பக்கம் எண் :

16பாரதம்கன்ன பருவம்

     துகள் வெயிலைமறைத்தாலும், மணிவெயில் அவனியி லெழுந்த தென்க:
உயர்வுநவிற்சியணி - வலமிட நிகழ்புரிவு - வலசாரியும், இடசாரியும். அசுவிநீதேவர்
- தேவவைத்தியர்; இவர் - பெண்குதிரை வடிவங்கொண்டு வனத்தில் ஒளித்திருந்த
சமிஜ்ஞையென்னும் மனைவியினிடத்துக் குதிரை வடிவமாய்ச்சேர்ந்த சூரியனுக்குப்
பிறந்த பிள்ளைகள்.                                              (26)

27.- அவர்கள் குதிரைகளின் வருணனை.

அசைவிறொடையடிகசைகுசையுரநினை வறியுமுணர்வினவளமை
                                      யுமுடையன,
வசையில்சுழியனபழுதறுவடிவின வருணமொழிகுரன்
                                  மனவலிமிகுவன,
விசைகொள்பலகதியினும்விரைவுறுவன விபுதர்குல
                               பதிவிடுபரிநிகர்வன,
விசைகளொருபதுதிசைகளுமெழுதிய விறைவரிருவருமிசை
                                  கொளுமிவுளியே.

     (இ -ள்.) இசைகள் -(தமது) கீர்த்திகளை, ஒருபது திசைகள் உம் - பத்துத்
திக்குக்களிலும், எழுதிய - எழுதிநாட்டிய, இறைவர் இருவர்உம்- அரசர்கள்
இருவரும்[கர்ணனும் நகுலனும்], மிசைகொளும் - ஏறியுள்ள, இவுளி - குதிரைகள்,-
அசைவு இல் -சோர்தல் இல்லாத, தொடை அடி-(தம்மேல் ஏறியவரது)
தொடைகளின் அடிகளாலும், கசை - சவுக்கின் அடிகளாலும், குசை உரம் -
கடிவாளத்தையிழுக்கும் வலிமையாலும், நினைவு - அவர்களெண்ணத்தை,
அறியும் -தெரிந்து கொள்ளுகின்ற, உணர்வினை - நல்லறிவையுடையவை;
வளமைஉம்உடையன - வளர்ச்சியையும் உடையவை; வசை இல் சுழியன - குற்ற
மில்லாதசுழிகளை யுடையவை; பழுது அறு வடிவின - குற்றமில்லாத வடிவத்தை
யுடையவை; வருணம் - நிறமும், மொழி குரல் - கனைக்கின்ற ஒலியும், மனம்
வலி -மனத்தின் ஊக்கமும், மிகுவன - சிறந்துள்ளவை: விசை கொள் -
வலிமைகொண்ட,பல கதியின்உம் - பலவகை நடைகளிலும், விரைவு உறுவன -
வேகம்பொருந்துபவை; விபுதர் குலபதி - தேவர்கூட்டத்துக்குத் தலைவனான
இந்திரன், விடு - செலுத்துகின்ற, பரி -(உச்சைச்சிரவ மென்னும் வெள்ளைக்)
குதிரையை, நிகர்வன - ஒத்திருப்பவை; (எ-று.)

     குற்றமுள்ள சுழிகள் - சந்திரம், அண்டாவர்த்தம், கௌவகம், காகாவர்த்தம்,
முன்வளையம், கேதாரி, கேசாவர்த்தம், பட்டடை என்பன. குற்றமற்றசுழி -
கழுத்தில்வலமாகச் சுழிந்திருக்குந் தேவமணி முதலியன.                 (27)

28.- கர்ணநகுலரது போர்.

முடியுமொருகவிகையுமிருகவரியுமுதிருமெரிவிடமுரணர
                                   வெழுதிய,
கொடியமுடையவனெலுவலுமுரசுயர்கொடியிலெழுதிய
                              குருபதியிளவலு,
நெடியவரிசிலைநிலைபெறவளையவு நிமிரவிடுகணை
                           நிரைநிரை முடுகவு,
மிடியுலெழுமடியதிர்குரல்விளையவு மிவுளியமர்கடிதிகலொடு
                                   புரியவே.

இதுமுதல் ஐந்து கவிகள் - குளகம்.

     (இ-ள்.) முடிஉம் - கிரீடத்தையும், ஒரு கவிகைஉம் - ஒற்றை (வெண்கொற்ற)க்
குடையையும், இரு கவரிஉம் - இரண்டு சாமரங்