யசோதையின்மகனாய் வளர்ந்தருளிய கண்ணனது தன்மை கூறப்பட்டதனால், சூரியபுத்திரனாய்க் குந்திவயிற்றிலுதித்துத் தேர்ப்பாகன்மனையில் ராதைமகனாய்க் வளர்ந்த கன்னனது போரைக் கூறுகின்ற இப்பருவத்துக்கு இக்காப்புச்செய்யுள் மிகப்பொருந்துமாறு உய்த்துணர்க. பி - ம்: ஏதிலனாகியும் இதுமுதற் பதினொருகவிகள் - பெரும்பாலும் முதல்நான்குசீர் விளச்சீர்களும், ஐந்துஆறாஞ் சீர்கள் மாச்சீர்களும், ஈற்றுச் சீரொன்று மாங்காய்ச்சீருமாகிய கழிநெடிலடிநான்கு கொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள். (1) 2.- துரியோதனன் கர்ணனைச் சேனாபதியாக்கிப் போர்க்களஞ் சேர்தல். கங்கைமகன்சிலையின்குருவென்பவர்காதிமலைந்தேகையற்றார் இங்கினியென்னுயிர்நண்பனையல்லதுவெல்லவல்லோரிலரென்றே யங்கர்பிரானைவரூதினியின்பதியாகென்றருள்செய்தவனோடும் வெங்களமுற்றனனஞ்சுமிழுங்கொடிவேகநாவிறலோனே. |
(இ-ள்.) நஞ்சு உமிழும் - விஷத்தைக் கக்குகின்ற, வேகம் - சில மிகுதியுள்ள,நாகம் - சர்ப்பத்தின் வடிவத்தை யெழுதிய, கொடி - துவசத்தையுடைய, விறலோன்- வலிமையையுடையவனான துரியோதனன்,- 'கங்கை மகன் - கங்கையின்புத்திரனாகிய பீஷ்மனும், சிலையின் குரு - வில்லாசிரியனாகிய துரோணனும்,என்பவர் - என்று சிறப்பித்துச்சொல்லப்படுகின்ற வீரர்கள், காதி மலைந்துஏ -(தம்மால் ஆனமட்டும் பகைவரைக்) கொன்று போர்செய்தே, கையற்றார் -செயலொழிந்து அழிந்தனர்; இனி - இனிமேல், இங்கு -இப்போரில், வெல்லவல்லோர் - (பகைவரைச்) சயிக்க வல்லவர், என் உயிர் நண்பனை அல்லது -எனது உயிரோடொத்த சிநேகிதனாகிய கர்ணனையேயல்லாமல், இலர் - (வேறுஎவரும்) இல்லை,' என்றுஏ - என்று துணிந்தே,- அங்கர் பிரானை - அங்கதேசத்தார்க்கு அரசனாகிய கர்ணனை, வரூதினியின் பதி ஆக என்று - 'சேனைக்குத் தலைவனாகுக'' என்று, அருள் செய்து - அருளோடு சொல்லி,- அவனோடு உம் - அக்கர்ணனுடனே,- வெம் களம் - கொடிய போர்க்களத்தை உற்றனன் - அடைந்தான் ; (எ -று.) பீஷ்மதுரோணாதியர் தொலைந்தபின்பும் போர்செய்யுந்துணிவு சிறிதும் ஒழிந்தில னாதலால், 'விறலோன்' என்றார். (2) 3.- பாண்டவர் போர்க்களஞ் சேர்தல். சொற்றவறாததுரோணனைமௌலிதுணித்ததிட்டத்துய்மன்னுங் கொற்றவரைவருமற்றுளபூபரும்வைனதேயக்கொடியோனும் உற்றெழுகசரததுரகபதாதிகளானசேனையுடனேசென் றிற்றையருஞ்சமம்வெல்லுதலெங்கடனென்றுதுன்றியெதிர்கொண்டார் |
(இ-ள்.) சொல் தவறாத - வார்த்தைதப்பாத, துரோணனை - துரோணா சார்யனை,மௌலி துணித்த - தலையறுத்திட்ட, திட்டத் |