பும் கைத்தலம் - (அவனது) கையினிடங்கள், வில் குனிப்புஉம்- வில்லை வளைத்தலையும், கடு கணை தொடுத்திடும் கணக்குஉம் - கொடிய அம்புகள் எய்யுந்தன்மையையும், மறந்தது இல்லை-, ( எ- று.)-பி-ம்: போல்விரிய. இரத்தத்திற்குச் சூரியகிரணம். செம்மை நிறத்தால் உவமை. மகுடம் உருக்குலைந்தது. இப்பொழுது; கவசகுண்டலங்கள் உருக்குலைந்தது, முன்னே இந்திரனுக்குக் கொடுத்தபொழுது, அதனையும் இங்கே எடுத்துக்கூறியது, அது இவன்வலி குறைவதற்கு முக்கிய காரணமாதலின். இதுமுதற் பத்துக்கவிகள் - இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற எழுச்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். (327) 237.-சூரியாஸ்தமனமாவதற்கு இரண்டுவிற்கிடையிருக்கப் போரைநிறுத்றுவித்துஸ்ரீக்ருஷ்ணன் வேதியனாய்க் கர்ணனிடஞ்செல்லல். அத்தவெற்பிரண்டுவிற்கிடையெனப்போயாதபன்சாய்தல்கண்டருளி முத்தருக்கெல்லாமூலமாய்வேதமுதற்கொழுந்தாகியமுதல்வன் சித்திரச்சிலைக்கைவிசயனைச்செருநீயொழிகெனத்தேர்மிசைநிறுத்தி மெய்த்தவப்படிவவேதியனாகிவெயிலவன்புதல்வனையடைந்தான். |
(இ-ள்.) அத்த வெற்பு - அஸ்தகிரி, இரண்டு விற்கிடை என-இரண்டு விற்கிடைத்தூரத்தி லுள்ளதென்னுமிடத்தில், ஆதபன்-சூரியன், போய் - சென்று, சாய்தல்-விழுதலை, முத்தருக்கு எல்லாம் - முத்தியுலகத்தையடைந்தவர் யாவர்க்கும், மூலம் ஆய் - முதற்கடவுளாகி, வேதம் முதல் கொழுந்து ஆகிய - வேதங்களின் சிறந்த கொழுந்தாகிய, முதல்வன் - தலைவனாகிய கண்ணன், கண்டருளி - பார்த்தருளி,- சித்திரம் சிலை கை - அழகிய வில்லேந்திய கையையுடைய, விசயனை- அருச்சுனனை (நோக்கி), நீ செரு ஒழிக என - நீ (சற்றே) போரை நிறுத்துவாயாகவென்று சொல்லி, தேர் மிசை நிறுத்தி - தேரின்மேல் (அவனை) நிற்கச் செய்துவிட்டு,மெய் தவம்படிவம் - உண்மையாகிய தவவேஷத்தையுடைய, வேதியன் ஆகி -பிராமண வடிவமாய், வெயிலவன் புதல்வனை - கர்ணனை, அடைந்தான்; (எ- று.) அத்தம் =அஸ்தம், வடசொற்றிரிபு. விற்கிடை - வில் கிடக்கு மவ்வளவு தூரம். 'வேதமுதற்கொழுந்தாகிய' என்றது - வேதாந்தங்களிற் சிறப்பாக எடுத்துப் பிரதிபாதிக்கப்படுகிற என்றபடி. (328) 238,-'உனக்குஇயைந்ததை எனக்குத்தருக' என்று வேஷதாரியான கிருஷ்ணன் கேட்டல். தாண்டியதரங்கக்கருங்கடலுடுத்த தரணியிற்றளர்ந்தவர்தமக்கு, வேண்டியதருதிநீயெனக்கேட்டேன்மேருவினிடைத்தவம்பூண்டேன், ஈண்டியவறுமைப்பெருந்துயருழந்தேனியைந்ததொன்றிக்கணத் தளிப்பாய், தூண்டியகவனத்துரகதத்தடந்தேர்ச்சுடர்தரத்தோன்றியதோன்றால், |
இரண்டுகவிகள் - ஒருதொடர். |