பம் வீசி - தோகையை விரித்துக்கொண்டு, ஆடும் - கூத்தாடுகிற, குரு நாடன் - குருநாட்டையுடைய பாண்டுவினது, திரு தேவி-மேலானமனைவியாகிய, குந்திதேவி - குந்தியென்னும் ராஜபத்தினி, என்றுஎன்று - என்றுஇவ்வாறு பலசொல்லி, அமர் களத்தில் நின்ற வேந்தர் யாவர்உம் - போர்க்களத்தில் நின்ற அரசரெல்லாரும், கேட்டு அதிசயிப்ப-செவியுற்று (இது என்னவென்று) வியக்கும்படி, ஏங்கி ஏங்கி - மிகப்புலம்பி, அன்று - அப்பொழுது, அன்போடு, அன்புடனே எடுத்து அணைத்து - (கைகளால்) எடுத்துத்தழுவிக்கொண்டு, முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி - தனங்களிற் சுரக்கிற பாலை உண்பித்து, நேயமுடன் - அன்போடு, அணித்து ஆ - சமீபகாலத்தில், ஈன்ற - பெற்ற, கன்று- ஏஞ்ச இறக்க, இனைந்து இனைந்து - மிகவருந்தி, மறுகாநின்ற - கலங்குகிற, கபிலையை போல் - பசுவைப்போல, என் பட்டாள் - என்னவருத்தப்பட்டாள்!!! (மிகவும் வருந்தினள் என்றபடி); (எ- று.) அதிசயித்தல் - கர்ணனுக்குக் குந்தி தாயென்று எவருக்கும் இதுவரையிலுந் தெரியாததனா லென்க, மிக்க அன்பினால் தனங்களிற் பால் சுரந்தது, குந்தி இங்ஙனஞ்செய்தது-முன் கர்ணனிடஞ்சென்று நாகாஸ்திரத்தை அருச்சுனன்மீது இரண்டாமுறை விடாதபடியும் மற்றைத்தம்பிமார்களைக் கொல்லாதபடியும் இரண்டு வரங்கேட்டு வாங்கினபொழுது, அவனும் இவளை 'யான் போர்க்களத்தில் இறக்கும்போது யாவரும் அறிய எனக்கு முலைப்பாலுட்டி யான் உமதுபிள்ளை யென்பதைப் புலப்படுத்தவேண்டும்' என்றும். போர்முடியுமட்டும் பஞ்சபாண்டவரு முட்பட எவர்க்கும் நான் உமக்கு மகனென்பதைப் புலப்படுத்தாதிருத்தல் வேண்டு மென்றும். இரண்டுவரங்கேட்டு வாங்கினனாதலால். (348) வேறு. 258.-கர்ணனாவிவிண்ணுலகஞ் சேர்தல். அன்னைமடி யினுங்கரத்து முடல்கிடப்ப வங்கர்பிரா னாவி தாதை, தன்னைமரு வுறத்தழுவித் தானமுறக் கிளர்ந்ததவண் டடுமாறாமன், மின்னைவலி யுறநீட்டி யண்டமுக டசையாமல் விண்ணோர் தச்சன், பொன்னையழ கெழப்பூசி யொளிபிறங்கநாட்டியதோர் பொற்றூணொத்தே. |
(இ-ள்.) அன்னை - தாயாகிய குந்தியின், மடியின்உம்-மடியிலும், கரத்துஉம் -கைகளிலும், உடல் - அவனுடம்பு, கிடப்ப - பொருந்தியிருக்க,- அங்கர் பிரான் -அங்கநாட்டார்க்குத்தலைவனான கர்ணனது, ஆவி-உயிர், அவண் தடுமாறாமல் -அங்கே அலையாதபடி, விண்ணோர் தச்சன் - தேவர்களது சிற்பியான விசுவகர்மா,அண்டம் முகடு அசையாமல் - அண்டகோளத்தின் மேல்முகடு சலியாதபடி,மின்னை-மின்னலை, வலி உற - வலிமை பொருந்த, நீட்டி - நீள வடிவமாக்கி,பொன்னை அழகு எழ பூசி - (அதன்மேற்) பொன்னை அழகு உண்டாம்படி பூசி,ஒளி பிறங்க-ஒளி விளங்கும்படி, நாட்டியது - நேராக நிறுத்தியதாகிய, ஓர் - ஒரு,பொன் தூண் - அழகிய கம்பத்தை, ஒத்து - போன்று [ஒளிவடிவமாகி], |