(இ-ள்.) அமரரானவர்உம் - தேவர்களும், அமர யோனிகள்உம் - மற்ற தேவஜாதியிலுள்ளவர்களும், அமரருக்கு அதிபனாவன்உம் தேவராஜனான இந்திரனும், கமலம் நான்முகன்உம் - தாமரைமலரில் தோன்றிய நான்குமுகங்களையுடைய பிரமனும் முனிவர்உம் -முனிவர்களும், கண்டு - (அக்காட்சியைத்) தரிசித்து, கனகம் நாள் மலர் கொடு - பொன்மயமாகிய அன்று மலர்ந்த (கல்பகவிருக்ஷங்களின்) பூக்களைக்கொண்டு, பணிந்தார் - வணங்கி அருச்சித்தார்கள்; (கர்ணன்), சமரம் மா முனையில் - பெரியபோர்க்களத்தில், தனஞ்சயன் கணையால் ; திருக்கண்களையுடைய, அமலன் நாரணனை - குற்றமற்ற ஸ்ரீமந்நாராயணனை, காணஉம் - தரிசிக்கவும், பெற்றேன்-, என்று - என்று எண்ணி, தன் அகம் மிக மகிழ்ந்தான் - தன்மனம் மிகக்களித்தான்; (எ- று.) அமரயோனிகள் - சித்தர், கருடர், கின்னரர், கிம்புருடர், கந்தருவர், இயக்கர், விஞ்சையர், உரகர் முதலிய தேவகணங்கள், வீட- விடஎன்பதன் நீட்டல், தன்னியல்பிலே ஒருகுற்றமுஞ் சிறிதுமில்லாமை மாத்திரமேயன்றித் தனக்குச் சரீரமாகிய சராசரங்களின் சம்பந்தத்தாலாகிய குற்றஞ்சிறிதுந் தட்டாதவ னென்பது விளங்க, 'அமல நாரணன்' என்றார். (336) வேறு. 246.-இதுமுதல் நான்குகவிகள்-நாராயணனைக் காணப்பெற்று மகிழ்ந்த கர்ணன்வார்த்தை. அருந்தழன்மா மகம்புரிந்துங் கடவுட் கங்கை யாதியாம்பு னல் படிந்து மனல யோகத். திருந்துமணி மலர்தூவிப் பூசை நேர்ந்து மெங்குமா கியவுன்னை யிதயத் துள்ளே, திருந்தநிலை பெறக்கண்டும் போகமெல்லாஞ் சிறுகியனைத் துயிருக்குஞ் செய்ய வொண்ணாப், பெருந்தவங்கண் மிகப்பயின்றும் பெறுதற் கெட்டாப் பெரும்பயனின்றிருவருளாற் பெறப் பெற்றேனே. |
(இ-ள்.) அரு - அரிய, தழல் - அக்கனியில், மா மகம் - சிறந்த யாகங்களை, புரிந்துஉம் - செய்தும், கடவுள் - தெய்வத்தன்மையையுடைய, கங்கை ஆதி ஆம் - கங்கைமுதலான, புனல்-புண்ணியதீர்த்தங்களில், படிந்துஉம் - நீராடியும், அனலயோகத்து இருந்துஉம் - பஞ்சாக்கினிமத்தியில் நின்று செய்கிற அஷ்டாங்கயோகானுஷ்டான நிலைமையிற் பொருந்தியும், அணி மலர் தூவி - அழகியபூக்களையிட்டு அருச்சித்து, பூசை நேர்ந்துஉம் - பூசை செய்தும், எங்குஉம் ஆகிய உன்னை - எல்லாவிடத்தும் அந்தர்யாமியாகவுள்ள உன்னை, இதயத்துள்ளே - (தம்) மனத்தினுள்ளே, திருந்த - திருத்தமாக, நிலைபெற - வந்துநிலைபெற்று வீற்றிருக்க, கண்டுஉம் - தரிசித்தும், போகம் எல்லாம் சிறுகி - இன்பமெல்லாங்குறைந்து, அனைத்து உயிருக்குஉம் - எல்லாவுயிர்களுக்கும், செய்யஒண்ணா-செய்தற்கருமையான, பெரு தவங்கள் - பெரிய தபசுகளை, மிக பயின்றுஉம்- மிகுதியாகச்செய்தும், பெறுதற்கு எட்டா - பெறு |