யாகப் பெருகியதாதலால் 'வான்பெற்ற நதிகமழ்தாள்' என்றும், திருமாலின் திருவுள்ளத்தினின்றுஞ்சந்திரன் தோன்றினானென்று வேதத்திற் கூறப்படுதலால் 'மதிபெற்ற திருவுளம்' என்றுங்கூறினான். (340) 250.- இதுவும் மேலைக்கவியும் - கவசகுண்டலம் வாங்கச்செய்தமை முதலியன என்செயலே என்று சொல்லி ஸ்ரீகிருஷ்ணன் தன் பாகுதொழிலுக்குச் செல்லுதலைத் தெரிவிக்கும். என்றுமகிழ்வுறவணங்குமெல்லிமைந்த னின்புறவண்புறவினிலா னிரையின்பின்போய், கன்றுகொடுவிளவெறித்தகண்ணன்றானுங்கன்னனுக்குக் கட்டுரைப்பான்கடவுணாத, னன்றுனதுகவசமுங்குண்டலமும்வாங்கவழைத்தேனுங் குந்தியைக்கொண்டரவவாளி, யொன்றொழியத்தொடாதவரங்கொள்வித்தேனுமுற்பவத் தினுண்மையுனக்குணர்வித்தேனும். |
(இ-ள்.) என்று - என்றுசொல்லிப்புகழ்ந்து, மகிழ்வு உற - களிப்பு மிக, வணங்கும் - நமஸ்கரிக்கிற, எல்லி மைந்தன் - சூரியகுமாரனான கர்ணன், இன்பு உற- இன்பமடைய, வண் புறவினில்-வளப்பத்தையுடைய முல்லை நிலத்திலே, ஆன்நிரையின் பின் போய் - பசுக்கூட்டத்தை மேய்த்துக்கொண்டு அதன்பின்னே சென்று,கன்று கொடு விள எறிந்த - கன்றினால் விளாமரத்தை வீசியடித்த, கண்ணன்தான்உம் - கிருஷ்ணனும், கன்னனுக்கு-, கட்டுரைப்பான் - உறுதியாகச்சொல்பவனாய்,- கடவுள் நாதன் - தேவேந்திரன், அன்று - அந்நாளில், உனது-, கவசம்உம் - கவசத்தையும், குண்டலம்உம் - குண்டலங்களையும், வாங்க - தானமாகப் பெறும்படி, அழைத்தேன்உம் - (அவனை) வரவழைத்தவனும்,-அரவம் வாளி - நாகாஸ்திரத்தை, ஒன்று ஒழிய - ஒருதரமேதவிர (மறுபடியும்), தொடாத - (அருச்சுனன்மேற்) பிரயோகிக்க வொட்டாத, வரம் - வரதத்தை, குந்தியைக் கொண்டு-,கொள்வித்தேன்உம் - பெறச்செய்தவனும், உற்பவத்தின் உண்மை - (உன்) பிறப்பின்நிச்சயத்தை, உனக்கு-, உணர்வித்தேன்உம் - அறிவித்தவனும்,- (எ-று.) எல்லி - ஒளியையுடையவன், எல் - ஒளி, கண்ணன் பாண்டவதூதனாய் அத்தினபுரிக்குச் சென்றபொழுது கர்ணனுக்குத் தானே நேராகவுங் குந்தியைக் கொண்டும் பிறப்பை உணர்த்தினான். (341) 251. | தக்ககன்றன்மகவானவுரகவாளி தனஞ்சயனைச்சதியாமற் சாய்வித்தேனு, மெய்க்கருணைநின்பொருட்டால்யானேயென்று மீண் டும்போய்த்தேர்வலவன்விசயற்கானா, னெக்கடலுமெக்கிரியுமெல்லாமண்ணுமிமையோருமானுடரு மெல்லாமாகி, மைக்கணிளங்கோவியர்நுண்டுகிலுநாணும்வரிவளையுமட நெஞ்சும்வாங்குமாலே. |
(இ-ள்.) தக்கன் தன் - தக்ஷகனது, மகவு ஆன - பிள்ளையாகிய, உரகம் வாளி- நாகாஸ்திரம், தனஞ்சயனை - அருச்சுனனை, சதியாமல் - அழிக்காதபடி, சாய்வித்தேன்உம் - (அவன்தேரைநிலத்தில்) அழுந்தச்செய்தவனும், நின் பொருட்டு உனக்காக, |