பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்189

தடவிப் பணிசெய்யாநிற்க , புவி ஆள - பூமியையாளும்படி, விதி - ஊழ்வினையை,
இலாதாய் - இல்லாதவனே! (எ - று.)- இது, வீமன்புலம்பல்.

     பாண்டவர் ஐவரினும் மூத்தவ னாதலால் இந்தக்கர்ணனே ஐவரும்
பணிசெய்யத் தான் அரசனாகி ஆளவேண்டும் முறையிருந்தும் அங்ஙனமின்றி
இறந்து கிடந்தது பற்றி 'ஆளவிதியிலாதாய்' என்றது.

266.ஊன்றொடுத்தயவாளியெத்தனையாயிரந்தொடுத்தேனுர
                                   கத்தானீ,
தான்றொடுத்தகடுங்கணைக்குத்தப்பினேனெனமகிழ்ந்தேன்
                                 சஞ்சரீகத்,
தேன்றொடுத்தமலரலங்கற்றினநாதன்சேயேநின்றிருமார்
                                   பத்தில்,
யான்றொடுத்தநெடும்பகழியெனைக்கெடுப்பதறிந்திலே
                            னென்செய்தேனே.

     (இ-ள்.) சஞ்சரீகம் தேன் தொடுத்த - வன்டுகளாற் சேர்க்கப்படும்
தேன்நிரம்பிய, மலர் - மலர்கொண்டுதொடுக்கப்பெற்ற, அலங்கல் -
வெற்றிமாலையணிதற்குரிய, தினநாதன்  சேயே - சூரியபுத்திரனான கர்ணணே!
ஊன்தொடுத்த வய வாளி - (பகைவரின்) மாமிசம்பொருந்திய வெற்றியுள்ள
அம்புகளை, (உன்மீது), எத்தனை ஆயிரம் தொடுத்தேன்-? (அன்றியும்),
நீதான்உரகத்தால்தொடுத்த கடுங்கணைக்கு தப்பினேன் எனமகிழ்ந்தேன் - நீ
நாகாஸ்திரத்தைவைத்து விட்ட கொடிய அம்புக்குத் தப்பினேனென்று
அகமகிழ்ந்தேன் நின் திரு மார்பத்தில் - உன்னுடைய அழகிய மார்பிலே, யான்
தொடுத்த நெடும்பகழி - யான் (இலக்காகக் குறித்து) விடுத்த கொடிய அம்புகள்,
எனை கெடுப்பது அறிந்திலேன் - எனக்கே தீமைசெய்வதாவதனை (அப்போது)
அறியாமற்போய்விட்டேன்!  என்செய்தேன் ஏ - (நான்) என்னகாரியஞ்
செய்திட்டேன்!!!  (எ - று.)-தன்பாணம் தன் அண்ணனையே கொன்றதனால்,
'எனைக்கெடுப்பதறிந்திலேன்' என்றான். இது, அருச்சுனன் புலம்பல்.   (357)

267.யாயுரைத்தல்லாதுவேறுரைத்தசரீரியென்னுந்தேவின்,
வாயுரைத்ததின்றளவுங்கேட்டிலேங்கேட்டனமேல்வாட்டமுண்டோ,
பேயுரைத்துத்தாலாட்டமுலைப்பாலோடுயிருண்டபித்தாவீண்டை.
நீயுரைத்தபிறகறிந்தோமெம்முனையின்றெமைக்கொண்டேநேர்
                                       செய்தாயே.

     (இ-ள்.) பேய் உரைத்து - பேய்ச்சி (தாயென்று  தன்னைச்)
சொல்லிக்கொண்டு, தாலாட்ட-, முலைப்பாலோடு முலைப்பாலுடனே, உயிர்
உண்ட -(அவளது) உயிரையுறிஞ்சியுண்டிட்ட, பித்தா - பித்தன்போன்றிருந்தவனே!
யாய்உரைத்தது அல்லாது - (இப்போது எமது தாய், சொன்னதல்லாமல், வேறு
உரைத்தது- வேறொருத்தர் சொன்னதையாவது, அசரீரிஎன்னும் தேவின்வாய்
உரைத்தது -அசரீரியாகியதெய்வத்தின் வாயினாற்சொல்லியதையாவது, இன்று
அளவுஉம் -இன்றைவரையிலும், கேட்டிலேம் - (கர்ணன் குந்திக்கு
மூத்தபுதல்வனென்பதுகுறித்துக்) கேட்டோ