பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்183

     கன்னிமாடம் - கலியாணமாகாத பெண்கள் வசித்தற்கு ஏற்படுத்திய இடம்
பெட்டகம் - பேடகம் என்னும் வடமொழித்திரிபு. கண்ணன் சொல்லக்கேட்டதனால்,
கேட்டு' என்றாள்.                                             (346)

256.ஓரஞ்சுபேருளராலறந்தவாத வுதிட்டிரானாதியருரகக்கொடி
                                   யோனாதி,
யீரஞ்சுபதின்மருளர்தம்பிமார்க ளிங்கிதங்களறிந்தடைவே
                              யேவல்செய்யப்,
பாரஞ்சுமொருகுடைக்கீழ்நீயேயாளும் பதமடைந்
                  தும்விதிவலியாற்பயன்பெறாமற்,
காரஞ்சுகரதலத்தாயந்தோவந்தோகடவுளர்தம்மாயையினாற்
                                கழிவுற்றாயோ.

     (இ - ள்) கார் அஞ்சு  கரதலத்தாய் - (கைம்மாறுகருதாமற்
பேருதவிசெய்தலால்) மேகமும் அஞ்சுகின்ற கைகளின் இடத்தையுடையவனே!
(உனக்கு), அறம் தவாத - தருமநிலைதவறாத, உதிட்டிரன் ஆதியர் -
தருமபுத்திரன்முதலியவர்களாகிய,  ஓர் அஞ்சு பேர் -  ஒப்பற்ற ஐந்துபெயர்
(தம்பிமார்கள்), உளர்- இருக்கின்றனர்; உரகம் கொடியோன் ஆதி -
பாம்புக்கொடியையுடையதுரியோதனன் முதலான, ஈர் அஞ்சு பதின்மர் -
நூறுபெயர், தம்பிமார்கள்-, உளர்-;(இவர்களெல்லாம்), இங்கிதங்கள் - (உன்)
குறிப்புக்களை, அறிந்து - தெரிந்து,அடைவே-முறைப்படி, ஏவல் செய்ய-(நீ) ஏவின
தொழில்களைச் செய்யும்படி, பார் -பூமிமுழுவதையும், அஞ்சும் - (யாவரும்)
அஞ்சும்படியான, ஒரு குடைக்கீழ்-ஒப்பற்றகுடையின் கீழே, நீஏ - நீ ஒருவனாகவே,
ஆளும் - அரசாளும்படியான, பதம் -நிலைமையை, அடைந்துஉம்-
அடைந்திருந்தும், விதிவலியால் - (முற்பிறப்பிற்செய்த)ஊழ்வினையின் பலத்தினால்,
பலன் பெறாமல் - பயனை அடையாமல், கடவுளர் தம்மாயையினால் தேவர்களின்
வஞ்சனையால், கழிவுற்றாய் - மரணமடைந்தாய்;அந்தோ அந்தோ -ஐயோ! ஐயோ!
(எ - று.)-ஏகாரம் - இரக்கம்.

     தம்பிமார்களென்பது, முன்வாக்கியத்திலுங் கூட்டப்பட்டது. ஈரஞ்சுபதின்மர் -
பண்புத்தொகைப் பன்மொழித்தொடர், இங்கிதம் அறிதல் - ஒருவன் மனக்கருத்தை
முகம் கண் புருவம் முதலியவற்றின் குறிப்பினால் அறிந்துகொள்ளுதல். ஆளும்
பதம்என்றது - இந்நூற்றைவருக்கும் மூத்தவனாய்ப்பிறந்ததை ஒரு குலத்தில்
மூத்தவனுக்கே அரசாட்சி உரிய தென்பது நீதிநூல் துணிபாதலால், இங்ஙனங்
கூறியது, பயன்பெறுதல் - சக்கரவர்த்தியாதல், கடவுளர், இந்திரன் திருமால்
முதலியவர்.                                                  (347)

257.- குந்தியின் அன்பின்செயல்.

என்றென்றே யமர்க்களத்தி னின்ற வேந்தர் யாவருங்
                   கேட் டதிசயிப்ப வேங்கி யேங்கி,
யன்றன்போ டெடுத்தணைத்து முலைக்க ணூற
               லமுதூட்டி நேயமுட னணித்தா வீன்ற,
கன்றெஞ்ச வினைந்தினைந்துமறுகா நின்ற கபிலையைப்போ
                      லென்பட்டாள் கலாபம் வீசிக்,
குன்றெங்கு மிளஞ்சாயன் மயில்க ளாடுங் குருநாடன்
                           றிருத்தேவி குந்திதேவி..

     (இ-ள்.) குன்று எங்குஉம் - மலையில் எவ்விடத்தும், இள-இளமையாகிய,
சாயல் - மென்மையையுடைய, மயில்கள்-, கலா