உளம் நொந்து நொந்து - மனம் மிகவருந்தி, நான் ஒத்த போர் மீளியை - அருச்சுனனைப்போன்ற போரில்வல்ல வீரனான கர்ணனை நோக்கி, சில கூறுவான் -சிலவார்த்தை சொல்லுவானானானன்; (எ-று.)- அதுமேற்கவியிற் கூறுகிறார், (320) 230.- இரண்டுகவிகள்-'இனிச் சாரத்தியஞ் செய்யேன்; உன்னால் வெல்லலும் ஆகாது' என்று அத்தேரைவிட்டுச் சல்லியன்தன்தேரி லேறிக்கொள்ளுதலைக் கூறும். என்னாலுமரிதித்தடந்தேர்விரைந்தூர்தலினியென்றுமற் றுன்னலுமரிதந்தவிசயன்றனுயிர்கொள்ளலுன்னித்தபோர் பன்னாகதுவசற்குமரிதாலுனைக்கொண்டுபாராளுமா றென்னாவிழிந்தானவன்றேரின்மிசைநின்றுமிசைநின்றுளான். |
(இ -ள்.) இசை நின்றுளான் - கீர்த்தி நிலைபெற்றுள்ளவனாகிய சல்லியன்,- 'இதட தேர் - இந்தப் பெரிய தேரை, விரைந்து ஊர்தல் - வேகமாகச் செலுத்துதல், என்னாலும்-, அரிது - (செய்தற்கு) அருமையானது; மற்று - மேலும், இனி என்றுஉம் - இனிமேல் எப்பொழுதும், உன்னித்த போர் - முயன்றுசெய்கிற போரில், அந்த விசயன்தன் உயிர் கொள்ளல் - அந்த அருச்சுனனைக் கொல்லுதல், உன்னாலும்-, அரிது - அருமையானது; பன்னாக துவசற்குஉம் - பாம்புக்கொடியையுடைய துரியோதனனுக்கும், உனைகொண்டு - உன்னை (த் துணையாகவைத்து)க் கொண்டு, பார் ஆளும் ஆறு - பூமியை அரசாளும்விதம், அரிது - அருமையானது,' என்னா - என்று சொல்லி, அவன் தேரின் மிசை நின்றும் - அந்தக் கர்ணனது தேரின் மேனின்று, இழிந்தான் - இறங்கினான்; (எ-று.)-பன்னாகம் - பந்நகம் என்பதன் விகாரம். (321) 231. | என்றேயெழிற்குந்திவயினல்குதனியாளியிகலேறனான் வன்றேர்செலுத்திப்பெரும்போர்முடிப்பிக்கவருசல்லியன் றென்றேரிசைச்செவ்விநறைநாறுமலர்விட்டசிறைவண்டெனத் தன்றேருமேல்கொண்டுதனிவில்லுமீளத்தரித்தானரோ. |
(இ -ள்.) எழில் - அழகையுடைய குந்தி வயின் - குந்திதேவியினிடத்தில், நல்கு - பிறந்த, தனி - ஒப்பில்லாத, இகல் - வலிமையையுடைய, யாளி ஏறு - ஆண்சிங்கத்தை, அனான் - ஒத்தவனாகிய கர்ணனுக்கு, வன் தேர் செலுத்தி - வலியதேரை ஓட்டி, பெரு போர் முடிப்பிக்க வரு - பெரிய யுத்தத்தை முடியச் செய்யவந்த, சல்லியன்-,- என்று - என்று சொல்லி, செவ்வி - அழகையுடைய, நறை நாறும்- வாசனை வீசுகிற, மலர் - பூவை, விட்ட -விட்டு (அப்பாற்) சென்ற, தென் தேர் -தேனை ஆராய்ந்து உண்கிற, இசை - இசைப்பாட்டையுடைய, சிறை வண்டு என -சிறகுகளையுடைய வண்டு போல, தன் தேரு மேல்கொண்டு - (கர்ணன்தேரைவிட்டுத்) தனது தேரின்மேல் ஏறிக்கொண்டு, தனி வில்உம் - ஒப்பற்றதனது வில்லையும், மீள - திரும்புவும், தரித்தான் - (கையிற்) பிடித்தான்; (எ -று.) தென் - தேன் என்பதன் விகாரம், முன்னே தருமன்வேண்டிக் கொண்டபடி சல்லியன் அடிக்கடி இகழ்ந்துபேசிக் கர்ணனது |