பக்கம் எண் :

186பாரதம்கன்ன பருவம்

     (இ-ள்.) இணை யார்உம் இலா - ஓப்பு எவரும் இல்லாத, அரசே - அரசனே!
அணையார் தம் - (நம்மோடு) சேராத பகைவர்களது, படை கடலின் - சேனையாகிய
சமுத்திரத்தின், அரு நிலைக்கு - (கடப்பதற்கு) அரிய பரப்புக்கு, கரை ஏறல் ஆன
அக்கரையை அடைவதற்குப் பொருந்திய, கோலம் - அழகிய, புணை ஆய் -
தெப்பமாகி, எ திறங்களின்உம் - எல்லாவகைகளிலும், உற்றது எலாம் - நேர்ந்த
இன்பதுன்பங்களெல்லாவற்ைறையும் பகிராமல் - பேதமில்லாமல், புகல தக்க -
சொல்லுதற்குத்தகுந்த, துணை ஆய் - துணைவனாகி, என் உயிர்க்கு உயிர் ஆம் -
எனது உயிருக்கும் உயிராகிய [மிக அருமையான], தோழன்உம் ஆகிய -
நண்பனுமான, உன்னை,-, தோற்றேன் ஆகில் - இழந்த பின்பு, யாரை கொண்டு
அரசு ஆள - வேறு யாரைத் துணையாகவைத்துக்கொண்டு இராச்சியத்தை
ஆளும்பொருட்டு, இருக்கின்றேன்-(யான்) வாழ்ந்திருக்கிறேன்?       (351)

261.சூழ்வேலையுலகாளுஞ்சூழ்ச்சியுமிப்பெருஞ்செல்வத்து
                                 வக்குநெஞ்சால்,
வீழ்வேனோவமராடவீமனொடுதலைநாளில்விளைந்தசெற்றந்,
தாழ்வேனோவுனையொழிந்துந்தம்பியரையொழிந்துமினித்
                                  தனித்துநானே,
வாழ்வேனோவாழ்வேயென்மனவலியேவருகின்றேன்
                                 வருகின்றேனே.

     (இ - ள்,) வாழ்வே - (எனது) எல்லாவாழ்க்கைகளுக்குங் காரணமானவனே!
என் மனம்வலியே - என் மனத்தின் வலிமைக்குக் காரணமானவனே! உனை
ஒழிந்துஉம் - உன்னை இழந்தும்,  தம்பியரை ஒழிந்துஉம் - தம்பிமார்களை
இழந்தும், இனி - இனிமேல்,  வேலை சூழ் - கடலாற் சூழப்பட்ட, உலகு -
நிலவுலகமுழுவதையும், ஆளும் - அரசாளுகிற, சூழ்ச்சிஉம் - ஆலோசனையையும்,
இ பெருஞ்செல்வம் துவக்குஉம் - இந்த அரசப் பெருஞ்செல்வத்திலுள்ள
பிணிப்பையும், நெஞ்சால்-(என்) மனத்தினால், வீழ்வேன் ஓ - விரும்புவேனோ?
(விரும்பமாட்டே னென்றபடி), (ஆயினும்), வீமனோடு -  வீமனுடனே, அமர் ஆட -
போர்புரியும்படி, தலைநாளில் விளைந்த -  இளமைக் காலத்தில்தானே
முதிர்ந்துதோன்றிய, செற்றம்-பகைமை, தாழ்வேன் ஓ - தாழப்பெறுவேனோ? (நான்
உயிரோடிருக்கும் வரையில் அந்தச்செற்றம் என்னைவிட்டு நீங்காது என்றபடி): இனி-,
நானே தனித்து வாழ்வேன் ஓ-? (வாழேனென்றபடி): (ஆதலால்), வருகின்றேன்
வருகின்றேன் - (நானும் உன்னுடனே) வந்து விடுகின்றேன் வந்துவிடுகின்றேன்;
(எ- று.)-ஏகாரம் - இரங்கற் பொருளது-அடுக்கு, அவலம்பற்றியது.

     இனி, செற்றம் நீங்கப்பொருது என்னுயிரைமாய்த்து வீரசுவர்க்கஞ் சேர்வதே
தகுதியென்பது கருத்து.                                          (352)

262.-சூரியன் அஸ்தமித்தல்.

எனக்கொண்டுசுயோதனன்பேரிரக்கமுடனழுதரற்றவிருத்தவேந்தர்
மனக்கொண்டவருத்தமுடன்வலியிழந்தோமெனக்கலுழவானினெங்கு