அகல் உலகில் வீரர்எலாம் - பரந்த உலகங்களிலுள்ள வீரர்கள்யாவரும், மதிக்க - (தன்னைக்) கௌரவிக்கும்படி, எய்தான்-, அந்த ஆசுகம் - அந்த அம்பு, தகல்உடையார் மொழிபோல - (ஞானஒழுக்கங்களினால்) தகுதியையுடைய முனிவரது சாப அனுக்கிரகவார்த்தைகள் போல, தப்பாமல் - (சிறிதும்) தவறாதபடி, உருவி - (மார்பைத்) துளைத்துக் கொண்டு அப்பால்ஓடி - பின்னே விரைந்து சென்று,தரணியூடு - பூமியிலே, குளித்தது - விழுந்து அழுந்திற்று; அவன் தான்உம் -கர்ணனும், வீழ்ந்தான்-கீழே விழுந்தான்: (எ-று.) (343) 253.- கர்ணன் நிலைமை. கருடனதுதிருத்தோளிற்கண்டகோலங் கண்ணினுநெஞ்சினுநிற் கக்கருணையாதி, புருடனதுதிருநாமந்தனதுநாவிற் போகாமனனிவிளங் கப்புதைந்துவாளி, வருடமுடல்குளிர்விக்கச்செம்பொற்றேர்மேன்மன்னரெலாம் புடைசூழவையங்காக்குங், குருடன்மகனருகிருந்துசோகங்கூரக்குற்றுயிரினுடன்கிடந்தான் கொடையான்மிக்கோன். |
(இ-ள்.) கருடனது - பெரியதிருவடியின், திரு தோளில் - அழகிய தோள்களின்மேல், கண்ட - காணப்பட்ட, கருணை - அருளையுடைய, ஆதிபுருடனது - [யாவர்க்கும்] முதல்வனும் புருஷோத்தமனுமாகிய எம்பெருமானது. கோலம் - திவ்வியசொரூபம், கண்ணின்உம் - (தனது) கண்களிலும், நெஞ்சின்உம் - மனத்திலும், நிற்க - நிலைபெற்றிருக்கவும், திருநாமம் - [அக்கடவுளது] சிறந்த பெயர்,தனது நாவில் - தன்நாக்கில்நின்றும் - போகாமல்- நீங்கிப்போகாதபடி, நனி விளங்க- நன்றாகவிளங்கவும், வாளிவருடம் - பாணவருஷம், புதைந்து - மேலேஅழுந்தி,உடல் - உடம்பை, குளிர்விக்க - குளிரச் செய்யவும். மன்னர் எலாம் -அரசர்கள்யாவரும், புடைசூழ - பக்கங்களிற் சூழ்ந்து நிற்கவும், வையம் காக்கும் -பூமியை அரசாளுகிற, குருடன் மகன் - பிறவிக்குருடனாகிய திருதராட்டிரனதுமைந்தனான துரியோதனன், அருகு இருந்து - பக்கத்திலே யிருந்து, சோகம் கூர -துன்பம் மிகவும், கொடையால் மிக்கோன் - தானத்தால்மிகுந்தவனான கர்ணன், செம்பொன் தேர்மேல் - சிவந்த பொன்னாலாகிய தேரில், குறு உயிரினுடன் -குறைப்பிராணனோடு, கிடந்தான் - விழுந்திருந்தான்; (எ - று.) வீரர்களெல்லாஞ் சிறந்தபுண்களை விரும்புவராதலால், 'வாளிவருடமுடல் குளிர்விக்க' என்றார். (344) 254.-கர்ணன் குற்றுயிருடனிருப்பதை அசரீரியாலறிந்து குந்திதேவி கதறிக்கொண்டு களங்குறுகுதல். முந்தியெதிர்பொரும்விசயன்றொடுத்தகோலான் முடிசாய்ந்தின் றைவருக்குமுன்னோன்வீழ்ந்தா, னந்திபடுவதன்முன்னேயாவிபோமென்றசரீரியெடுத்துரைப் பவன்னையான, குந்திதனதுளமுருகக்கண்ணீர்சோரக்குழல்சரியப்போர்க் களத்துக்கோகோவென்று, வந்திருகைதலைப்புடைத்துத்தலைநாளீன்றமகவின்மேல்வீழ்ந் தழுதாண்மன்னோமன்னோ. | |