பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்187

மினக்கொண்டன்முழங்குவபோலந்தரதுந்துபிமுழங்கவிமை
                                   யோரார்ப்பக்
கனக்கொண்டகதிர்புதல்வன்பாடறிந்துமூழ்கியதாற்கடலினுாடே

     (இ-ள்.) எனக்கொண்டு - என்று, சுயோதனன் - துரியோதனன், பேர்
இரக்கமுடன் - மிக்க வருத்தத்தோடு, அழுது  அரற்ற - கண்ணீர்விட்டுக் கதறவும்,-
இருந்த வேந்தர் - உடனிருந்த அரசர்கள், மனம் கொண்ட வருத்தமுடன் - (தம்)
மனத்துக்கொண்ட வருத்தத்துடன், 'வலி இழந்தோம்-வலிமையை யிழந்துவிட்டோம்,'
என கலுழ-என்றுவருந்தவும்,-வானின்-ஆகாயத்திலே, எங்குஉம்-  எப்புறத்தும்,
இனம் கொண்டல் முழங்குவ போல் - தொகுதியாகிய மேகங்கள் இடிப்பனபோல,
அந்தரதுந்துபி முழங்க - வானப்பறை ஒலிக்கவும்,- இமையோர் ஆர்ப்ப -
தேவர்கள்ஆரவாரிக்கவும்,- கனம் கொண்ட கதிர் - தொகுதியாக (ஆயிரமென்னுங்
கணக்குப்பட)க் கொண்டுள்ள கிரணங்களையுடைய சூரியன், புதல்வன் பாடு -
(தன்)புத்திரனான கர்ணனுடைய இறப்பை, அறிந்து-, கடலினூடு-மேல்கடலில்,
மூழ்கியது-;(எ - று.)

     சூரியன் அஸ்தமித்ததைத் தன்புதல்வனிறந்ததற்காகக் கடலில் மூழ்கியதாகக்
கற்பித்தார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி, வீரசுவர்க்கத்திற்கு விருந்தாகக்
கர்ணனுயிர்வருவதுபற்றி, வானப்பறை முழங்கத்தேவர்க ளார்த்தன ரென்க. 'கதிர்
மூழ்கியது' என அஃறிணையாகக் கூறியது, தேவர்களை இருதிணையாலுங்
கூறலாமாதலால். ஆல் - ஈற்றசை, பி - ம்: கனற்கொண்டகதிர்.          (353)

263.- கிருஷ்ணனை வினவிச் செய்தியறிந்து பாண்டவர்
கர்ணணைக்கிட்டுதல்.

பேரறத்தின்மகன்முதலாம்பிள்ளைகளைவருந்தம்மைப்பெற்றபாவை
யார்கயற்கண்புனல்சொரியவழுகின்றகுரலினைக்கேட்டாழியானை
யோரிமைப்பில்வினவியிடவுள்ளபடியுரைத்தற்பினுருமேறுண்ட
கூரெயிற்றுநாகம்போற்குலைகுலைந்துதம்முனைப்போய்க்குறுகினாரே.

     (இ-ள்.) பேர் அறத்தின் மகன் முதல் ஆம் பிள்ளைகள் ஐவர்உம் -
பெருமைபெற்ற தருமபுத்திரன் முதலாகிய குந்தீபுத்திர ரைவரும்,-தம்மை பெற்ற
பாவை ஆர் கயல் கண் புனல்சொரிய அழுகின்ற குரலினை கேட்டு -
தம்மைப்பெற்ற பாவைபோன்றவளான குந்திதேவி நிரம்பிய கயல்போன்ற
கண்களினின்று நீர்வடிய அழுகின்ற குரலைச் செவியேற்று, ஆழியானை வினவியிட
- (இதற்குக் காரணம்என்? என்று) ஸ்ரீக்ருஷ்ணனை வினாவ,-(அப்பிரானும்), ஓர்
இமைப்பில் உள்ளபடி உரைத்ததன்பின்,-,-(அதுகேட்ட பாண்டவர்), உரும் ஏறு
உண்ட கூர் எயிறு நாகம்போல் குலை குலைந்து - பேரிடியைச் செவியேற்ற
கூர்மையான பற்களையுடைய நாகம் நடுநடுங்குவதுபோல நடுநடுங்கி, போய் -
(தாமிருந்த இடத்தினின்றுஞ்) சென்று, தம்முனை - தமது அண்ணனான கர்ணனை,
குறுகினார். (எ-று.)                                              (354)