பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்169

வருந்திஎத்தனை சமாதானப்படுத்தியுங் கேளாமல் போர்க்களத்தில் உன் உடல்
பகைவரம்பினால் இங்ஙனஞ் சிதைந்து உனது தேர்ச்சக்கரம் நிலத்தில்
அழுந்திவிடக்கடவதென்று சபித்தார், அதவா - வடமொழி அவியயம்.  (323)

233.-இதுவும் மேலைக்கவியும் -ஒருதொடர்: கர்ணன்
வேறுதேரேறி அருச்சுனன்மீது பல அம்புகள்விட,
கர்ணன்வலி குறைவதைக் கிருஷ்ணன் அருச்சுனனுக்குச்
கூறிக்கொடுத்தமை கூறும்.

இயற்கைப்பெருங்கொற்றவலியன்றியார்யாரிடத்தும்பெறுஞ்
செயற்கைப்படைத்திண்மைகைவந்திலாவெய்யசெய்யோன்மகன்
வெயர்க்கத்தனுதல்கண்சிவப்பேறமனம்வெம்பமண்மீதிழிந்
தயர்க்கச்சபித்தோனைவந்தித்துவேறோரடற்றேரின்மேல்.

     (இ-ள்.) இயற்கை - இயல்பாகவுள்ள, பெரு - பெரிய, கொற்றம் -
வெற்றிக்குக்காரணமான, வலி அன்றி - பலத்தைமாத்திரமே யல்லாமல், யார்
யாரிடத்துஉம் பெறும் - பலபேரிடத்தினின்றும் பெறுகிற, செயற்கை -
செயற்கையாகவுள்ள,  படை திண்மை - ஆயுதங்களின் வலிமை, கை வந்திலா -
சித்தியாகப் பெறாத, வெய்ய - வெம்மையையுடைய, செய்யோன்மகன் - செம்மை
நிறத்தையுடைய சூரியனது குமாரனான கர்ணன், (கோபத்தால்) தன் - தனது,
நுதல் -நெற்றி, வெயர்க்க - வேர்வையடையவும், கண் - கண்கள், சிவப்பு ஏற-
செம்மைநிறத்தை மிகுதியாகப் பெறவும், மனம் வெம்ப - நெஞ்சுகொதிக்கவும்,
மண்மீதுஇழிந்து - (தேரினின்றும்) பூமியில் இறங்கி, அயர்க்க சபித்தோனை -
(யாவையும்)மறக்கும்படி சபித்த பரசுராமரை, வந்தித்து - (திக்குநோக்கி)
நமஸ்கரித்து, வேறு ஓர்அடல் தேரின்மேல் - வேறொரு வலிமையையுடைய
தேரில்,-(எ-று.) "ஏறி" என்க.                                   (324)

234.ஏறித்தன்வலவன்வெலுத்தத்தடக்கையிலிகல்வில்லுடன்
சீறிக்கொடுஞ்சாயகங்கோடிமுகிலூர்திசேய்மேல்விடக்
காறிக்கனன்றக்கடுந்தேர்செலுத்துங்கரும்பாகனார்
கூறிக்கொடுத்தாரருக்கன்குமரன்வன்மைகுறைகின்றதே.

     (இ -ள்.) ஏறி - ஏறிக்கொண்டு, தன் வலவன் - தனது சாரதி செலுத்த -
(அத்தேரைச்) செலுத்தாநிற்க,- தட கையில் - பெரிய கையிலே (பிடித்த),
இகல்வில்லுடன் - வலிமையையுடைய வில்லோடு, சீறி - கோபித்து (ச் சென்று),
கொடு சாயகம் கோடி கொடியகோடிபாணங்களை, முகில்ஊர்திசேய்மேல் -
மேகங்களாகிய வாகனத்தையுடைய இந்திரனதுபுத்திரனாகிய அருச்சுனன்மேல் விட-
பிரயோகிக்க,- காறி கனன்று - மிகவுங்கோபித்து, அ கடு தேர் செலுத்தும் - அந்த
விரைந்த தேரை ஓட்டுகிற, கரு - கருநிறத்தையுடைய, பாகனார் - சாரதியாகிய
கண்ணபிரான், அருக்கன் குமரன் சூரியகுமாரனான கர்ணன், வன்மை குறைகின்றது
- பலங்குறைகிறதை, கூறிக்கொடுத்தார் - (அருச்சுனனுக்குச்) சொல்லிக்கொடுத்தார்;
(எ-று.)