மாகத் தொடுத்த அரவு - நாகம், தனஞ்சயன் - அருச்சுனனது மார்பையும்-, களைஉம் - கழுத்தையும், விலகி - நீங்கி, அவன் தன் தாதை - அவனது தந்தையான இந்திரன், அன்று - அந்நாளில் உதவிய - கொடுத்த, வெயில் மகுடம் தனை - சூரியனொளிபோன்ற ஒளியையுடைய கிரீடத்தை, மோதி வந்து இடற - வந்து தாக்கித் தள்ள,- (எ-று.)- "உதையினன்" என மேலைக்கவியில் முடியும். அங்குலி - விரற்கிடை. தன, அ - ஆறனுருபு. (315) 225.- பின்பு கணையானநாகத்தை அருச்சுனன் இரண்டுதுண்டாக்கிவிடுதல். இடறியதிண்பணிவாளிபின்பறிதலுமெதிர்பொரவெஞ்சிலை கோலிநின்றவனணி, பிடரினுமுண்டுகொல்பார்வையென்றிடவலி பெறநிலை நின்றிருதோள்களும்பரிவுற, வடவியின்வெந்துதன்வால்குறைந்திடவிடுமயின்முக வெங்கணையாலதன்பெருமைகொ, ளுடலமிரண்டுடலாய்விழுந்தலமரவுதையினனும்பர் பிரானருள்குரிசிலே. |
(இ -ள்.)உம்பர்பிரான் - தேவராஜனான இந்திரன், அருள் - பெற்ற, குரிசில் -பெருமையிற்சிறந்த அருச்சுனன், எதிர் பொர - எதிரே போர்செய்தற்கு, வெம் சிலை- கொடிய வில்லை, கோலி நின்றவன் - வளைத்துநின்றவன், திண் - வலிய, இடறிய- (தன் கிரீடத்தைத்) தள்ளின, பணி வாளி - நாகாஸ்திரம், பின் பறிதலும் - பின்னால்நீங்கினவளவில், அணி பிடரின்உம் - அழகியபின்புறத்தும் 'பார்வை உண்டு கொல்கண் உளதோ? 'என்றிட - என்னும்படி வலி பெற - வலிமை பொருந்த, நிலைநின்று - நிலையிலே நின்று, இரு தோள்கள்உம் பரிவு உற - இரண்டு தோள்களும்மகிழ்ச்சியாற் பூரிக்க, அடவியின் - காண்டவவனத்தில், வெந்து - எரிந்து, தன் வால்குறைந்திட - அதன் வால் அறுபடும்படி, விடும் - விட்ட, அயில் வெம் முகம்கணையால் - கூர்மையையுடைய நுனியையுடைய கொடிய அம்பினால், அதன் -அந்நாகத்தின், பருமை கொள் - பருத்தலைக் கொண்ட, உடலம் - உடம்பு, இரண்டுஉடல் ஆய் - இரண்டு துண்டாகி, விழுந்து - கீழ்விழுந்து, அலமர - வருந்தும்படி,உதையினன் - எய்தான்; (எ -று.) பறிதல் - கடந்து ஓடுதல், பெயர்ந்து வழுவுதல், பின்பு அறிதலும் என்றும் பிரித்து உரைக்கலாம். (316) 226.-அழிகிறநாகம் மீண்டும் அருச்சுனன்மீதுவிடுமாறு வேண்ட, கர்ணன் மறுத்திடல். பிறகுபுரிந்தெழில்கூர்தனஞ்சயன்விடு பிறைமுகவெங்கணையா லழிந்திடுபணி, திறலுடன்முன்றுணிசேருமைந்தலையொடு திரியவும் வந்தெனையேவுகென்றலறவு, முறவொடுகுந்திவழாவரம்பெறுதலினுரைவழுவும்பெரிதாகுலம் புரியினு, மறுகணையொன்றுதொடேன்முனந்தினியெனவலிகழலங்கர் குலாதிபன்புகலவே. |
|