பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்19

செய்தற்காக அருகில்வந்த அரசர்கள், உடலம்உகு குருதியின் நனையினர்-
உடம்புமுழுவதும் பெருகுகிற இரத்தத்தினால் நனைந்தவர்களாய், உருள -
(கீழேவிழுந்து) புரள,- (எ - று.)

     நகுலனுக்கு உதவிசெய்தற்காக அருகில்வந்த இராசாக்கள் கர்ணனது
அம்புமழையினாலும், கர்ணனுக்கு உதவிசெய்தற்காக அருகில்வந்த அரசர்கள்
நகுலனது அம்புமழையினாலும் புண்பட்டுக் குருதியில் நனைந்து கீழ்விழுந்து
உருளலானா ரென்க, பி - ம்:- உயர்கதி. கடுகி                     (31)

32 - கர்ணநகுலரது தேர்முதலியன அழிதல்.

இருவர் பரிகளு முரனுற முழுகின விருவர் வலவரும்
                           விழவெரி கதுவின,
விருவ ரிரதமு மழியமுன் முடுகின விருவர் துவசமு
                            மறவிசை கடுகின,
விருவர் சிலைகளு நடுவற மருவின விருவர் கவசமு
                        மிடையுடை கெழுமின,
விருவர் கவிகையு மறிதர வருடின விருவ ருடலமு
                        மெழுதின கணைகளே.

     (இ-ள்.) கணைகள் - (கர்ணனும் நகுலனும் தம்மில் ஒருவர்க்கொருவர்
எதிராகஎய்த) அம்புகள்,- இருவர் பரிகள்உம் - இருவர் தேர்க்குதிரைகளின்
உடம்பிலும்,உரன் உற - வலிமைபொருந்த, முழுகின - செருகின; இருவர்
வலவர்உம் -இருவர்தேர்ப்பாகரும், விழ - இறந்துகீழ்விழும்படி, எரி கதுவின -
நெருப்புப்போலபற்றின; இருவர் இரதம்உம் - இருவர்தேரும், அழிய -
அழியும்படி, முன் முடுகின -விரைந்து ஊடுருவின; இருவர் துவசம்உம்- இருவர்
கொடிகளும், அற - அறும்படி,விசை கடுகின - வேகமாய்ச் சென்றன; இருவர்
சிலைகள்உம் - இருவர்விற்களும்,நடு அற - நடுவில் அற்றுப்போம்படி, மருவின -
பொருந்தின; இருவர் கவசம்உம்- இருவர்கவசங்களிலும், இடை இடை -
இடையிடையே, கெழுமின - தைத்தன;இருவர கவிகைஉம் - இருவர்குடைகளும்,
மறிதர - சாயும் படி, வருடின - தடவின;இருவர் உடலம்உம் - இருவருடம்பிலும்,
எழுதின - கிளறின: (எ -று.)- உரன்உற -மார்பிற் பொருந்த எனினுமாம். 28-
ஆம் பாடல் முதல் செயவெனெச்சங்களைஅடுக்கி, இச்செய்யுளில் 'எழுதின'
என்றுமுடிக்க.                                                  (32)

வேறு.

33.- கர்ணனும் நகுலனும் வேறுதேரேறிக் கடும்போர்
தொடங்குதல்.

கன்ன னும்பரி நகுல னுந்தம காலி னின்றிடவே
பின்ன ரும்பொரு பாகர் தந்தபி றங்கு தேர்மிசையார்
முன்ன ரம்புதொ டுத்த போரினு மும்ம டங்குபொர
மன்னர் யாரும திக்கு மாறுதொ டங்கி னாரமரே.

     (இ-ள்.) கன்னனும்-, பரி - குதிரைத்தொழிலில் வல்ல, நகுலனும்-,(தேரழிந்து),
தம காலின் - தம்முடைய கால்களினால், நின்றிட - கீழேநிற்க,(அதுநோக்கி),
பின்னர்உம் - மறுபடியும், பொருபாகர் - போரில் வல்லதேர்ப்பாகர், தந்த -
கொணர்ந்த, பிறங்கு தேர் மிசையார் - விளங்குகிற தேரின்மேல் ஏறினவர்களாய்,-
முன்னர்-