பக்கம் எண் :

174பாரதம்கன்ன பருவம்

242.-வேதியன்நீ வேண்டும்வரங்கேளென்ன, இனி
எப்பிறப்பினும் இரப்பார்க்கு இல்லையென்னாமையைக்
கர்ணன்வேண்டுதல்.

மல்லலந்தொடையனிருபனைமுனிவன்மகிழ்ந்துநீவேண்டிய
                                       வரங்கள்,
சொல்லுகவுனக்குத்தருதுமென்றுரைப்பச்சூரன்மாமதலையுஞ்
                                     சொல்வான்,
அல்லல்வெவ்வினையாலின்னமுற்பவமுண்டாயினுமேழெழு
                                         பிறப்பு,
மில்லையென்றிரப்போர்க்கில்லையென்றுரையாவிதயநீயளித்
                                   தருளென்றான்.

     (இ-ள்.) முனிவன் - பிராமணன், மகிழ்ந்து - சந்தோஷித்து, மல்லல் -
வளப்பத்தையுடைய, அம் - அழகிய, தொடையல் - மாலையைச் சூடிய, நிருபனை -
கர்ணராஜனை நோக்கி, 'நீ வேண்டிய வரங்கள்-நீ விரும்பின வரங்களை, சொல்லுக
- சொல்லுவாயாக; உனக்கு-,தருதும்-கொடுப்போம்,' என்று உரைப்ப-என்று சொல்ல,-
சூரன் மா மதலைஉம் - சிறந்த சூரியபுத்திரனான கர்ணனும் சொல்வான் - உத்தரஞ்
சொல்பவனாய்,-'அல்லல்-பிறவித் துன்பங்களுக்குக் காரணமான, வெம் வினையால் -
கொடிய கருமத்தினால், இன்னம்- இன்னமும், உற்பவம் - பிறப்பு, உண்டாயின் உம்
- உண்டானாலும் ஏழ் ஏழு பிறப்புஉம் - எழுமையையுடைய எழுவகைச்
சன்மங்களிலும், இல்லை என்று இரப்போர்க்கு - (வறுமையால்) ஒரு பொருளும்
இல்லையென்று சொல்லி யாசிப்பவர்களுக்கு, இல்லை என்று உரையா -
(வைத்துக்கொண்டே நீ கேட்கும் பொருள் இப்பொழுது என்னிடம்)
இல்லையென்றுசொல்லி லோபஞ்செய்யாத,- இதயம் - நல்லமனத்தை, நீ-,
அளித்தருள் - (எனக்குக்)கொடுத்தருள்வாயாக,'  என்றான் - என்று சொன்னான்;
(எ - று.)                                                      (333)

243.-வேண்டியவரத்தைக் கொடுத்து முத்தியையும் பெறுமாறு
 ஸ்ரீக்ருஷ்ணண் வரம் அளித்தல்.

மைத்துனனுரைத்தவாய்மைகேட்டையன்மனமலருகந்தந்தவனைக்
கைத்தலமலரான்மார்புறத்தழுவிக் கண்மலர்க்கருணைநீராட்டி
யெத்தனைபிறவியெடுக்கினுமவற்று ளீகையுஞ்செல்வமுமெய்தி
முத்தியும்பெறுமுடிவிலென்றுரைத்தான்மூவருமொருவனாமூர்த்தி.

     (இ-ள்.) மூவர்உம் ஒருவன் ஆம் மூர்த்தி - திரிமூர்த்திகளும் ஒரு
மூர்த்தியானவடிவமுடையவனாகிய, ஐயன் - பிராமணன்,-மைத்துனன் - (தனது)
அத்தைபிள்ளையாகிய கர்ணன், உரைத்த - சொன்ன, வாய்மை - உண்மையான
வார்த்தையை, கேட்டு-, மனம் மலர் உகந்து உகந்து - இருதயகமலம் மிகவும்
மகிழ்ந்து, கைத் தலம் மலரால் - பூப்போல் மெல்லிய (தனது)  கைகளினிடங்களால்,
மார்பு உற - மார்பிலே, அழுந்தும்படி, அவனை - அக்கர்ணனை,  தழுவி -
ஆலிங்கனஞ்செய்துகொண்டு,-கண் மலர் - செந்தாமரைமலர்போலுங் கண்களினிறுந்
தோன்றுகிற, கருணை நீர் - அருளாகிய நீர் வெள்ளத்தால், ஆட்டி -
ஸ்நானஞ்செய்வித்து,- (அவனை நேக்கி 'நீ), எத்தனை பிறவி எடுக்கின் உம் -
எத்தனைஜன்மமெடுத்துப் பிறந்தாலும், அவற்றுள் - அப்பிறப்புக்களுள், 
ஈகைஉம் -தானஞ்  செய்தலையும், செல்வம்உம்-செல்வத்தையும், எய்தி -
அடைந்து முடிவில் -(அப்பிறப்புக்களின்) முடிவிலே, முத்திஉம் -