தாதை தன்னை மருவுற தழுவி - தந்தையாகிய சூரியனைச் சேருமாறு பொருந்தி, தானம் உற மேலுலகத்து உயர்ந்தபதவிலேயே சேர, கிளர்ந்தது - எழுந்துவிளங்கிற்று; (எ - று.) இடையிலே சூரியமண்டலத்தைப் பேதித்துக்கொண்டு அதன் வழியே சென்று சுவர்க்கஞ்சேர வேண்டுதலால், 'ஆவி தாதை தன்னை மருவுறத்தழுவித் தானமுறக் கிளர்ந்தது' என்றார். தச்சன்-தக்ஷன் என்னும் வடமொழித்திரிபு, பின் இரண்டடி - தற்குறிப்பேற்றவணி. இதுமுதற் பன்னிரண்டுகவிகள் - கடையிருசீரும் மாச்சீரும், மற்றை நான்குங் காய்ச்சீருமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள். (349) 259.- துரியோதனன்சேனை வற்றியதைப் பற்றிய கவிக்கூற்று. மருத்துதவவருசண்டமருத்தாலுமருத்துவான்வழங்குஞ்சோதி யுருத்திகழுங்கரியசுடருருத்தெழுவெங்கனலாலுமுகாந்தந்தன்னி னிருத்தமிடும்பெரும்பவ்வநெடுநீத்தம்வறப்பதுபோனிருபன்சேனைப் பெருத்தகடல்சுவறியவப்பெருமைதனையெப்படிநாம்பேசுமாறே. |
(இ-ள்.) மருத்து - வாயுபகவான், உதவ - அருள்செய்ததனால், வரு - பிறந்த, சண்ட மருத்தால்உம் - கடுங்காற்றுப்போன்ற வீமனாலும், மருத்துவான் வழங்கும் - இந்திரன்பெற்றருளின, சோதி உருதிகழும் - ஒளியோடு கூடிய வடிவம் விளங்கப்பெற்ற, கரிய சுடர்- கருத்த நிறத்தையுடைய, உருத்து எழு - பற்றியெரிகிற, வெம்-கொடிய கனலால்உம் - நெருப்புப்போன்ற அருச்சுனனாலும், உகாந்தந் தன்னில் - யுகமுடிவு காலத்தில், நிருத்தம் இடும் - (பொங்கியெழுதலால்) கூத்தாடுகிற,பெரு பவ்வம் - பெரியகடலின், நெடுநீத்தம் - மிகுந்த நீர்வெள்ளம், வறப்பதுபோல் -வறந்து போவதுபோல், நிருபன் சேனை பெருத்த கடல் - துரியோதனனதுசேனையாகிய பெரிய கடல் சுவறிய - வறந்துபோன, அ பெருமைதனை -அந்தப்பெருங்காரியத்தை, நாம்-, பேசும் ஆறு-சொல்லும் விதம், எப்படி -எவ்வாறோ? (பேசுதற்கு அரிதென்றபடி); (எ- று.) யுகாந்தகாலத்திற் காற்றும்நெருப்புஞ் சேர்ந்து கடலை வறளச் செய்வதுபோல இப்பொழுது வீம அருச்சுனர்கள் சேர்ந்து துரியோதனன் சேனையாகிய கடலை வறளச்செய்தனரென்பது, கருத்து, மருத்துவான் - தேவர்களையுடையவன், மருத் - தேவர், அருச்சுனனது நிறங் கருமையாதலால், 'கரிய சுட ருருத்தெழுவெங்கனல் என்றார். (350) 260.-இதுவும் மேற்கவியும்-துரியோதனன் புலம்பலைத் தெரிவிக்கும். அணையார்தம்படைக்கடலினருநிலைக்குக்கரையேறலானகோலப், புணையாயெத்திறங்களினும்பகிராமலுற்றதெலாம்புகலத்தக்க,துணையா யென்னுயிர்க்குயிராந்தோழனுமாகியவுன்னைத்தோற்றேனாகில், இணையாருமிலாவரசேயாரைக்கொண்டரசாளவிருக்கின்றேனே. |
|