிக்கவும், பவ்வத்து அரசன் தரு - கடலுக்கு அரசனாகிய
வருணன்