வல் சிலை கோலி - வலிய வில்லை வளைத்து, வெம் பொறி விடு - வெவ்விய பொறிகளைச் சிந்துகிற, புரி தழல் - விரும்பிய அக்கினி, ஒள் கிரி பல - ஒளியையுடைய பல மலைகள், மிடை - நெருங்கப்பெற்ற, வனம் - காண்டவவனம், வெந்திட - எரிந்துபோம்படி, அந்தர மிசை - ஆகாயத்தில், ஓடி - விரைந்து சென்று,புகை கதுவும்படி - புகை நெங்கும் படி, சீறி - கோபித்து, மண்டிய நாளில் - பற்றியகாலத்தில், அம்பு என வரும் - (அருச்சுனனைக் கொல்லும்பொருட்டு) அஸ்திரமாகவந்த, இகல் உடை - வலிமையையுடைய, வெம் பகு வாய்கள்- கொடிய திறந்தவாய்கள், ஐந்து உடையது - ஐந்தையுடையதாகிய, ஓர் - ஒரு, எழில் கொள் -அழகைக்கொண்ட, புயங்கனை - நாகாஸ்திரத்தை, ஏவ என்று -விடவேண்டுமென்று, உசவி சொல்லி,- (எ-று.)-"பரிவுடனருளி வணங்கியெடாவிடும்பொழுதினில் என மேற்கவியிற் றொடரும். இதுமுதல் ஏழுகவிகள் - பெரும்பாலும் ஒன்று நான்கு ஐந்து எட்டாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும், மற்றைநான்கும் கூவிளச்சீர்களுமாகியஎண்சீராசிரியச்சந்த விருத்தங்கள். 'தன தன தந்தன தானன தனதன தனதன தந்தன தானன தனதன' என்பது, இவற்றுக்குச் சந்தக்குழிப்பு. (312) 222. | பரிமளசந்தனதீபமுங்கமழ்புகை பனிமலருங்கொடுபூசை யும்பரிவுட, னருளிவணங்கியெடாவிடும்பொழுதினி லடல்வலவன்சில கூறினன்பரிவொடு, விரிதுளபம்புனைமாயன்வஞ்சனையுளன் விசய னகன்றடமார்பகம்புதைதர, வுரகநெடுங்கணையேவுகென்றிடவவானுறுதி நினைந்திலனாதபன்குமரனே. |
(இ -ள்.) பரிமள சந்தனம் தீபம்உம் - வாசனையையுடைய சந்தனத்தையும் விளக்கையும், கமழ் புகை - வாசனைவீசுகிற தூபத்தையும், பனி மலர்உம் - குளிர்ச்சியையுடைய பூக்களையும் கொடு - கொண்டு, பூசைஉம் - பூஜையையும், பரிவுடன் அன்போடு, அருளி - செய்து, வணங்கி - நமஸ்கரித்து, எடா - எடுத்து விடும் பொழுதினில் - விடுகிற சமயத்தில்,- அடல் வலவன் வலிமையையுடைய பாகனான சல்லியன், பரிவொடு - அன்போடு சில கூறினான் - சில வார்த்தைகளைச்சொல்பவனாகி, 'விரி துன்பம் புனை - மலர்ந்த திருத்துழாயை யணிந்த, மாயன் -கண்ணன், விசயன் - அருச்சுனனது, அகல் தட மார்பு அகம் - விசாலமான பெரியமார்பினிடத்தில், புதைதர - அழுந்தும்படி [மார்பை இலக்காகக்கொண்டு], உரகம்நெடு கணை - பெரிய நாகாஸ்திரத்தை, ஏவுக - பிரயோகிப்பாயாக,' என்றிட -என்றுசொல்ல, ஆதபன் குமரன் - சூரிய குமாரனான கர்ணன், அவன் உறுதிஅச்சல்லியன் சொன்ன நன்மையை, நினைந்திலன் - எண்ணியனில்லை; (எ-று.) (313) 223. | மழுவுறுசெங்கையிராமனென்பவனருள் வரிசிலைகொள் டணிநாணிதன்செவியோடு, தழுவுறமண்டலமாய்வளைந்திடமுதுறணெடுஞ்சினமூளும் வெங்கணையினை, யெழிலிமதங்கயவாகனன்றயனதெழில்பெறுகந்தர |
|