வென்றிவேன்முருகற்குநேர்புகல்விடதரன்றனையுங் கொன்றுவாசவன்மைந்தன்மாமுனைகுறுகவெகினனே. |
(இ-ள்.) (கர்ணன்),- நின்ற -(முதுகுகாட்டி) நின்ற, மா நகுலற்கு - குதிரைதொழிலில்வல்ல நகுலனுக்கு, வல் துணை ஆகி- வலிய உதவியாகி, நின்றிடலால் - நின்றதனால்,- மன்றல் மாலை - வாசனையையுடைய போர் மாலையைத்தரித்த, விசாலம் மார்பினன் - அகன்ற மார்பினையுடையவனான, மகதபூபனைஉம் - மகததேசத்தரசனையும்,- வென்றி வேல் முருகற்கு - வெற்றியைத்தருகிற வேலாயுதத்தையுடைய சுப்பிரமணியக்கடவுளுக்கு, நேர்புகல் - (பல பராக்கிரமங்களில்) ஒப்பாகச் சொல்லப்படுகின்ற, விடதரன்தனைஉம் - விடதரனென்பவனையும், கொன்று-,- வாசவன் மைந்தன்- இந்திரகுமாரனான அருச்சுனனது, மா முனை - சிறந்த போர்செய்யுமிடத்திற்கு, குறுக - சமீபமாக, ஏகினன் - சென்றான்; (எ -று.) பி -ம்: புகழ். (35) 36.- கர்ணனும் அருச்சுனனும் போர்செய்தல். மடங்கன்மேலெழுமதமுமேலிடவருபணைக்கரிபோல் விடங்கொள்சாயகவில்லிசென்றுதன்விற்குனித்தடுபோர் தொடங்குமுன்பலர்வில்லெடுத்தவர்சொல்லும்வில்லியவன் றிடங்கொண்மார்பினிலம்பிரண்டுதெரிந்துவிட்டனனே. |
(இ-ள்.) விடம் கொள்- (தவறாது பகையழித்தலில்) விஷம் போன்ற, சாயகம் -அம்புகளையெய்கின்ற, வில்லி - (காலப்ருஷ்டம் என்னும்) வில்லையுடையவனானகர்ணன்,- மடங்கல்மேல்- சிங்கத்தின்மேல், எழு மதம்உம் மேலிட -ஏழுவகைமதமும் மிக, வரு - (போர்க்கு) வருகிற, பணை கரிபோல் - பருத்தயானைபோல, சென்று - (அருச்சுனனுக்கு எதிரிற்) போய், தன் வில் குனித்து -தனது வில்லை வளைத்து, அடு போர் - கொல்லுகின்றபோரை, தொடங்குமுன் -தொடங்குமுன்னமே,- வில் எடுத்தவர் பலர் சொல்லும் வில்லி - விற்பிடித்தவீரரெல்லாராலும் (சிறப்பித்துச்) சொல்லப்படுகின்ற (காண்டீவமென்னும்) வில்லையுடையவனான அருச்சுனன்,- அவன்- அக்கர்ணனது, திடம் கொள்மார்பினில் - வலிமையைக்கொண்ட மார்பில், அம்பு இரண்டு - இரண்டு பாணங்களை, தெரிந்து விட்டனன் - தேர்ந்தெடுத்து எய்தான்; (எ - று.) மடங்கல் மேல் வரு கரி - இல்பொருளுவமம், இவ்வுவமையால், அருச்சுனனது உயர்வும், கர்ணனது இழிவும் விளங்கும். ஒரு பெரிய யானை மதம்மிகுதலால் தன் நிலையையுஞ் சிங்கத்தின் நிலையையும் மறந்து சிங்கத்துடன் போர்செய்தற்கு வந்தாற்போலும் இது என்க. விடங்கொள் சாயகம் - நஞ்சுதீற்றிய அம்புமாம் (36) 37.- கர்ணன் கிருஷ்ணார்ச்சுனரை வெல்லமாட்டாமல் விலகுதல். அருணவெங்கதிராயிரத்தவனன்பினாலுதவுங் கருணனுஞ்சிலபகழியோரிருகண்ணர்மார்பில்விடா |
|