பக்கம் எண் :

18பாரதம்கன்ன பருவம்

30.- கர்ணன் தேரிலேற நகுலனும் தேரிலேறுதல்.

இழியுமளவையின்வினையுடைவலவனொ ரிரதம்விரைவொடு
                               கொடுவரவிரிகதிர்.
பொழியுமிளவெயிலிரவிமுனுதவிய புதல்வன்விற
                            லொடுபுகுதலுமுயர்பரி,
யொழியநகுலனுமொருதனிரதமிசையுபரிசர
                            ரெனவுரனொடுபுகுதர,
விழியின்மணிநிகர்வலவனும்வலவனும்விசைய
                      குரகதம்விசையொடுகடவவே.

     (இ-ள்.) இழியும் அளவையின் -(கர்ணன் குதிரையினின்று)
இறங்கியமாத்திரத்தில்,- வினை உடை வலன் -(தனக்கு உரியவனான
அக்கர்ணனது)தேர்த்தொழிலிலே வல்ல சாரதி, ஒர் இரதம். ஒருதேரை,
விரைவொடு - வேகத்தொடு,கொடு வர - கொண்டுவரவே, - விரி கதிர் 
பொழியும் இள வெயில் -மிக்ககிரணங்களைச்சொரிகிற இளமையான
வெயிலையுடைய, இரவி முன் உதவியபுதல்வன் - சூரியன் முன்னே பெற்ற
குமாரனாகிய அக் கர்ணன், விறலொடுபுகுதலும் - வலிமையோடு(அத்தேரில்)
ஏறியவளவில்,- நகுலனும்-, உயர் பரி ஒழிய -உயர்ந்த(தன்) குதிரை நீங்கும்படி,
(அதனைவிட்டு) [தான் ஏறியிருந்த குதிரையைவிட்டு என்றபடி]. ஒரு தன் இரதம்
மிசை - தனது ஒரு தேரின் மேல், உபரிசார் என- மேலே [ஆகாயத்தில்]
சஞ்சரிக்கிற தேர்கள் போல, உரனொடு - வலிமையோடு ,
புகுதர- ஏறிநிற்க,- விழியின் மணி நிகர்-( அவர்வர்க்குக்) கண்ணின் கருமணி
போன்ற[மிக அருமையான], வலவன்உம் வலவன்உம் - தேர்ப்பாக ரிருவரும்,
விசையகுரகதம் - வெற்றியையுடைய (தேர்க்) குதிரைகளை, விசையொடு -
வேகத்தோடு, கடவ - செலுத்த,-(எ-று.)-உபரிசரர் எனப் பன்மையாற்
கூறினது,கர்ணனுக்கும் உவமையாதற் பொருட்டென்க.                (30)

31.- கர்ணனும் நகுலனும் பொருதல்.

கடவுமிரதமுமிரதமுமுருள்கதி கடுகவருதலுமிருவருமிருசிலை,
யடரவளைவுறநொடியினிலெயிறுடையயில்கொள்பகழிகளள
                                     விலசிதறினர்,
புடவியுறவகல்வெளிமுழுவதுமிவர் பொழியுமழையெழுபுயன்
                                   மழையெனவிழ,
வுடலமுகுகுருதியினனையினரரு குதவிசெயவருதரணி
                                     பருருளவே.

     (இ-ள்.) கடவும் -(அப்பாகர்களாற்) செலுத்தப்படுகின்ற இரதம்உம்
இரதம்உம் -அத்தேரிரண்டும், உருள் - சக்கரங்களால், கதி கடுக -
நடைவிரைவுபெற, வருதலும்- வந்தவிளவில்,- இருவர்உம் - கன்னனும் நகுலனும்,
இரு சிலை - (தம்) வில்இரண்டும், அட வளைவு உற - நன்றாக வளைவு பெற
(வளைத்து), எயிறு உடை -பற்களையுடைய, அயில் கொள் - கூர்மையைக்
கொண்ட, அளவு இத -அளவில்லாதவையாகிய, பகழிகள் - அம்புகளை,
நொடியினில் -ஒருமாத்திரைப்பொழுதிலே, சிதறினர் - சிந்தினார்கள்: இவர் -
இவர்கள், அகல்வெளி முழுவதுஉம்- பரந்த ஆகாயத்தினிடம் முழுவதிலும்,
பொழியும் - சொரிகிற,மழை என - ஏழுமேகங்களின் மழைபோல, விழ -
விழுவதனால், - உதவி செயஅருகு வரு தரணிபர் - (அவ்விருவர்க்கும்
போரில்) துணை