பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்175

மோக்ஷத்தையும் பெறுதி - பெறுவாய்,' என்று உரைத்தான் - என்று சொன்னான்;
(எ-று.)

     தந்தையாகிய வசுதேவருக்கு உடன்பிறந்தவளாதலால், குந்தி கண்ணனுக்கு
அத்தையாவள்; அவள்மகனாதலால், கன்னன் கண்ணனுக்கு மைத்துனனாயினான்;
அத்தைமைந்தனை 'மைத்துனன்'என்பது, முற்காலத்துவழக்கம்போலும்.
பிரமனதுவடிமாய் உலகங்களைப் படைத்தலுந் தானானநிலையில் நின்று காத்தலும்
உருத்திர சொரூபியாகி அழித்தலுஞ் செய்யுந் திருமாலின் அவதாரவிஷேமாகிய
கண்ண னென்று, 'மூவருமொருவனாமூர்த்தி' என்பதற்குக் கருத்து.      (334)

244.-கர்ணன் கண்கினிப்ப, வேதியன் நிஜவடிவத்தைக்
காட்டுதல்.

போற்றியகன்னன்கண்டுகண்களிப்பப்புணரிமொண்டெழுந்தகார்
                                         முகிலை,
மாற்றியவடிவும்பஞ்சவாயுதமும் வயங்குகைத்தலங்களுமாகிக்
கூற்றுறழ்கராவின்வாயினின்றழைத்த குஞ்சரராசன்முனன்று,
தோற்றியபடியேதோற்றினான்முடிவுந்தோற்றமுமிலாத
                                   பைந்துளவோன்.

     (இ-ள்.) முடிவுஉம் தோற்றம்உம் இலாத - இறத்தலும் பிறத்தலு
மில்லாத(நித்தியமாகிய), பைந் துளவோன்-பசிய திருத்துழாய் மாலையையுடைய
கண்ணன், போற்றிய கன்னன் - (தன்னைத்) துதித்த கர்ணன் கண்டு - சேவித்து,
கண்களிப்ப - கண்கள் களிப்படையும்படி, புணரி மொண்டு எழுந்த கார் முகிலை -
கடல் நீரை (வயிறு நிரம்ப)  முகந்துகொண்டு (ஆகாயத்தில்) எழும்பிய
கார்காலத்துக்காளமேகத்தை, மாற்றிய - (தனக்கு ஒப்பாகாதென்று) நீக்கின
(மிகக்கரிய) வடிவுஉம் -திருமேனியும,்  பஞ்ச ஆயுதம்உம் வயங்கு - 
ஐம்படைகளும் விளங்குகிற, கைத்தலங்கள்உம் - திருக்கையிடங்களும், ஆகி-,
கூற்று உறழ் - யமனை ஒத்த(மிகக்கொடிய) கராவின் - முதலையினது, வாயின் -
வாயிலே, நின்று -அகப்பட்டுக்கொண்டு, அழைத்த - கூப்பிட்ட, குஞ்சர ராசன்
முன் -கசேந்திராழ்வான்முன்னே, அன்று - அந்நாளில், தோற்றியபடியே -
எழுந்தருளிவந்தபடியே, தோற்றினான் - சேவைகொடுத்தான்; (எ-று.)

     பஞ்ச வாயுதம் - சங்கம், சக்கரம், கதை, வாள், வில் என்பன; இவற்றிற்கு
முறையே பாஞ்சசன்னியம், சுதரிசனம், கௌமோ தகீ, நந்தகம், சார்ங்கம் என்று
பெயர்.                                                       (335)

245.- கர்ணன் நாராயணனைக் காணப்பெற்றேனென்று
அகமிகமகிழ்தல்.

அமரரா னவரு மமரயோ னிகளு மமரருக் கதிபனா னவனுங்,
கமலநான் முகனு முனிவருங் கண்டு கனகநாண் மலர்கொடு
                                       பணிந்தார்,
சமரமா முனையிற் றனஞ்சயன் கணையாற் சாய்ந்துயிர்
                                    வீடவுஞ்செங்க,
ணமலநா ரணனைக் காணவும் பெற்றே னென்றுதன் னகமிக
                                      மகிழ்ந்தான்.