திலையால். ஓவிலாதியான்செய்புண்ணியமனைத்துமுதவினேன்கொள்க நீயுனக்குப். பூவில்வாழயனுநிகரலனென்றாற்புண்ணியமிதனினும் பெரிதோ. |
(இ-ள்.) ஆவிஓ - உயிரோவென்றால். நிலையின் கலக்கியது- தான் நிற்குமிடத்தில் நின்றும் எழுந்தது, (அவ்வுயிர்), யாக்கை அகத்ததுஓ - (இப்பொழுது) உடம்பினுள்ளே உள்ளதோ? புறத்ததுஓ - (அன்றிஉடம்புக்கு) வெளியேசென்றதோ? அறியேன் - அறிகிறேனில்லை. பாவியேன் தீவினையையுடைய யான், வேண்டும் பொருள் எலாம் - (வேண்டுவார்) வேண்டும் பொருள்களையெல்லாம், நயக்கும் - விரும்பிக்கொடுக்கின்ற, பக்குவந்தன்னில் - சமயத்தில், வந்திலை - (நீ) வந்தாயில்லை, யான் செய் புண்ணியம் அனைத்துஉம் - யான் செய்துள்ள நல்வினையையெல்லாம். ஓவுஇலாது - (ஒன்றும்) ஒழிதல் இல்லையாம்படி, உதவினேன் - கொடுத்தேன்; நீ கொள்க - நீ பெற்றுக்கொள்வாயாக, உனக்கு-, பூவில் வாழ் அயன்உம் - (திருமாலின் திருவுந்தித்) தாமரைமலரில் வாழ்கிற பிரமனும், நிகர் அலன் என்றால்-ஒப்பாகான் என்று சொன்னால். புண்ணியம்- (என்)நல்வினை, இதனின்உம் பெரிதுஓ-(உனக்குதானஞ்செய்யும்) இத்தொழிலினுஞ் சிறந்ததோ? (எ - று.)-அன்றென்றபடி. முதலடியில் முன் ஓகாரம் - உயர்வுசிறப்பு; பின் ஓகாரம் இரண்டும்-ஐயம். இன்னுங் கேட்ட கேட்டவற்றையெல்லாம் கொடுக்கும் ஆற்றல் இப்பொழுது இல்லையாதலால், "பாவியேன்" என்று தன்னைத்தானே வெறுத்துக்கொண்டான். (331) 241. | என்னமுன்மொழிந்துகரங்குவித்திறைஞ்சவிறைஞ்சலர்க் கெழலியேறனையான், கன்னனையுவகைக்கருத்தினானோக்கிக்கைப்புன லுடன்றருகென்ன, வன்னவனிதயத்தம்பின்வாயம்பாலளித்தலுமங்கை யாலேற்றான், முனமோரவுணன்செங்கைநீரேற்றுமூவுலகமுமுடன் கவர்ந்தோன். |
(இ-ள்.) (கர்ணன்), என்ன-என்று முன் - முன்னே, மொழிந்து - சொல்லி, கரம்குவித்து - கைகளைக்கூப்பி, இறைஞ்ச-வணங்க,-இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு அனையான் - (தன்னை) வணங்காத பகைவர்களுக்கு மேகத்தில் தோன்றுகிற பேரிடியை யொப்பவனாகியகண்ணன், கன்னனை-, உவகை கருத்தினால் - மகிழ்ச்சியோடு கூடியஎண்ணத்தோடு, நோக்கி - பார்த்து, கை புனலுடன் தருக என்ன - கையினால் தாரைவார்க்கப்படுகிறநீரோடு தானஞ்செய்வா யென்று சொல்ல, அன்னவன் - அக்கர்ணன் இதயத்து அம்பின் வாய் அம்பால் - (தன்) நெஞ்சில் தைத்த அம்பின் வழியேவெளிவருகிற செந்நீரால், அளித்தலும் -தாரைவார்த்துக் கொடுத்தவளவில்,-முன்னம் - முன்னே (வாமனாவதாரத்தில்), ஓர் அவுணன் - ஒரு அசுரனது (ஓப்பற்ற மகாபலி சக்கரவர்த்தியின்), செம் கை - சிவந்த கையினால் தத்தஞ்செய்யப்பட்ட, நீர் - தான ஜலத்தை, ஏற்று - (கையில்) பெற்று, மூ உலகம்உம் - மூன்று லோகங்களையும், உடன் - ஒருசேர, கவர்ந்தோன் - (அவனிடத்தினின்றும்) பறித்துத் தன்வசப்படுத்திக் கொண்டவனாகிய கண்ணன், ஆங்கையால் - தன் அகங்கையினால், ஏற்றான் - (அந்நீரை) ஏற்றுக் கொண்டான், (எ- று.) (332) |