தொடுத்தான்; ஆயு புறம் இட்டுவிட - ஆயுள் ஒழியும்படி, பொருவோன் - போர்செய்பவனாகிய கன்னனது. அரி வெம் கணை-கொடிய சர்ப்பாஸ்திரம், அங்கு- அவ்விடத்து, மலைந்திடுவோன் - எதிர்த்துப்போர்செய்கிற அருச்சுனனது, உற்பலம் வீ - கருங்குவளைமலர் போன்ற கூர்மையான, மா முனை - சிறந்த நுனியையுடைய, வெம்கணை - கொடிய வாயவ்யாஸ்திரத்தை, மேல் வீசி பொரும் முன்பு - மேன்மேலேவிரைந்துதொடுக்கும் முன்னே, விழுங்கியது - உட்கொண்டு அடக்கிற்று; (எ - று.)--பி-ம்: அவ்வெங்கணை. ஆகாயத்துக்கு அழகையும் விளக்கத்தையுஞ் செய்தலால், ககனமணியென்று சூரியனுக்குப் பெயர். சர்ப்பம் காற்றை உணவாகஉட்கொள்ளுதலால், வாயுஅஸ்திரத்துக்கு சர்ப்ப அஸ்திரம் மாறாகும். உற்பலம்-உத்பலம். அரிய=ஹரி: பாம்பு. (307) 217. | என்னம்புதனக்கெதிரியில்லையெனாவிருளம்பினையே வினன்வில்விசயன், கன்னன்கலையெட்டுடனெட்டுடைவெண்கதிரம்புதொடுத் தெதிர்கன்றினனான், முன்னம்புசிதைந்துசிதைந்தழியாமுகமாறியிமைத்து விழிக்குமுனே, பின்னம்புதொடர்ந்துசெலச்செலவேபிலமூழ்கியதென்ன பெரும்பிழையோ. |
(இ-ள்.) வில் விசயன் - வில்லில்வல்ல அருச்சுனன், என் அம்பு தனக்கு எதிர்இல்லை எனா-எனது இந்த அம்புக்கு எதிரில்லையென்று எண்ணி, இருள் அம்பினை- அந்தகாராஸ்திரத்தை, ஏவினன்-; கன்னன்-, கலை எட்டுடன் எட்டு உடை -பதினாறுகலைகளையுடைய, வெண் கதிர் அம்பு-வெண்மையாகிய ஒளியையுடையபூர்ணசந்திராஸ்திரத்தை, எதிர் தொடுத்து - (அதற்குப்) பிரதியாகப் பிரயோகித்து,கன்றினன் - கோபித்தான்; பின் அம்பு - பின்புவிட்ட கர்ணன் அஸ்திரம், தொடர்ந்துசெல செல - தொடர்ந்து விரைந்து செல்லுதலால், முன் அம்பு - முன்புவிட்ட(அருச்சுனன்) அஸ்திரம், இமைத்து விழிக்கும் முனே - (கண்ணை)மூடித்திறக்கும்முன்னே, சிதைந்து சிதைந்து - கெட்டுக் கெட்டு, அழியாமுகம் மாறி -(முன் ஒருபோதும் அழியாத தன்) முகம் மாறுபட்டு, பிலம் மூழ்கியது என்ன -பாதளாத்துள்ளே மறைந்தாற்போல (மறைந்துவிட்டது); பெரு பிழைஓ-(இங்ஙன்போனதும்) தப்பித்துக்கொண்டதாமோ?(எ-று.) கலை - சந்திரன்பங்கு- எட்டுடன் எட்டு - எட்டோடு கூடிய எட்டு - வெண்கதிர் - அன்மொழித்தொகை. (308) 218.-அருச்சுனனெய்த அஸ்திரங்களோடு கர்ணனெய்த அஸ்திரங்கள் முட்டிக்கொண்டு தடுத்தல். மகவானருள்வாளிதொடுத்தனனம் மகவான்மகன்வாசிகளேழு டைவெம், பகவானருள்வாளிதொடுத்தனனப் பகவானருடியாகபராய ணனுந், தகவாளியிரண்டுமுடன்கதுவித் தாழாதுயராதுசமம்பெறவே. முகவாய்கள்பிளந்தனமற்றுளபோர்முனைவாளியுமிப்படி முட்டினவே. |
(இ-ள்.) மகவான் அருள் வாளி - இந்திரனருளிய ஐந்திராஸ்திரத்தை, அ மகவான் மகன் - அவ்விந்திரன் மைந்தனான அருச்சுனன் |